ஞாயிறு, 23 ஜனவரி, 2022

அன்னபூரணி மெஸ் சைவம்

 அன்னபூரணி மெஸ் சைவம்

ஹோட்டலின் முகப்பில்  வைத்துள்ள அன்னபூரணி படமே நம்மை சாப்பிட அழைப்பது போல உள்ளது.

சாப்பாடு க்கு டோக்கன் சிஸ்டம் போல கல்லா பெட்டியில் அன்னபூரணி போலவே அக்கா ஒருவர் அமர்ந்திருந்தார்கள்.

சாப்பாடு டோக்கன் என்றவுடன், வாழைப்பூ வடை வேணுமா என கேட்க ? வடை என்றாலே வரிந்து கட்டி உண்ணும் நம்மிடம் 

வாழைப்பூ வடை என்றால் கேட்க வா வேண்டும் உம் கொட்ட, 

பாயாசம் வேணுமா என கேட்க ? பொதுவாக தயிர் தானே extra காசு கேடப்பார்கள் சரி காலம் மாறிடுச்சு போல ,என்ன பாயாசம் என பதிலுக்கு நான் கேட்க ? பால் பாயசாம் என்றவுடன் , ரோஜா படத்தில் ரகுமான் இசையை இப்போதுள்ள headphone இல் கேட்டு  பரவசம் அடைவது போல பால் பாயாசம் என்ற வார்த்தை ஒலித்தது.

டோக்கனை பணியாளரிடத்தில் கொடுத்தேன், இலை யில் ஒவ்வொரு ஐயிட்டமாக பரிமாறப்பட்டது, 

அந்த வாழைப்பூ வடை என்றேன் ? சாரி சார் என்றார் , திக் கென்று  வடை போச்சா என்றது மனது..

வடை ரெடி யாகி கொண்டே இருக்கிறது கொஞ்சம் பொறுங்க சார் என்றார்.

சரி எதுக்கு வம்பு சாம்பார் க்கு உருளைக்கிழங்கு பொறியல் போதுமே sachin & schewag போன்ற நல்ல கூட்டணி , 

சார் வத்த குழம்பு என்றார் சர்வர் அந்த "வாழைப்பூ வடை "

என்றேன் , இரண்டே நிமிடம் சுட , சுட கொண்டு வந்துவிடுகிறேன் என்றார்.

வத்த குழம்பு , அப்பளம் காம்போ நன்றாகவே இருந்தது, திருவிளையாடல் படத்தில் நாகேஷ் 

புலம்பவது உனக்கு பொற்காசுகள் கிடையாது ,  கிடையாது என்று கூறுவது போல வடை கிடையாது , கிடையாது என்றது மனது.

இதோ வந்துட்டேன் என்று மதன் பாப் கூறுவது போல சர்வர் சூடான வடையுடன் வந்து நின்றார்.

செக்க சிவந்து மொறு, மொறு வென்று, லேட்டாக வந்தாலும் டேஸ்டாக வந்தது.

இரசத்துடன் வடை சேர்த்து சாப்பிடுகையில் இரசத்தின் புளிப்பு, வாழைப்பூ வடை காம்போ தோனி-கோலி combo போல பட்டையை கிழப்பியது..

பரவாயில்லை லேட்டாக வந்ததும் நல்லது தான் போல என்று நம்மை நாமே சாமாதானாப்படுத்தி கொள்ள வேண்டும்.

வாழைப்பூ வடை என்றவுடன் இது போல ஒரு ஹோட்டலில் மம்மூட்டி சாப்பிடுகையில் இந்த சுவை ஸ்ரீவித்யா கை பக்குவம் ஆயிற்றே என்று சமையல் அறைக்கே சென்று  கண்டுபிடித்துவிடுவார்  "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் " திரை படத்தில். சமையல் மற்றும் கை பக்குவத்திற்கு என்றுமே தனி சக்தி.

எல்லாம் சுபாமாக முடிந்தது பால்பாயாசம்  மட்டும் சுமாரகவே இருந்தது எதன் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருக்குமோ அதன் தரம்  சிறுது குறைந்தாலும் சற்று ஏமாற்றம் அடையலாம்.

எதிரிபார்ப்பை குறைத்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.

தாம்பரம் பேருந்து நிலையம் பின்புறம் ஒரு நல்ல உணவகம்

அண்ணபுரணி மெஸ்

 sriram stamp paper கடை அருகில் உள்ளது.

இவண்

ராஜா.க

புதன், 12 ஜனவரி, 2022

மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு

 நம்முடைய பண்டிகை நாட்களுக்கும் தமிழ் சினிமா பாடல்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும்.

Happy New Year ஆரம்பித்து, பொங்கல், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி,( ஹோலி, தசரா) சொல்லி வைப்போம் இல்லை நீ இந்தியனா கேள்வி கேட்பாங்க எதுக்கு வம்பு.

அப்படி ஒரு நல்ல நாள் தான் போகி இந்த நாள் பற்றி நினைக்கியில் நம் முன்னே ஒலிக்கும் முதல் பாட்டு,

மார்கழி தான் ஓடிப் போச்சு போகியாச்சு

நாளைக்குத் தான் தை பொறக்கும் தேதியாச்சு 

போகி இது போகி இது நந்தலாலா 

பொங்கல் வைப்போம் நாளைக்குத் தான் நந்தலாலா....

