சனி, 29 ஜூலை, 2023

ரத்னவேலுவும் மாமன்னனும்

  ரத்னவேலு - மாமன்னன் 

சினிமாவில் கதாநாயகன்  எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு வில்லன் காதபாத்திரம் அமைக்க வேண்டும்.கொஞ்சம் பிசிறு தட்டுனாலும் செல்லும் பாதையே மாறிவிடும்.

அதனால் தான் தேவர் மகன் படத்தில் ஒவ்வொரு frame பார்த்து பார்த்து செய்த்திருப்பார். நாசர் க்கு அந்த close-up and மீசை முறுக்கு அதோடு stop. அதற்கு அப்போதே பல ரசிகர்கள்.

சினிமாவில் உருவாக்கப்படும் ஒரு கதாபாத்திரத்தின் பலம்.

திரையில் தனக்கு பிடித்த கதாபாத்திரம் தன்னை பிரதிபலிக்கும் ஒருவனாக தான் பாமர ரசிகன் பார்க்கின்றனர். 

மாமன்னன் படத்தில் இந்த இடத்தில் இயக்குனர் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்கலாம் என தோன்றுகிறது. பகத் பாசிலின் நடை ,உடை , அவரின் பாவனைகள் , அவரேயே நாயகன் போல பலரின் மனதில் பதிவு செய்து விட்டது. 

ஒருவேளை இயக்குனர் இதை அறிந்திருக்க மாட்டார். வடிவேலு வின் பக்குவபட்ட நடிப்பு  அருமை. ஆனால் அதை அனைவரும் பார்ப்பார்களா என்பது வினாவே ? சரி அதிவீரன் பாத்திரம் பகத் பாசில் க்கு அளவுக்காவது அமைக்க பட்டிருக்க வேண்டும் ஆனால் அதுவும் மிஸ்ஸிங்.

தன் முதல் இரண்டு படங்களை விட இந்த #மாமன்னன் படத்தில் வில்லனுக்கு முக்கிய துவம் கொடுத்து அதிலும் பகத் நடிப்பு சாரே மாஸ் இன்றைய யூத் பலர் 🔥 விடுகின்றனர்.

பகத் பாசில் தன் அண்ணனிடம் கோப படும் காட்சி ஆகட்டும் பிறகு அண்ணனிடம் சகஜமாவது , தன் மனைவியிடம் நடந்து கொள்ளும் விதம் , வேலைகாரரிடம் என்னிடம் கரெக்ட் இருக்கணும் என்று சொல்வது ஆகட்டும். நடிப்பு சமாராஜ்யம் நடத்துகிறார் பகத் பாசில்.

நல்ல கதை ,திரைக்கதை யில் மேலும் வேகம் சேர்ந்திருந்தால் பலமான  வெற்றி கிடைத்திருக்கும் இயக்குனர் மாரி செல்வராஜ் க்கு.

#Netflix #மாமன்னன் #Maamannan

#Udhai #Vadivelu

திங்கள், 17 ஜூலை, 2023

இயக்குனர் இமயம்

ஸ்டூடியோ விற்குள்ளேயே காட்சிகளை பதிவு செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவையும் அதன் கேமராவையும் , கிராமங்களை யும் அங்குள்ள ஈர மனதுள்ள மக்களின் வாழ்க்கையையும் பதிவு செய்த இயக்குனர் இமயம் பாரதிராஜா !!

Kangalal Kaidhu Sei

இயக்குனர் பாரதிராஜா படங்களில் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று , இந்தியான் No 1  industrialist , எதிர்பாரா விபத்தில் இறந்து விட

அவரோட ஒரே பையன்

வசிகரன் அந்த இடத்துக்கு வரார். அவருக்கு

கிளெப்டோஃபோபியா ஒரு disease இதனால் அவருக்கு என்னாச்சு ? இது தான் கதை.

இசை ரகுமான் , வசனம் சுஜாதா. 

இந்த படத்தை முதன் முதலில் பார்க்கும் போதிய அவ்ளோ ஆச்சரியமா இருந்தது. முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை அவ்ளோ ராயல் இருக்கும்.

