ஞாயிறு, 28 நவம்பர், 2021

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் விமர்சனம்

சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் !!!

இந்த படம் பார்த்தற்கு முக்கிய காரணம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் சிகரம் திரு.பாலசந்தர் சீடர்   இயக்குனர் வசந்த் அவர்களின்  படைப்பு.

மூன்று பெண்களை பற்றிய கதை,மூன்று பெண்களும் வெல்வேறு குடும்ப சூழ்நிலை, மூன்று வெல்வேறு காலகட்டங்களில், இவை எல்லாம் வெவ்வேறு ஆனால் அப்பெண்களுக்கு  நடப்பது என்னவோ ஒன்று தான்.

1980 காலகட்டத்தில்  நடப்பது போல ஒரு கதை,

1990 காலக்கட்டத்தில் நடப்பது போல இரண்டாம் கதை,

2000  காலகட்டத்தில் நடப்பது போல மூன்றாம் கதை.

காலங்கள் மாறலாம், அறிவியல் மாறலாம், 

ஆனால் பெண்களை வைத்து அமைக்கப்பட்ட இந்த சமூக கட்டமைப்பு மாற வில்லை என்பதை திரைக்கதை யால் பதிய வைக்கிறார் இயக்குனர்.

இப்படி லாம் அந்த காலத்திலே  நடந்ததா ? இப்படிலாம் இன்னமுமா  நடக்குது ? அட போங்க சார் என்று கூறுபவர்கள் உங்கள் நட்பு வட்டத்தை தாண்டி மிக பெரிய உலகம் ஓன்று உள்ளது என்பதை அறிந்து கொள்க.

மூன்று பெண்களிடத்தில் உள்ள ஒரே ஒற்றுமை பெண்கள் பலமானவர்கள், உடலிலும், உள்ளத்திலும். அதனால் அந்த மூன்று பெண்கள் எதற்கும் துவளாமல் வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்வது ஹைலைட்..

தியேட்டரில் எல்லாம் இது போன்ற படங்களை பார்க்க மாட்டார்கள் என்பதற்காக தான் OTT (sony liv)யில் வெளியிடுகிறார்கள். Technology கூட தன் பங்கிற்கு பெண்களுக்கு உதவுகிறது..

படம் பார்ப்பதற்கு பொறுமை மிக அவசியம்.. கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் சற்று ஓய்வெடுத்து கொள்ளுங்கள் உங்களுக்கான படம் அல்ல.

இவண் 

ராஜா.க

#sivaranjiyuminnumsilapengalum #movie #review

திங்கள், 22 நவம்பர், 2021

பொன்மாணிக்கவேல் விமர்சனம்

ஒரு திரைப்படம் வெற்றிபெற கொஞ்சம் சுமாரான  கதை , நல்ல திரைக்கதை, இருந்தால் போதுமானது..

ஆனால் இந்த இரண்டும் இருந்தும் அதில் நடிக்கும் கதாநாயகன் சரி இல்லை என்றால், மொத்தமுமே காலியாகிடும்.

அப்படி ஒரு படம் தான் பொன்மாணிக்கவேல். வழக்கமான பழிவாங்கும்  கதை தான் ஆனாளும் சுவாரஸ்யமான திரைக்கதை தான் இருந்தும் என்ன பயன், கதாநாயகன் முழு படத்தை யும் தன் நடிப்பில் சொதப்பி விட்டார்.

மாஸ் கதாநாயகன் க்கு intro கொடுப்பது போல பிரபுதேவா விற்கு கொடுக்கையில் குபீர் சிரிப்பு தான் வருது.

எடிட்டர் சிறு பிழையால் யார் கொலைகாரன் என்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. ஒரே ஆறுதல் கதாநாயகன்- கதாநாயகி கெமிஸ்ட்ரி. 

பிரபுதேவா வெல்லாம் play boy பார்த்து பழகியதால் police ஆக பார்க்க இயலவில்லை..

#ponmanickavel #

review

மொத்தத்தில் சர்க்கரை பொங்கல் க்கு சாம்பார் combo இந்த பொன்மாணிக்கவேல்.

வெள்ளி, 5 நவம்பர், 2021

அண்ணாத்த திரைவிமர்சனம்

அண்ணன்-தங்கை பாசத்தை மையபடுத்தி வரும் தமிழ் படங்கள் பல , 

அதில் சில மணிமகுடமாக தமிழ் சினிமாவை அலங்கரிக்கும். அப்படி அலங்கரித்தாரா நம்  அண்ணாத்த.

எந்த எதிரிபார்ப்பும் இல்லாமல் சென்றதால் என்னவோ, ஏமாற்றம் அவ்வளவாக இல்லை. கதையின் நாயகன் காளையன் ஊரில் பெரிய தலைகட்டு, தாய் இல்லா தங்கையை வளர்க்கிறார் தாயாகவும் ,தந்தையாகவும்.  ஊரே மெச்சும் கல்யாணம் செய்ய துடிக்கிறார், அவரின் கனவு என்னவானது ?

அடி, தடி, ஆட்டம், பாட்டம், சிரிப்பு என காளையன் அதகளப்படுத்துகிறார் முதல் பாதியில்.

 பாசத்தை வெளிக்காட்டும் இடங்களில் நடிப்பில் மிளிர்கிறார் ரஜினி. 

முதல் பாதியில் வில்லனாக தன் பங்கை நிறைவாக செய்கிறார் பிரகாஷ் ராஜ். 

வசனங்கள் சில இடங்களில் உச்சு கொட்ட வைத்தாலும் பல இடங்களில் கூர்மையாக உள்ளது.

நியாயமும்,தைரியமும் இருந்தால் அந்த சாமியே பெண்ணுக்கு உதவுவார் என்கிறார் ரஜினி.

 கூறுவது ரஜினி என்பதாளா என்னவோ  பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறது.

சூரி,குஷ்பு, மீனா , பாண்டியராஜன்,லிவிங்ஷ்டன் சத்யன், என அனைவரும் ரஜினியோடு வருவதால் சற்று சிரிக்கவும் வைக்கின்றனர்.வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகியாக அல்லாமல் கதையின் நாயகியாகவும் இரண்டாம் பாதி முழுவதும் வலம் வருகிறார் நயன் தாரா. 

"சார சார "  பாட்டு முணுமுணுக்க வைக்கிறது.

கீர்த்தி சுரேஷ் முதல் பாதி சிரித்தும், இரண்டாம் பாதி அழுதும் ஸ்கோர் செய்கிறார். நடிப்பில்.

இரண்டாம் பாதி முழுவதும் சண்டை காட்சிகள் வில்லன்கள் பலம் வேண்டும் தான் அதற்காக இவ்வளவு பலமா ? எவ்ளோ சண்டை காட்சிகள்.. காது கிழிகிறது.. இறுதியில் வில்லன்களை வதம் செய்து தங்கை கண்ணில் ஆனந்த கண்ணீர் வரவைக்கிறார் நம்ம அண்ணத்த.

தங்கை நினைக்கையில் அண்ணன் அருகில் இருப்பது போன்ற காட்சிகள்  அழகிய 

" ஹைகூ ".

இயக்குனர் சிவா விடமிருந்து இது போன்ற படங்கள் தான் கிடைக்கும், உலக சினிமாவை ரசிக்கும் ரசிகர்கள் ஒதுங்கி கொள்ளவும் உங்களுங்கான படம் இதுவல்ல.

 ரஜினி யை பிடித்தவர்களுக்கு இந்த படம் கண்டிப்பாக பிடிக்கும். குடும்பத்துடன் காணலாம் .

முதல் பாதி - Class

இரண்டாம் பாதி - Mass

A சென்டரை விட B & C சென்டர்களில் கலக்குவார் இந்த அண்ணாத்த.

கொசுறு : பாடம் பார்த்து விட்டு வெளியே வருகையில் குட்டி பையன் ஒருவன் நானும் என் தங்கையை அண்ணாத்த மாதிரி பார்த்துக்கொள்வேன் என்கிறான்.

இவண்

ராஜா.க

#Annaatthe #Rajini #Sun #Nayanthara