திங்கள், 31 ஜூலை, 2017

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே 👑

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே  👑

மோடி அரசின்  சமீபத்திய பரிசுகளான
வரி ஏற்றம், சிலிண்டர் மாணியம் ரத்து, ரேஷன் பொருட்களுக்கு கடுமையான கெடுபிடி இதை அனைத்தையும் தாங்கி கொண்டு  வழக்கம் போல வலித்தாலும் சிரித்து கொண்டே தன் அடுத்த வேலைக்கு தயாராவது
"மிடில்க்ளாஸ் மாதவன்களே"..

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டத்தை கடைபிடிப்பார்களே தவிர ஒரு போதும் ரத்து செய்ய மாட்டார்கள். இன்றைக்கு உள்ள பெரும்பாலான திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட  பெருமை அவர்களுக்கே..

சிந்தாந்த ரீதியில் வேண்டுமானால் இந்த இரு கட்சிகளுக்கும் வேறுபாடு உண்டே தவிர பொருளாதார கொள்கையில் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே !!!

இந்த பதிவை படிக்கும் என் நண்பர்களில் சிலர் நீ தான "மோடி மோடினு "கூவின என்று முணுமுணுப்பது கேட்கிறது..

ஆட்சி,அதிகாரத்திற்கு வரும் எவராவது மக்களுக்கு நல்ல திட்டம் திட்டி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மாட்டார்களா ?? என ஏங்கி கொண்டு கடைசியில் ஏமாற்றத்தை பரிசாக வாங்கி கொள்ளும் நாட்டின் குடிமகன்களின் நானும் ஒருவன்..

ஏழ்மையை ஒழிப்பேன்,
ஏழ்மையை ஒழிப்பேன்..
என உரக்க கூறியது
ஏழைகளை ஒழித்து விட்டால் ஏழ்மை ஒழிந்து விடும் என்ற உயர்ந்த சிந்தனை போலும்...

நாட்டை ஆளும் அரசன் கை விட்டதால் நாட்டில் உள்ள நாம் அனைவரும் மன்னர்களே !!! இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் கொள்கை

எது நம்மிடம் தேவைக்கு அதிகமாக உள்ளதோ அது பணமாக இருக்கட்டும்,அறிவாக இருக்கட்டும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வுற்று இருப்பதே !!!

இந்த கொள்கைக்கு சட்டமும் கிடையாது பின்பற்ற கூறி சட்டத்தின் காவலர்களும் கிடையாது நம் மனதும்,அறிவும் தான் நம்முள் உள்ள காவலர்கள் அவர்களை நம்மை தவிர யாராலும் ஏமாற்ற முடியாது.
ஏமாற்றுவதர்களுக்கு நாம்
அரசியல்(வியா)வாதிகள் அல்ல .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக