செவ்வாய், 22 நவம்பர், 2022

மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் சாலை

 சில நாட்களுக்கு முன் நடந்தது.

வழக்கமாக செல்லும் office Bus இல் ,  நானும் என் நண்பரும் செல்கையில் அன்று ஏனோ அனைத்து சீட் களும் நிரம்பியது , காலை trip என்பதால் வேறு சில நிறுத்தங்களிலும் driver நிறுத்தியதால் நான்கைந்து நபர்கள் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. 

ஒரு சிலரோ அடுத்த பஸ் ஸ்டாப்பிங் இறங்கி வேறு பஸ்சில்  ஏறி கொள்வர் இவர்கள் ஏனோ செய்யவில்லை. 5 பேரில் இருவர் எங்கள் சீட் அருகே நின்று கொண்டிருந்தனர் ,இருவரும் பெண்கள். அன்று மேடைவாக்கம்-சோழிங்கநல்லூர் செம ட்ராபிக். 

வெகு நேரமாக பேருந்து நகரவில்லை , அதில் ஒரு பெண்ணால் நிற்க முடியவில்லை என்பது பட்டுவர்த்தனமாக தெரிந்தது.  என் நண்பரை பார்த்தேன் , அடுத்த கனமே தெரிந்து விட்டது நான் என்ன செய்ய போகிறேன் என்று இருவரும் எழுந்து விட்டோம் அவர்களை அமர சொன்னோம். 

It's ok no problem என்ற வார்த்தைகள் , அட உட்காருங்க ஜீ என்றவுடன் இருவரும் அமர்ந்தனர்.  நானும் , என் நண்பரும் நின்று கொண்டு driver play பண்ணின இசை மழையில் மிதக்க என் நண்பர் என்னை எரிக்கும் பார்வையில் பார்த்தார். 

இனிமேல் உங்களை நான் பக்கத்தில் உட்கார வைக்க மாட்டேன் என்றார் , தலைவரே விடுங்க ladies , செண்டிமெண்ட் அப்படி என்று இழுத்தேன். இங்கே இந்த பஸ் எத்தனை பெண்கள் உள்ளனர் அவர்கள் இடம் கொடுத்தார்களா என்ற போது என்னிடம் பதில் இல்லை .  வருங்காலங்களில் மாறும் என்று நம்பிக்கையோடு பயணிப்போம். 

#officebus #omr #chennaitraffic #trafficupdate #Travel #womens

இவன்

ராஜா.க

திங்கள், 14 நவம்பர், 2022

காந்தாரா என் பார்வையில் !!

 மனிதன் தான் கடவுள் , கடவுள் தான் மனிதன். கடவுள் மனிதனிடம் , 

தான் கூறியதை நிறைவேற்றியதை போல நீ கூறியதை நிறைவேற்று என கூறி தன்னை நம்பிய மக்களை எப்படி காப்பறினார் கடவுள் என்பது தான் காந்தாரா..

மலை வாழ் மக்கள் அவர்களுக்கு என ஒரு கடவுள் , அந்த கடவுள் என்னோடு வர வேண்டும் என ராஜா ஒருவர் கேட்க ? அதற்கு அந்த கடவுள, என் மக்களுக்கு என்ன என்ன கொடுப்பாய் என பதிலுக்கு கேட்க ? தனக்கு சொந்தமான இந்த நிலங்களை தருகிறேன் என கூறுகிறார்.

பேராசை கொண்ட மனிதன் தானே , ராஜாவின் அடுத்த தலைமுறை வாரிசுகள் கொடுத்த இடத்தை கேட்கிறார்கள்.

 எப்படி கடவுள் ?(மனிதர்கள் ,கோ , அரசு) காப்பாற்றினார் என்பதை சுவாரஸ்யமான திரைகதையால் 

படம் முழுக்க அந்த கிராம மக்களுடன் வாழும் உணர்வை பெருகிறோம். 

கமல் கூறுவார் சினிமாவே ஒரு மொழி தானே அந்த மாதிரி (கன்னடம் , துளு) என்று சில இடங்களில் பேசினாலும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது , கன்னட மக்களின் விளையாட்டு , அவர்கள் சாமி கும்பிடும் முறை அனைத்தும் தமிழ்நாடு மக்களோடு ஒத்துப்போகும் படியாக உள்ளதால் என்னவோ படத்தோடு ஒண்றிக்கொள்ள முடிகிறது.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் படம் பார்க்கும் போது அவர்களின் சிறு வயதில் கேட்ட கதைகள் பார்த்த மனிதர்கள் கதாப்பாத்திரமாக வருவார்கள். இறுதி காட்சி எல்லாம் மெய் சிலிர்த்து போகும் அளவுக்கான நடிப்பு , கடவுளின் உடல் மொழி கிராமத்து மக்களை அரசிடம் ஒப்படைத்து விடுவது போல அமைத்திருப்பது மயிர்கூச்சரியும் காட்சி (goosebumps). படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது படத்தின் தாக்கம் சிறுது நேரம் இருக்க வேண்டும் இருந்தது.

