செவ்வாய், 20 மார்ச், 2018

நான் சந்தித்த ரத யாத்திரை

நான் சந்தித்த ரத யாத்திரை

கேரளாவில் ஐயப்பனை தரிசித்து விட்டு  அங்கிருந்து ஊருக்கு வருகையில் ராணி,கோணி ஊர்கள் வழியாக தமிழகம் வருவது வழக்கம்.

வழக்கமாக  December 26ல் சபரிமலையில் திரும்புவது வழக்கம்; இந்த முறை 25ம் தேதியே திரும்பிகொண்டிருந்தோம்.

அன்று ஏசு நாதரின் பிறந்த நாள் என்பதால் நாங்கள் வரும் வழியில் யாத்திரை நடக்கும் போலும்; கார்களில் இரு பக்கமும் சாலையை அடைத்து 1கிலோ மீட்டர் தொலைவிற்கு கார்கள் ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.

சரி இந்த வழியாக செல்ல முடியாது என்பதை அறிந்து மாற்று வழிக்கு தயாராகி ; எங்கள் காரை மாற்று திசையில் திருப்ப முயன்ற போது நன்கு படித்த , நாகரீகமான இளைஞன் இந்த வழியாக செல்ல கூடாது என்று நிறுத்தினார்.நாம் பேசுவதை காது கொடுத்து கூட கேட்க மனமில்லை; சரி பேசி பயனில்லை என்பதை உணர்ந்தோம்.

எங்களால் நேராக செல்ல முடியாது என்பதும் அவருக்கு தெரியும், சரி மாற்று பாதை வழியாக திரும்பலாம் என்று நினைத்தால் இந்த ஊர்வலம் கடக்கும் வரை நீங்கள் திரும்ப கூடாது என்ற அதிகார குரல்;

சரி காத்திருந்து பொறுமையாக திரும்பினோம்; இது போன்ற ம(ன) வெறி பிடித்தவர்கள் அனைத்து இடங்களிலும் உள்ளனர், இவர்களை கடந்து செல்வது தான் நம்
யாத்திரையின் வெற்றி எங்கள் ரதத்தை செலுத்தினோம்.

பயணிப்போம்
ராஜா.க

வெள்ளி, 16 மார்ச், 2018

சபாஷ் சந்திரபாபு சார் 👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻

தன் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து என்று கூறி மாநிலத்தை பிரித்த பின்பு வாக்குறுதியை நிறைவேற்றாதது மத்திய அரசின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது ?

விளைவு

நடுவன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானமே இல்லாமல் ஐந்தாண்டு நடத்தியது என்ற வரலாற்று சாதனையை முறியடித்த பெருமை
திரு. ஜெகனையும் , திரு. நாயுடுவை யும் சாரும்.

மோடி அரசாங்கத்திற்கு எதிரான இந்த தீர்மானத்தால் ஆட்சி கவிழாது என்பது அனைவரும் அறிந்ததே.

பிறகு ஏன் இந்த தீர்மானம் ?

தன் மாநில மக்களின் ஏமாற்றத்தையும் , எதிர்ப்பையும் ஜனநாயக ரீதியில் வெளிகொணர்ந்துள்ளார்கள் இவ்விருவர்கள்.

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழகமும் நடுவண் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்ற இந்நேரத்தை தமிழகமும் சரியாக பயன்படுத்தி கொண்டு அரசுக்கு எதிராக தீர்மானத்தில் வாக்களித்து தன் எதிர்ப்பை காட்டலாம்.தமிழக மக்களின் எதிர்பாகவும் அமைந்திருக்கும்.

மாறாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவளிக்கும் என பேசிய  கே.சி.பழனிசாமி யின் நீக்கம்
எதை காட்டுகிறது ?

அடிமைதனத்தின் உச்சம் என்பதை தவிர வேறு என்ன கூற ?

சபாஷ் நாயுடு , ஜெகன்
உங்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉
உங்களால் ஜன நாயகம் தழைக்கட்டும்.

நன்றியுடன்
தமிழன் ( ராஜா.க )