அதற்கு இந்த ஒரு காட்சி சொல்லலாம். ஹீரோ வீட்டுக்கு போலீஸ் ரெய்டுக்கு போவார்கள் அதற்கு அவரின் வக்கீல் அணி எப்படி React ?

செய்யும் , goosebump இருக்கும்.

சுஜாதா வின் ஒவ்வொரு வசனமும் அவ்ளோ சூப்பரா இருக்கும். 

 ப்ரியாமணி மீது அவருக்கு ஏற்படும் காதல் , 

அவரோட வீடு , அந்த வீட்டு labors எல்லாமே அப்போ பார்க்கும் போது wow மாதிரி இருந்தது. Climax அதற்கு முந்தைய சில காட்சிகள் கொஞ்சம்   பட்டிங் , டிங்கரிங் பண்ணி பண்ணினா படம் செமையா ஓடிருக்கும். 

#KangalalKaidhuSei 

#HBDBharathiRaja

சனி, 15 ஜூலை, 2023

மாவீரன் திரைவிமர்சனம்

 சென்னையின் கூவம் நதியோரம் தகர கொட்டகைக்குள் வாழும் விளிம்புநிலை மக்கள், அரசின் குடிசை மாற்று வாரியத்தால்  அமைய உள்ள அபார்ட்மெண்ட் க்குள் குடி பெயர்கிறார்கள்.அந்த கட்டிடம் என்னனாது ,மக்கள் என்னார்கள் என்பதை சம கால அரசியல் கலந்து மக்களை காப்பாற்றினானா மாவீரன் ?

தகர கொட்டகைக்குள் வாழ்ந்தாலும் , மாளிகையில் வாழும் இளவரசியை காப்பாற்றும் காமிக்ஸ் கதாபாத்திரங்களை வரையும் 

நாயகனாக சிவகார்த்திகேயன்.

தான் வரையும் கார்ட்டூன்களை தினசரி செய்தித்தாளில் இன்னொருவர் பெயரில் வருவதை ஏக்கத்துடன் பார்ப்பது , பயந்து வாழ்க்கை யில் எல்லாவற்றையும்  adjust செய்து பழகி கொள்ளும் இளைஞன். அம்மா வின் திட்டை பொறுத்து கொள்ளாமல் தற்கொலை க்கு முயல்வதும் அதன் பின் அவருக்கு கேட்கும் அசரீரி குரலால் அடி , தடி யில் இறங்கும் ஆக்க்ஷன் அவதாரம் என அதகளம் செய்கிறார் சிகா. 

பாடல்களில் நடனம் , யோகி பாபுவுடன் காமெடி , அசரீரி குரல் (விஜய் சேதுபதி) கேட்டு சிகா செய்யும் செய்கைகள் விஜய் சேதுபதி யும் படத்தில் நடிப்பது போல உணர்வு. 

இவ்வளவு பலமான ஹீரோக்கு சற்றும் சளைக்காத வில்லன் கதாபாத்திரம். இயக்குனர் மிஸ்கின் எமனாகவே வாழ்கிறார். கோப படுவதும் ,தன் நண்பனிடம் நண்பா என பாசமாக கூறுவதும் சிகா வை அடித்து துவைப்பது ,என பக்கா வில்லன் கதாபாத்திரம். இறுதியில் எனக்கும் 22 வருடமாக குரல் கேட்கிறது என கூறுவது directorடச்.

தன்னை சுற்றி நடக்கும் அவலங்களை தட்டி கேட்கும் பெண்ணாகவும், தைரியமில்லாத மகனை திட்டி தீர்க்கும் அம்மா , 

நாயகியின் தாயாக சரிதா அனுபவ நடிப்பில் மிளிர்கிறார்.

நாயகனுக்கு உரிய வேலையை வாங்கி கொடுக்கும் துணிச்சல் மிகு மங்கை நாயகி அதிதி ஷங்கர் ,இவர்கள் இருவருக்கு மிடையே மலரும் நட்பு காதலாக மாறுவது யதார்த்தம். 