1991 இல் தளபதி படத்தில் உள்ள பாடல் மணிரத்னம் இயக்கதில் , வாலி யின் வாலிப வரிகளில், இளையராஜா இசையமைத்த பாடல்,

 கிட்டதட்ட 31 வருடங்கள் உருண்டோடிவிட்டது ஆனால் இந்த பாடலை சமன் செய்ய வேறு எந்த பாடலும் இன்று வரை வரவில்லை  என்பது கற்பனை பஞ்சம்  தான் என்றாலும் வருங்காலத்தில் வரும் என்று நம்பிக்கை யோடு  

இந்த வருடமும் இந்த பாட்டோடு போகியை கொண்டாடுவோம்.

அனைவருக்கும் போகி வாழ்த்துக்கள்.

செவ்வாய், 11 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து அட்டைகள் !!!

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 

இனிப்புடன் 

வெள்ளி, 7 ஜனவரி, 2022

அன்பறிவு விமர்சனம்

 அன்பறிவு விமர்சனம்

அடி, தடி  குணாதிசயங்கள் உள்ள ஒரு கதாபாத்திரம், 

பாசமாமுள்ள, பாந்தமான கதாபாத்திரம்,எங்கள் வீட்டு பிள்ளை எம்.ஜி.ஆர்  முதல் வேல் சூர்யா வரை தமிழ் சினிமா அடித்து  துவைத்த இரட்டை வேட  கதை தான் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள்  , இக்காலத்திற்கு ஏற்ற மாதிரி எடுத்துள்ளனர்.

இரு வேறு சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அவர்களின் கல்யாணம், அதை காதலை உபயோகித்து சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவன் தன்னை அதிகாரமையமாக்கி கொள்ளும் தந்திரமுள்ள வில்லன்.

பிற்காலத்தில் அவனே சாதியை வைத்து தான் சார்ந்த மக்களை பின்னோக்கி அழைத்து செல்வது என நிகழ்கால அரசியலை தன் திரைக்கதை யால் பதியவைக்கும் இயக்குனர்க்கு சபாஷ்.

2K kid ஆஸ்தான ஹீரோ ஆதி (ஹிப்ஹாப் தமிழா) கிராமத்து சண்டியர்  கதாப்பாத்திரம், 

வெளிநாட்டில் வளரும் படித்த, பாந்தமான yo-yo boy கதாபாத்திரம் என இரு வேடங்களில் தன்னால் முடிந்த பங்களிப்பை சிறப்பாக செய்கிறார்.

அம்மா-மகன் செண்டிமெண்ட் காட்சிகளில் மிளிர்கிறார். மாஸ் & கிளாஸ் intro ஆதி க்கு பொருந்துகிறது. ரஜினி ஆரம்பித்து வைத்தது இன்றும் தொடர்கிறது.

எல்லா மனிதர்களும் சமம், ஆண்ட பெருமை பேசி (கடந்த கால) கொண்டு நிகழ் காலத்தை வீணடிக்காமல் ,  படித்து பரந்து,விரிந்த உலகை பார்த்து  உன்னோடு, உன் சார்ந்தவர்களை மகிழ்ச்சியாக வைத்து கொள் என்கிறான் அன்பறிவு.

அன்பறிவு - அற்புதம்

#AnbarivuOnHotstar 

#Anbariv 

#AnbarivuReview 

#AnbarivuFestOnJan7th 

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ஆர்கானிக் உணவு வகைகள்

ஒரு காலத்தில் நெல்  சோறு(அரிசி) சாதம்  , பால் , முட்டை, அசைவ உணவு (கோழி கறி) அனைவருக்கும் கிடைக்கவில்லை பணக்காரர்களுக்கு மட்டுமே கிடைத்தது.

(காதலர் தினம் படத்தில் குணால் அப்பா கூறுவார் என்னடா படிக்கணும் ஆசை 

படற நாளைக்கு நெல்லு சோறு தின்ன ஆசை படுவ ஒழுங்கா இரு என்பார் )

பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி இந்தியாவில் தலை எடுக்கும் முன் எல்லாமே ஆர்கானிக் உணவு தான்.

அதனால் தான் அரிசி சாப்பாடு பெரிய விசயமாய் கருதப்பட்டது. 

நம் அனைவருக்கும் இப்போது கிடைக்கும் அரிசி சாப்பாடாக இருக்கட்டும், அசைவ உணவாக இருக்கட்டும், இவற்றை உண்பவர்கள் சராசரி வயது அப்போது ஆர்கானிக்காக இருந்த காலத்தின் சராசரி வயதை விட இப்போது கூடுதலாகத்தானிருக்கிறது.

என் பாட்டி காலத்தில் வீட்டிற்கு சில பிள்ளைகள் இறந்து கொண்டே தான் இருக்கும். 

ஒப்பீட்டளவில் இந்த மரணம் எல்லாம் குறைந்துள்ளன.

ஆர்கானிக் என்பது இப்போதய வெற்றிகரமான வியாபாரம் மேலும்,

 மக்களிடையே ஒரு பாகுபாட்டைக் கொண்டு வரும் ஆயுதமும் ஆகும்.

அதனால் நமக்கு கிடைத்த உணவை நன்கு உண்டு இன்புற்றிருக்கலாம்.