செவ்வாய், 28 ஜூலை, 2020

சாப்பிட போலாம் வாங்க

சாப்பிட போலாம் வாங்க

இந்த ஹோட்டலை பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கூறியது நினைவில் உள்ளது. இந்த ஹோட்டலை பற்றி FB இல் வீடியோவெல்லாம் வந்துள்ளது. சரி,ஒரு நாள் சென்று விடுவோம் என நினைத்திருந்தேன்.

அதற்கு ஏற்றாற் போல் காலம் அமைந்தது. சென்னையில் பெரும்பாலான ஹோட்டல்களில் இரவு நேரங்களில் சாப்பாடு (meals) கிடைப்பது அரிது.இங்கு மதியம்,இரவு இரண்டு நேரங்களிலும் சாப்பாடு தான். எனக்கு இரவு நேரத்தில் சாப்பாடு சாப்பிட மிகவும் பிடிக்கும்.

Google map உதவியுடன் அந்த இடத்திற்கும் சென்றாயிற்று,
நன்றாக பசித்தது. ஹோட்டலினுள் நுழைந்தேன். சார் 7.30 PM மணிக்கு தான் ஆரம்பமாகும் 10 நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள் சூடான சாப்பாடு ரெடியாகிவிடும் என்றார் கனிவாக. உங்களோட இந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு என்று மனதிற்குள் கூறிகொண்டேன்.

ஹோட்டலினுள் சிறு பூஜையெல்லாம் நடந்திருந்தது,சாம்பிராணி மணம் கமழ சரியான நேரத்தில் உள்ளே நுழைந்தோம். Limited meals 70₹ நெய் வேண்டும் என்றால் மேலும் 5₹ என்று அறிவிப்பு பலகை கூறியது. நெய் இல்லாமல் தான் நம்மால் சாப்பிட முடியாதே என்று இரண்டு டோக்கன்களை பெற்று கொண்டேன்.

வரிசையாக table இருந்தது ஒரு வரிசையில் தான் உட்கார வேண்டுமாம் (எங்கள் ஊர் பஜனை மடம் ஞாபகம்  தான் வந்தது). அடுத்த ஐந்து நிமிடத்தில் ஸ்லீப்பர் செல்கள்  போல் எங்கிருந்து வந்தார்கள் என்றே தெரியவில்லை,இரண்டு வரிசை நிரம்பி ஆயிற்று.

சாதம்,ஒரு பொறியல்,ஒரு கூட்டு,
பருப்பு பொடி,நெய் அதை வைத்து முதல் ரவுண்டு, பிறகு சாம்பார் முறையே
ரசம்,மோர் என்று மூன்று ரவுண்டு அப்பளம், ஊறுகாய் சகிதம் ஒரு full கட்டு. மனதும்,வயிறும் முழு திருப்தி.
சாப்பாடு பிரியர்களுக்கு ஏற்ற ஒரு  அட்சய பாத்திரம்.

உபரி தகவல் எப்போதும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு இந்த சாப்பாடு வித்யாசமாகவும்,நன்றாகவும் இருக்கும்.என்றைக்காவது ஹோட்டலில் சாப்பிடனும் என்று நினைப்பவர்கள் தவிர்த்து கொள்ளவும்,
(வீட்டு சாப்பாடு போல் உள்ளதால்)

நன்றி மீண்டும் வருக 🙏🏻🙏🏻🙏🏻 என்றது
“காசி விநாயகா மெஸ்”

சுவையுடன்
ராஜா.க

ஞாயிறு, 12 ஜூலை, 2020

கள்ளிகாட்டு கவிஞனே !!!

முதல் காதலில் ஜெயித்தவனுக்கு அது தான் கடைசி “வெற்றி”
முதல் காதலில் தோற்றவனுக்கு அது
தான் கடைசி “தோல்வி”

தொட நினைத்தும் தொடாமல் பேசுவது காதலின் ‘அழகு’
தொட நினைக்காமலே தொட்டு
பேசுவது நட்பின் ‘அழகு’ !!!

கவிதை எழுதுபவர்கள் அனைவரும் காதலிக்காமல் இருக்கலாம்.
ஆனால்
காதலிக்கும் அனைவரும் கண்டிப்பாக கவிதை எழுதுவார்கள் !!!

கள்ளிகாட்டு கவிஞனே !!!

நட்பு,காதல்,பாசம்,வீரம்,விஞ்ஞானம்தேசப்பற்று என அனைத்தையும் உங்கள் ‘வைர’வரிகளால் அழகாகவும்,அழுத்தமாகவும் பதித்துள்ளீர்கள் இந்த தமிழ் சமூகத்திற்கு.

தமிழ் தாய் இன்று போல் என்றும் உங்களுக்கு பூரண உடல் நலத்தை தருவாளாக..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவிஞர் ‘வைர’முத்து

இவண்

புதன், 8 ஜூலை, 2020

தமிழ் சினிமாவின் துரோணர்

ஒரு உன்னதமான "குரு" (win) வின் பணி தன்னோடு தன் திறமைகள் நின்று விடாமல் தன்னை போன்று  சிறந்த மாணவர்களை உருவாக்குவதில் தான் இருக்கிறது.

 அது போன்ற சிறந்த பணியை செய்தவர் திரு.கே.பாலசந்தர் அவரை திரைத்துறையின் துரோனாச்சாரியார் என்று கூறினாலும் அது மிகையல்ல.

நடிகர்களில் நாகேஸ்,ரஜினி,கமல்,விவேக்,
லாரன்ஸ்,இயக்குனர்களில் வசந்த்,சரண்,செல்வராகவன்,
சமுத்தரகனி இந்த பட்டியல் நீளும்....

யாரும் எடுக்க தயங்கும் கதை களத்தை தேர்ந்தெடுத்து சமூகத்தில் அதை விவாத களமாக்கி அதில் வெற்றி எனும் சிகரத்தை அடைந்த இயக்குனர் சிகரம் KB  பிறந்த தினம் இன்று ....

பழைய குற்றாலம்

பழைய குற்றாலம் வரலாறு

வருடா வருடம் குற்றாலம் செல்வது வழக்கம்.இந்த முறை சனிக்கிழமை சென்றதால் கூட்டம் கொஞ்சம் அதிகம் மேலும் அருவிகளில் நீர்வரத்தும் கொஞ்சம் கம்மி, ஆதலால் பழைய குற்றாலத்தில்லேயே  வரிசையில் நிப்பாட்டி தான் குளிக்க அனுமதிக்க பட்டோம்.

எல்லாம் நன்மைக்கே என்பது போல் வரிசையில் நடந்து கொண்டே சென்றோம், அதில் ஒரு கல்வெட்டு பொறிக்க பட்டிருந்தது. படிக்க ஆரம்பித்தேன் இந்த அருவி 1960ல் தமிழக முதலமைச்சர் திரு.காமராஜர் அவர்களால் திறக்க பட்டதென்று..

சற்று வியந்து தான் போனேன்,பிறகு பாறைகளை அழகாக வெட்டி அருவியை உருவாக்கி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். இன்று அந்த அருவியால் அரசுக்கு டோல் கட்டணம், நிறைய கடைகள் அதை நம்பும் வியாபாரிகள் அவர்களது குடும்பம் என்று அனைவரையும் இன்று வரை வாழவைக்கிறார் கர்ம வீரர் திரு. காமராஜ்.