செவ்வாய், 14 ஜனவரி, 2020

அஜித்தின் அது !!!

இது போன்றதொறு பொங்கல் திருநாளில் தல அஜித் தின் ரெட் படம் வெளியானது. எங்கள் ஊர் (திருச்செந்தூர்) அருகில் உள்ள ஆத்தூர் பம்பையா திரையரங்கில் திரையிட்டிருந்தார்கள்.

எதற்கும் கவலைப்படா கல்லூரி காலம் அது. முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காததால் மேட்னி ஷோக்கு தான் டிக்கெட் கிடைத்தது. நண்பர்கள் படை சூழ திரையரங்கம் சென்றாயிற்று.

இந்த டிவிட்டர், facebook,movie review என்று எதுவும் இல்லா ஒரு காலம் அது. தேனீசை தென்றல் தேவா வின் இசையில் ஏற்கனவே பாடல்கள் எல்லாம் ஹிட். மேலும்
அத்திரைப் படத்தில்  தல யின் ஹேர் ஸ்டைல் (ரெட் கட்டிங் ரொம்ப பேஷன்) என தன் ரசிகர்களால் கொண்டாடப் பட்டது.

அஜித்தின் (அப்போதைய) ஆஸ்தான தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உலகநாயகன் கமலின் P K S படத்திற்கு போட்டியாக வெளியிட்டுருந்தார்.

அடித்து,பிடித்து தியேட்டர் க்குள் சென்றாயிற்று, திரையிலிருந்து வரும் ஒலியை விட திரைக்குள் இருக்கும் ஒலி பலமாக இருந்தது. அஜித்தின் இன்ட்ரோ வெல்லாம் அட்டகாசமாக இருக்கும். ஆர்வத்தில் சீட்டின் மேல்  எல்லாம் ஏறி  நின்றார்கள்.  அஜித் என்ன பேசினாலும் பயங்கர கத்தல்.

அடேய் அவர் பேசுவதை கேட்க விடுங்கடா (மைண்ட் வாய்ஸ்,) நண்பனிடமே கேட்டு விட்டேன் என்ன டா பஞ்ச் டயலாக் என்று ?
நண்பன்  "அது" என்றான்.
எது என்றேன் "அது" இது தான் பஞ்ச் என்றான். இதுக்கு மேல கேட்டால் நம்மை கடித்து விடுவான் என மனதிற்குள் சொல்லி கொண்டேன்.

பாடல்களுக்கெல்லாம்( கண்ணை கசக்கும் சூரியன்,ரோஜா காடு, ஒல்லி  குச்சி ஒடம்பு காரி) தல யை விட ரசிகர்களின் ஆட்டம் உக்கிரமாக இருந்தது.

நேரம் செல்ல ,செல்ல சத்தம் கம்மியானது. இரண்டாம் பாதியில் அனைவரும் சைலண்ட் மோட்.  அமைதியாக படம் பார்த்தோம்.

முழுக்க முழுக்க அஜித்தின் மாஸ் மற்றும் தல ரசிகர்களை திருப்தி படுத்த இயக்குனர் ராம் சத்யா இன்றைய சிங்கம் புலி நடிகர்  எடுத்த படம் எதற்கோ பெயரை மாற்றி கொண்டார்.

இறுதி காட்சியில் "தாய் மடியை தேடுகிறேன்" என ஒரு அருமையான மெலடி பாடல் ஒன்று இருக்கும்,ஏனோ அது சூப்பர் ஹிட் ஆகல முடிந்தால் இப்போது கேளுங்கள்.

படம் முடிந்து வெளியே வருகையில் அடுத்த காட்சி க்கு தயாராக இருந்தது தலையின் படை.  அதில் ஒருவர் என்னிடம் வந்து படம் சூப்பரா ? என கேட்க; அவர் கண்களில் இருந்த ஏக்கம் என்னை உண்மையை மறைத்து கொள் என்றது.
எதுவும் பேசாமல் விரல்களால் 👌🏼👌🏼சொல்லிவிட்டு Esc.

நினைவுகளுடன்
ராஜா க

சனி, 11 ஜனவரி, 2020

தன் அடையாளம் மறகிறானா தமிழன்...

தீபாவளி பண்டிகை க்கு முந்தைய வாரங்களில்( குறிப்பாக கடைசி இரு நாட்களுக்கு முன் )கடை தெருக்களுக்கு செல்வது வழக்கம், அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழியும் குறிப்பாக துணி கடைகளில் பல அதிரடி offer களை காணலாம்.

