வெள்ளி, 26 மே, 2017

மாட்டுகறியும் மனிதாபிமானமும்...

மாட்டுகறியும் மனிதாபிமானமும்...

நான் மாட்டு கறி சாப்பிட மாட்டேன் அதனால் மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் என்று நினைப்பவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை வாசிக்க வேண்டாம்.இது உங்களுக்கானதல்ல.

இந்தியாவின் அழகே பன்முக தன்மை கொண்ட மக்களும் அவர் தம் கலாச்சாரமும்,மொழிகளும் தான். இதை பேணி காத்து ஜன நாயகத்தை வளர செய்வது ஒரு ரகம்.

இவைகளை வைத்தே மக்களிக்கிடேயே பிரிவினையை ஏற்படுத்தி ஜன நாயகத்தை கொலை செய்ய துடிப்பது இரண்டாம் ரகம்.

நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆகட்டும் இப்பொழுது ஆளுகின்ற பிஜேபி ஆகட்டும் தன் அதிகார பசிக்கேற்ப விரும்பிய உணவை உட்கொள்ளும்.

மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பான மாடு,ஒட்டகம் இவைகளை இறைச்சிக்காக விற்க கூடாது என்ற சட்டத்தால் பாதிக்கபடுவது பெரும்பான்மை மக்களா ? சிறுபான்மை மக்களா ?

ஒட்டகத்தின் மீது காட்டும் கரிசனத்தை புரிந்து கொண்டாலே இதில் உள்ள அரசியல் என்ன வென்று பளிச்சென்று பல்லை காட்டிவிடும்.

மக்களின் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மூலதனமாக்கி அதில் குட்டையை குழப்பி  மற்றொரு பிரிவினைரை ஒன்றாக்கி வாக்கு வங்கி அரசியலை பல படுத்துவது தான் ஒரே குறிகோள் இன்றி உயிர்களின் மீது கரிசனம் எல்லாம் நகைச்சுவை பேச்சு தான்.

சரி இந்த சவாலை எதிர்கொள்வது எப்படி?

நம் குறைகளை எப்படி கோயில்களிலும்,தேவாலயங்களிலும்,தர்க்காக்களிலும் முறையிடுவோமோ அது போன்று ஜனநாயகத்தில் ஏற்படும்  குறைபாடுகளை முறையிட  மக்கள் ஏற வேண்டிய கோயில் நீதிமன்றமே.

நம் நாட்டில் அரசுக்கு எதிராகவும் நல்லது கெட்டதை எடுத்துரைக்கவும் நீதி துறையும்,நீதி அரசர்களும் இன்னமும் இருக்க தான் செய்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு விடுத்த சவாலை ஜனநாயக ரீதியில் சென்று வென்று காட்டுவோம்.

இப்படிக்கு
இந்தியன்.

சனி, 6 மே, 2017

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

மகிழ்மதியும் அஸ்தினாபுரமும்...

அஸ்தினபுர நகரத்தின் கட்டமைப்பு, மன்னர்கள்,நாட்டின் இராணுவ படை,மக்கள் இவைகளை படித்து இருக்கிறேன். அதை  கண்ணுக்கு விருந்தாக்கிய "கலை இயக்குனர்" சாபு சரீல் க்கு முதல் சபாஷ்.

கதை: பங்காளி சண்டை அரியனையில் அமர்வதற்கு, (மகாபாரதம்)தான்.
அந்த ஒரு வரி கதையை தனக்குரிய தனித்துவத்துடன்; திரைக்கதையை வேகமாகவும்,விவேகமாகவும் காட்சிகளை அமைத்து; ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தன் திரைக்கதையால் வலிமை சேர்த்து,  ரசிகனை இறுதி வரை இருக்கையில் அமர வைத்த இயக்குனர்.
"இராஜ மெளலி" யே மகிழ்மதியின் சக்கரவர்த்தி.

கதா நாயகனின் வெற்றி தன்னை விட பலமுள்ள, அழுத்தமான தனக்கு நேரெதிரான எண்ணம் கொண்ட (வில்லனை) எதிரியை வெற்றி கொள்வதே; அப்படி ஒரு வாய்ப்பை நாயகனுக்கு நல்கிய
 "பல்வாள் தேவன்" ராணா வும் நாயகனே.(துரியோதனின் குணாதிசியம்).