விறுவிறு திரைக்கதை , பாடல்கள் , காமெடி அடி தடி என்னும் செல்லும் முதல் பாதி ,

சலிப்பான காட்சிகளால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வடைந்து அசறீரி குரல் கேட்கை யில் மறுபடியும் படத்தின் வேகம் கூடுகிறது. இறுதியில் நாயகன் வெல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிந்தாலும்

சிகா வின் பலம் குழந்தைகள் , குடும்ப ரசிகர்கள் அவர்களை

இருக்கையில் இருந்து வெளிவர மனமில்லாமல் இறுதி காட்சி வரை பார்க்க வைத்து விடுகிறான் இந்த மாவீரன்.

இவன்

ராஜா.க

 #Sivakarthikeyan

 #MaaveeranReview

 #Maaveeran

 #MaaveeranMovie 

#MaaveeranBlockBuster

#MaaveeranFromToday

சனி, 8 ஜூலை, 2023

டக்கர் திரைவிமர்சனம் review

டக்கர் அப்படினு ஒரு படம்.

கதை என்னமோ சுமார் ரகம் , நாயகன் பணக்காரன் ஆக ஆசை படுகிறான். அதற்கு அவன் திட்டமிடலை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தியிருக்க வேண்டாமா ? மாறாக படு சொதப்பல் திரைக்கதை யால் ,  கதாநாயகனோடு

படம் பார்க்க வந்த நம்மையும் சிறிது புலம்ப வைத்து விடுகிறார் இயக்குனர்.

வில்லன்(#தீரன் படத்தின் ஓமா)

கதாபாத்திரம் மீது முதலில் பயம் வரும் என்று பார்த்தால் படம் செல்ல , செல்ல பரிதாபம் வருகிறது .யோகிபாபு  காமெடிக்கு  வில்லனுக்கு எப்படி எரிச்சல் வருகிறதோ அதே எரிச்சல் படம் பார்க்கும் நமக்கும். 

Feminist என கூறி தன்னை தானே கலாய்த்து கொள்ளும் கதாநாயகி நாயகனோடு சேர்ந்து சிகரெட் பிடிக்கிறாள் , மது குடிக்கிறாள் வேறு எதுவும் உருப்படியாக செய்யவில்லை.

 சித்தார்த் பஞ்ச் டயலாக் பேசும் போதும் சரி , fight scenes சிரிப்பு தான் வருகிறது. 

 பொதுவாக எந்த படத்தையும் அதிகமாக நெகட்டிவ் விமர்சனம் செய்ய மாட்டேன் ஆனால் என்னையும் அந்த படம் இவ்வளவு ரொம்ப சுமரான படமும் இப்போ வருது என்று எழுத வைத்து விட்டீர்கள். சினிமாவில் logic பார்க்க கூடாது , இந்த படத்தை எப்படி பார்த்தாலும் நல்லா இல்லை. மொத்தத்தில் டக்கர் படம் டர்ர்ர்....

#Takkar #Netflix #Movietime

#டக்கர்

Good Night Movie Review

 சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை சினிமாவை அதிகம் ஆக்கிரமித்தது காதல் கதையும் , பழி வாங்கும் கதையும். இதில் பழிவாங்கும் கதையில் கூட காதல் கண்டிப்பாக இருக்கும். அப்படி பட்ட இன்றியமையாத  ஒன்று காதல். 

எத்தனை வருடங்கள் ஆனாலும் காலையில் எழுந்து பல் துலக்குவது ஓரு வழக்கமோ ,  சலிப்பு தான் ஆனாலும் அதை தவறாமல் செய்வது போல   திரைபடங்களில் காதல் கதையை பதிவு செய்வதும் இன்றியமையாதது. ஆனால் அதை காலமாற்றத்திற்கு ஏற்ப கொடுப்பதில் தான் ஒரு இயக்குனருக்கு வெற்றி கிடைக்கும். 

இதற்கு முந்திய காதல் படங்களில் கடைசி காட்சி வரை காதல் செய்து கல்யாணம் தான் கிளைமேக்ஸ். இப்போது  கல்யாணத்திற்கு பிறகு அந்த காதல் என்னவாயிற்று என்பதை அழுத்தமாக கூறிய படங்கள் அலைபாயுதே முதல் ராஜாராணி வரை வெற்றி படங்களான வரலாறு உண்டு. 

