சனி, 29 ஏப்ரல், 2023

பொன்னியின் செல்வன் - Part 2 என் பார்வையில்

 பொதுவாக எந்த படத்துக்கு தியேட்டர் க்கு போய் சென்றாலும் எதிர்பார்ப்பு இல்லாமல் தான் செல்வேன். சென்ற வாரம் பார்த்த தெய்வ மச்சான் வரை இது தொடர்கிறது. ஆதலால் ஏமாற்றம் இருக்காது , படம் பார்த்துபிடித்து விட்டால் மகிழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் இப்படி எடுத்திருந்தால் நல்லா இருக்குமோ என்று எனக்குள்ளோ , நண்பர்களிடத்திலோ பேசி கொள்வேன்.

 இந்த வாரம் சென்று பார்த்த படம் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் part 2 #PS2 இந்த படத்தின் முதல் பாகம் பிடித்திருந்தது.காரணம் , அமரர் கல்கியின் எழுத்தில் இருந்த நாவலை நான் படிக்க வில்லை. 

காரணம் அவரின் பார்த்திபன் கனவு.படித்திருக்கிறேன் ,

நாவல் தொடக்கும் முதல் அவரின் எழுத்துக்கள் அவரின் கதாபாத்திரத்தோடு ஒன்ற செய்து  என்னை ஒரு கற்பனை உலகத்துக்கு அழைத்து செல்லும். பார்த்திபன் கனவு நாவல் அப்படி ஓரு அனுபவத்தை தந்தது.அந்த நாவலை  நான் படமாக பார்த்த போது (ஜெமினி கணேசன் தான் கதாநாயகன்) சற்று ஏமாற்றம்.

காரணம் என் கற்பனையில் விரிந்திருந்த காட்சிகளும் நான் திரையில் பார்த்த காட்சிகளும் ஏனோ ஒன்ற வில்லை. நாவலில் படித்த பார்த்திபன் வீரமும் திரையில் அமரர் ஜெமினியின் வீர செயல்கள் என்னை கவரவில்லை. அதனால் தான் என்னவோ பொன்னியின் செல்வன் படிக்கவில்லை.

ஓரு விதத்தில் அதுவும் 

நல்லதாக அமைந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் படமாக பார்க்கும் போது மனம் கவர்ந்த இருவர் ஆதித்த கரிகாலன் (விக்ரமும்) , குந்தவை யும் (த்ரிஷா). விக்ரம் என்னும் நடிகனுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நன்றாக நடிக்கும் கதாப்பாத்திரம்.அந்த கண்களில் வீரம் ,கோபம்,ஏமாற்றம் ,கண்ணீர் , பாசம் , காதல் என்று அனைத்தும் இருக்கும். 

இரண்டாவது  த்ரிஷா வின் அரசியல் முடிச்சுகளும் , இளவரசி க்கு உண்டான நடை , உடை பாவனைகளும் முதல் பாகத்தில் ரசிக்க செய்தது. இத்தனை கதாபாத்திரத்தை வைத்து தொய்வில்லாத திரைக்கதை யால் முதல் பாகம் ரசிக்கும் படி அமைந்தது.

இரண்டாவது பாகம் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ ஏமாற்றம் ஏதும் இல்லை. மணிரத்னம் துக்கு கை வந்த கலை காதல் காட்சிகள் தன் திரைப்படத்தில் பதிவு செய்வது. அவரின் முதல் படம் முதல் OK கண்மணி , காற்று வெளியிடை வரை இது தொடர்ந்தது.இந்த படமும் விதிவிலக்கல்ல.

இரண்டாம் பாகத்தில் விக்ரம் - ஐஸ்வர்யா இருவர் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட்டுள்ளது. அவர்களுக்கிடையே மலரும் காதல் , பிரிவு , கண்டிப்பாக கண்ணீர் க்கு guarantee. ஒருவரை மனதார காதலித்து அவர்களோடு வாழ முடியாதவர்கள் அவர்கள் மடியில் தான் இறப்பார்களாம். இரு காதல்கள்.

இதற்கு உதாரணமாக இபபடத்தில் காட்சி படுத்த பட்டுள்ளது. விக்ரம் ஐஸ்வர்யா மடியிலும் , 

ஐஸ்வர்யா வின் தாய் ஊமை ராணி அவரின் காதலன் மடியில் தன் உயிரை விடுகிறார்கள். தான் ஒரு கருவி என்பதை நந்தினி உணர்வது அந்த முடிச்சு அவிழ்வது இயக்குனர் சாமார்த்யம். வந்திய தேவன் - த்ரிஷா காதல் காட்சி

ரொமான்ஸ் overloaded ❤️.

 வந்தியதேவனுக்கு இரண்டாம் பாகத்தில் பெரிய வேலை இல்லை. த்ரிஷா விற்கும் அப்படியே ஆனால் அழகு புதுமையாக வலம் வருகிறார். பொன்னியின் செல்வன் ஜெயம் ரவி சிறப்பாக செய்துள்ளார்.அந்த யானை காட்சி எதிர்பாரத heroism செம..பாண்டிய மண்ணில் பிறந்து வளர்ந்ததால் என்னவோ

 பாண்டியர்களின் தோல்வியை ஏற்று கொள்ள முடியவில்லை.

 இன்னும் கொஞ்சம் போராடி இருக்கலாம் என்று தோன வைத்துவிட்டார் மணிரத்னம் 😀 ரகுமான் பின்னணி இசை இன்னும் கொஞ்சம் பலமாக சேர்த்திருக்கலாம். விக்ரம்-ஜெயம்ரவி-த்ரிஷா மூவரும் பேசி கொள்ளும் காட்சி அழகிய ஹைகூ ❤️❤️ குடும்பதுடன் கண்டுகளிக்கலாம்.

#ps2 #ps2review #ponnienselvan #manirathnam #rahman #aathithakarikalan #aiwarya #thrisha 

வெள்ளி, 21 ஏப்ரல், 2023

DeivaMachan தெய்வ மச்சான்

 ஒரு சிம்பிள் ஸ்டோரி , ஆர்ப்பாட்டம் இல்லாத கதாநாயகன்(விமல்) அவன் தங்கைக்கு எப்படி கல்யாணம் செய்து வைக்கிறான் ? என்பதை எவ்வளவு க்கு எவ்வளவு சிரிப்புடன் சொல்ல முடியுமோ  சொல்ல முயற்சி செய்து , வெற்றி யும் பெற்றுள்ளது #DeivaMachan படக்குழு.

நடிகர் பால சரவணன் படத்துக்கு மிக பெரிய பலம். படம் முழுவதும் அவர் வரும் இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறார். 

சினிமாவில் செண்டிமெண்ட் மிக முக்கியமானது. விமல் - பால சரவணன் #விலங்கு  வெப் சீரிஸ் வெற்றி க்கு பிறகு மீண்டும் கை கூடியுள்ளது. 

கார்த்திக் -கவுண்டமணி , 

பார்த்திபன்-கவுண்டமனி மாதிரி. விமல்- @Bala_actor காம்போ நல்ல செட் ஆகியுள்ளது. 

இந்த லாஜிக் எல்லாம் பார்க்காமல் , காலை 4 மணிக்கு ஷோ க்கு எல்லாம் செல்லாமல் , வார இறுதி நாட்களில் ஒரு தியேட்டர் க்கு சென்று கவலை எல்லாம் மறந்து சிரித்து விட்டு வரலாம். சிரிக்க வைக்கிறான் இந்த தெய்வ மச்சான். 

 #DeivaMachan