அரசன் என்பவன் இப்படி தான் இருந்திருப்பான் என்பதற்கு சிறந்த எடுத்துகாட்டாக தன்னை உடலளிவிலும்,மனதளவிலும் வடிவமைத்து  கொண்ட கதையின் நாயகன் பிரபாஸ். (அர்ச்சுனனை நினைவு கூறுகிறான்)

 "ராஜ மாதா"சிவகாமி தேவி,
"இளவரசி" தேவைசேனை
நெடு நாட்களுக்கு பிறகு சினிமாவில்  ஆண்களுக்கு நிகராக அல்ல,
அதற்கும் மேலான கதாபாத்திரத்தில்
"இரட்டை குழல்" துப்பாக்கியாக
வெடிக்கின்றனர்.

கட்டப்பா கதாபாத்திரம் பிதாமகர் பீஷ்மரைய நினைவுபடுத்துகிறது. அரசின் அடிமை. மனிதர் கலக்கியிருக்கிறார் தன் வழக்கமான நக்கல் பேச்சில்.

வீரம் கலந்த விவேகமான போர் கள காட்சிகள்,கார்க்கியின் வசனம்,கீரவாணியின் பிண்ணனி இசை படத்திற்கு மேலும் பலம் சேர்க்கிறது.

பாடல்கள் மனதில் நிற்கவில்லை
தமிழ் கவிஞர்களுக்கும், தமிழ் வரிகளுக்கும் பஞ்சமா என்ன பாடல்களுக்கு ??கட்டப்பா கதாபாத்திரத்தை "நாய்" என்ற வார்த்தையை (பல முறை )தவிர்த்திருக்கலாம்.

திரைப்படம் முடிந்து எழுந்து செல்கையில் ரசிகனையும்
 "ஜெய் மகிழ்மதி" என கோஷம் போட வைத்துவிட்டான்.

இந்த "பாகுபலி ..."

புதன், 3 மே, 2017

இந்தியாவும் சகிப்புதன்மையும்

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் காரில் பயணிக்க நேர்ந்தது

சுங்க சாவடி நெருங்குகையில் ஒவ்வொரு வண்டியாக வரிசையாக நுழைவு கட்டணம் செலுத்தி கொண்டிருக்கையில் நண்பரின் வண்டியை தீடீரென்று மற்றொறு வண்டி முந்தி செல்ல முயன்றது.

நண்பருக்கு சிறிது கோபம் வந்தது; வரிசையாக சென்று கொண்டிருக்கையில் ஏன் இப்படி முந்த நினைக்கிறாய் என்று

சிறிய வார்த்தை கல கலபிற்கு பின் எங்கள் பின்னே தான் அந்த வண்டியும் வந்தது; முந்த நினைத்த நபருக்கு 25-30 வயது இருக்கும்

மிஞ்சி போனால் 2 முதல் 3 நிமிடம் தாமதமாகும் அதற்கு கூட பொறுமையில்லாமல் வேகமாக பயணிக்க நினைக்கிறோம்

இப்பொழுதெல்லாம் பொறுமையின்மை, சகிப்பு தன்மை இதெல்லாம் குறைந்து கொண்டே போகிறது. இது போன்ற சம்பவம் நடிகர் அமீர்கானுக்கு நடந்து இருக்கலாம் அதனால் அவர்
 "சகிப்பு தன்மை" வார்த்தையை உபயோகத்திருக்கலாம்

இந்த விஷயத்தை அவர் ஏதோ "மோடி" அரசை தான் குறை கூறுகிறார் என்று மீடியாக்கள் கூக்குரலிட , வழக்கம் போல "தேச பக்தாஸ் "பால் போல பொங்கியேவிட்டார்கள்

இக்காலத்தில் யார் இந்தியாவை ஆண்டாலும், இது உண்மை தான் மக்களின் "சகிப்புதன்மை" குறைந்து விட்டது

இப்படிக்கு..

பொதுஜனம்