IT company யில் வேலை செய்யும் கதாநாயகன் , Audit கம்பெனி யில் வேலை செய்யும் கதாநாயகி. தன்னுடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்க முயலும் நாயகனுக்கு  அவன் குறட்டை யால் காதல் break up. தனக்கு ராசியில்லை என்பதை குற்ற உணர்ச்சியாக கருதும் நாயகி இவர்கள் இருவரும் சந்தித்து ஒருவருக்கொருவர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். 

திருமணத்திற்கு பின் இவர்கள் இருவரின் குறைகள் அவர்கள் வாழ்க்கையை எப்படி புறட்டி போட்டது என்பதை வலுவான திரைக்கதை யால் அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறார் இயக்குனர். 

மோகன் கதாபாத்திரத்தில் மணிகண்டன் இன்றைய IT ஊழியரை கண் முன் நிறுத்துகிறார் , தன் ஆங்கில பிரச்சினை யால் தன்  Boss இடம் கூனி குறுகும் காட்சி யாகட்டும் தன் தங்கையே தன் அவமானப்படுத்தும் போது அந்த கோபத்தை தன் மனைவி இடத்தில் பொங்கி எழும் காட்சியிலும் மிக எதார்த்தம். 

அப்பாவி பெண்னை கண் முன்னே நிறுத்தும் அனுவாக மீதா ரகுநாத் பாந்தமான நடிப்பில் நமக்கு ஒரு அனு மனைவி யாக கிடைக்க மாட்டாளா என சிறுது ஏங்க வைக்கிறாள். மோகனின் மாமாவாக ரமேஷ் திலக் கின் நடிப்பு , ஒரு சிறந்த குணச்சித்திர நடிகரை இவ்வளவு நாள் இந்த சினிமா உபயோகப்படுத்த வில்லையோ என நினைக்க தோன்றுகிறது. 

மோகனின் அம்மா அனுவிடம் ஏதாவது விசேஷம் உண்டா என கேட்பதற்கு அனுவின் பதில் 

கல கல.மோகனின் அம்மா , தங்கை ,அக்கா என் அனைவரும் மிக இயல்பாக நடித்துள்ளனர். 

காதல் கதையில் குடும்ப கதையையும் பதிவு செய்து வெற்றி பெற்றுள்ளார் படத்தின் இயக்குனர் வினாயாக் சந்திரசேகரன்.

Good Night !! 

இவன்

ராஜா.க

#Goodnight #Tamilmovie #Manikandan 

வெள்ளி, 7 ஜூலை, 2023

மும்பையும் மகா லக்ஷ்மி யும் !!

 ஹிந்தி வெப் சீரிஸ் பெயர் நினைவில்லை , தமிழ் டப் பில் பார்த்தது. அதில் வரும் இரு (ஆண் , பெண்) கதாபாத்திரங்கள் நேரில் சந்திக்காமல் மொபைல் பேசி கொள்வார்கள். 

ஆண் மஹாராஷ்ட்ரா வை சேர்ந்தவர் தான் வேலைக்காக மும்பை வந்து வேலை செய்வார் அந்த பெண் மும்பை சேர்ந்தவர்.

அவர்கள் உரையாடலில் கவனிக்க வைத்தது. அவன் சொல்லுவான் இங்கே (மும்பை) சம்பாதித்து விட்டு ஊரில் போய் குடியேறிவிடுவேன் அதற்கு அந்த பெண் சொல்லுவார் மும்பை தன் பணத்தை வெளியே விடாது இங்கே சம்பாதித்த பணத்தை இங்கேயே தான் இருக்க செய்யும் என்பார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

சில பலரிடம் விசாரித்த போது அதில் 90% ஆம் என்றனர்.நன்கு தெரிந்தவரிடம் (மும்பை காரர்) இதை பற்றி கூறினேன் அவர் சிரித்து கொண்டே இதெலாம் யார் உனக்கு கூறியது என கேட்க இந்த webseries பற்றி கூறினேன். மேலும் சிரித்து கொண்டு உனக்கு உலகமே சினிமா தான் போல என கூறி அவர் ஒரு கதை கூறினார்.