துணி கடைகள் மட்டுமின்றி நகை கடை, ஸ்விட் (லாலா) கடைகள் வரைக்கும் இது பொருந்தும். அனைவரும் இது போன்றதொரு உணர்வை உணர்திருப்போம்.

இது வரையில் பொங்கலுக்கு புது துணி எடுத்தது கிடையாது. சரி இந்த முறை ஒரு மாற்றத்திற்காக எடுப்போம் என்று பொங்கலுக்கு முந்தைய நாட்களில்  கடைகளுக்கு சென்றேன், சற்று சிறிய அதிர்ச்சி. தீபாவளி பண்டிகையை போல் அல்லாமல்  குறைவான மக்கள் நடமாட்டமே இருந்தது. அதிரடி offer களையும் காணமுடியவில்லை.

ஒரு காலத்தில் பொங்கலுக்கு தான் தமிழகத்தின் பெரும்பான்மையான மக்கள் புது துணி எடுத்து மகிழ்ச்சி  பொங்க பொங்கல் கொண்டாடியது நினைவுக்கு வந்தது.

ஒருவேளை சென்னை போன்ற பெருநகரங்களில் பொங்கலுக்கு,  தீபாவளிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கொடுக்கவில்லையா ? இல்லை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறும் ஆட்சி மாற்றத்தை போல மாறுகின்ற கலாச்சார மாற்றமா ? இல்லை உலக மயமாக்கலுக்கு  பிறகு( 1991க்கு பிறகு) பெருகி வரும் பண்டிகைகளால்( New Year, Christmas, ஆடிக்கழிவு, weekend shopping) இவற்றின் வருகைகளுக்கு அப்பால் தன் அடையாளம் மறக்கிறானா தமிழன் என என்ன தோன்றுகிறது.

அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.

இவன்

வியாழன், 9 ஜனவரி, 2020

தர்பார் என் பார்வையில்

பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு (தர்பார்) முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. அப்பொழுதே சிறிது சந்தேகம் எழுந்தது இருந்தாலும் உற்சாகத்துடன் திரையரங்கம் சென்றாயிற்று.

எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல்  சீட்டில் அமர்ந்தபின் சுற்றும் முற்றும் பார்த்தேன், பல இருக்கைகள் காலியிருந்தது. ஆகா சிக்கிட்டோம் போல, என்றது மைண்ட் வாய்ஸ்.

மகளை கொலை செய்த வில்லன்களை கொல்ல துடிக்கும்  தந்தை யின் கதை.
யார் கொலை செய்தார் என்று தெரியாமல் அனைத்து ரவுடிகளையும் encounter செய்கிறார் ரஜினி.

என்ன லைட்டா கஜினி ஸ்மெல் அடிக்குதா ஆமாம் அதில் சஞ்செய் ராமசாமி இதில் ஆதித்யா அருணாச்சலம் அவ்வளவே வித்யாசாம். அதற்காக ரஜினியிடம் இன்னொரு கஜினியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

மும்பையில் அதிகரிக்கும் Drugs விற்பனையை கட்டுப்படுத்த வருகிறார் கமிஷனர், துணை முதல்வரின் மகளை வில்லன்கள் கடத்துகிறார்கள் அப் பெண்களுடன் மேலும் பல பெண்களை காப்பற்றுகிறார், வில்லனை சிறை பிடிக்கிறார் பின் அவனை கொல்கிறார் இப்படியாக முதல் பாதி செல்கிறது.

சரி இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் நம்பினால் ஏமாற்றமே. ரஜினி படத்தில் வில்லன்கள் தான் ரஜினியின் பாதி பலமே இதில் வில்லன்களுக்கு வெறும் buildup தான் (international don) பட்டம் வேறு.

இந்த கதைக்கு யாரும் சொந்த கொண்டாடத போதே தெரிகிறது இப்படத்தில் கதையே இல்லையென்று.
யூகிக்க பட்ட திரை கதை அலுப்படைய செய்கிறது.

படத்தின் பலம்
ரஜினி,அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், அனிருத் பின்னணி இசை அவ்வளவே.  நயன்தாரா எதற்கு ?

ரஜினியின் தர்பார் சும்மா கிழியுது !!!

#தர்பார் #Darbar