அவர் பாட்டி அவருக்கு கூறியதாம் , அதாவது ஒவ்வொரு ஊரிலும் ஒரு தெய்வம் ஒரு பிரத்யேகமாக இருக்கும் அது போல #மும்பை க்கு மகாலஷ்மி யாம். அதனால் தான் அங்கு பணத்துக்கு பஞ்சமே வரதாம் , எத்தனை இயற்கை இடர்பாடுகள் (#மழை, #புயல்) வந்தாலும் எவ்வளவு #பணம் அழிந்தாலும் அதை விட பன் மடங்கு செல்வதை

லஷ்மி தேவி கொடுபாராரம்.

அந்த மும்பை மண்ணிற்கு. இந்த கதை யை கேட்டதும் சற்றே மெய்சிலிர்க்க வைத்து விட்டது. தமிழ்நாட்டிற்கு எப்படி வந்தாரை வாழவைக்கும்

சிங்கார சென்னை யோ அது போல மும்பை போல. ஆனால் சென்னை இங்குள்ள பணத்தை வெளியே செல்ல அனுமதிக்கும் போல ❤️❤️

#மும்பை #தெரிந்தகதைகள்

செவ்வாய், 4 ஜூலை, 2023

அதிகரிக்குமா தியேட்டர் டிக்கெட் விலை ?

 சினிமாவை தியேட்டரில் சென்று பார்ப்பது தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆடம்பரம் அல்ல , மாறாக அத்தியாவசியம். அதனால் தான் மற்ற மாநிலங்களை விட இங்கே தியேட்டர் டிக்கெட் கட்டணம் குறைவு. ஒரு முறை இதே போல திரு.ராம நாராயணன் , திரு. அபிராமி ராமநாதன் இருவரும் 

அன்று முதல்வர் இருந்த கலைஞர் சந்தித்து தியேட்டர் கட்டணம் உயர்த்துவது பற்றி பேசி இருக்கிறார்கள். ஆனால் கலைஞர் மறுத்து விட்டார். அதற்கு மாறாக தியேட்டர் தின்பண்டங்கள் , பார்க்கிங் கட்டனம் ஏற்றி கொண்டனர். இந்த விலை ஏற்றத்தையே பெரும்பாலான குடும்பங்கள் ஏற்று கொள்ளவில்லை. 

அதனால் தான் தியேட்டர் களில் சனி , ஞாயிறு  கிழமை தவிர மற்ற நாட்களில் மிக சொற்ப மக்களே வருகின்றனர். இப்போது டிக்கெட் கட்டணம் அதிகரித்தால் மாதத்தில் ஒரு முறை செல்பவர்கள் இனி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தான் செல்ல வேண்டி வரும். டிக்கெட் விலைக்கு மாற்றாக என்ன செய்யலாம் ?

இப்போது எல்லா தியேட்டர் களிலும் படம் தொடங்குவதற்கு முன்பு 15 நிமிடங்கள் விளம்பரம் போடுகின்றனர் , இடைவேளையில் 10 நிமிடம் , இந்த நேரத்தை சிறிது அதிகரித்து டிக்கெட் கட்டனத்தை சரி செய்து கொள்ளலாம். தியேட்டர் கேண்டின் களை உணவங்களை போல வைத்து கொள்ளலாம்.

எப்படியும் தியேட்டர் முடித்து வெளியே சாப்பிடட்டு செல்வது தான் வழக்கம்.அதை தியேட்டர் கிடைக்கும் படி செய்தால் நன்றாக இருக்கும். எங்க ஊர் தியேட்டர் ஒரு காலத்துல தயிர் வடை சாப்பிடவே தியேட்டர் க்கு போனது உண்டு. இதை போன்று உணவகங்கள் வைத்து ரெகுலர் வாடிக்கையாளர்கள் தக்க வைத்து கொள்ளலாம்.

இதையெல்லாம் கவனித்து கொள்ளலாம் மாறாக விலை ஏற்றி யாக வேண்டும் என்றால் வருபவர்கள் வருவார்கள் ஆனால் எண்ணிக்கை கண்டிப்பாக குறையும். காலத்துடன் பயணிப்போம். #tickets #theater #Tamilnadu