கொசுறு தகவல்:  Night Show பார்த்துவிட்டு பைக்கில் செல்கையில் 7 எட்டு நாய்கள் அருகில் செல்கையில் காந்தார மாதிரி ஓஓஓஓஓஓம்ம்ம் என்றேன் நாய்கள் தெறிந்து ஓடியது 😲😀😂

#Kantara #Kantaramovie 

இவன்

ராஜா க

சனி, 12 நவம்பர், 2022

குடிகாரருடன் ஒரு பயணம் !!

 இந்த மாதிரி கதை எழுத எனக்கு inspiration @Sollakudatham இவரை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறோம் என்று கூறிவிட்டு கதைக்கு செல்வோம்.

திட்டமிடா பயணம் என்பதால் இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை @redBus_in உதவியுடன் ticket book செய்கையில் individual sleeper சீட் , double sleeper சீட் இரண்டும் இருந்தது. 

இரண்டு seat க்கும் 75₹ வித்யாசம் தான்.

இந்த ரூபாயை மிச்சம் பிடித்து தான் ஊரப்பாகத்தில் அரை ground இடம் வாங்க போறோம் என்ற நினைப்பு அதனால் double  sleeper சீட் தான் புக் பண்ணியாச்சு.

உடன்குடி யிலிருந்து பஸ் கிழம்பும் போது நடத்துனர் call பண்ணி அண்ணே கொஞ்சம் சீக்கிரம் வந்துருங்க என்றார். திருச்செந்தூர் பஸ் ஸ்டாண்டில் இந்த பஸ்க்காகலாம் சூனா , பானா காத்திருக்க வேண்டி இருக்கு என்ற insta ரீல்ஸ் பார்த்து கொண்டே இருந்த பொழுது பஸ் வந்தது.

Busஇல் எனக்கான சீட்டில் கால் நீட்டி உடகார்ந்த போது பக்கத்து சீட் பேர்வழி வரல , இதுக்கு அப்புறம் வருவார் போலனு நினைத்து கொண்டே,  charging point வேலை செய்யுதா செக் பண்ணிட்டு மல்லாக்கா படுத்து கொண்டு வானில் நட்சத்திரங்களோடு , நகர  தொடங்கியது பயணம். தூத்துக்குடி வந்தாயிற்று.

வழக்கமாக நிற்கும் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் கடையில் பிடித்த பொறிச்ச புரோட்டா வும் இட்லி வாங்கி கொண்டு சீட்டுக்கு வந்தேன் , பஸ் கிழம்பியது பக்கத்து சீட்டு க்கு ஆள் வரவில்லை சின்ன சந்தோஷம். PS-1 பார்த்து கொண்டே டின்னர் முடித்து விட்டு படமும் ஓடியது.

பஸ் மதுரை நெருங்க தூக்கமும் எட்டி பார்த்தது. இன்னும் என்னடா படம் தூங்கு என்ற range இல் double seat comfortable தூங்கியாச்சு. 

தூங்கா நகரம் (மதுரை) வந்தது , என் தூக்கத்தை கெடுக்கும் இம்சை யும் கூடவே வர போகிறது என்று எனக்கு அப்போ தெரியல.

பக்கத்து சீட் பேர்வழி மதுரை யில் ஏறினார் , சோகம் என்னன்னா படி வழியா அவரால எற முடியல அந்த அளவுக்கு மது வோடு இணக்கம் போல , இணைந்த கைகள் ஹீரோனு நினைப்பு எனக்கு அவரின் கையை  பிடித்து சீட்டில் அமர்ந்தார். ரொம்ப thanks பாஸ் என்றார் , பரவாயில்லை என்றேன்.

சாப்பிட நினைத்து அவர் கொண்டு வந்த பார்சலை ஓப்பன் செய்தார் ,பரோட்டா வை பிச்சு போட்டு குருமாவை எடுத்தார் , ஆண்டவன் முடிச்சை விட கடைக்காரர்கள் தான் கற்று கொண்ட மொத்த வித்தை யையும் காட்டி கஷ்டமான முடிச்சு போட்டுருப்பார் போல , அண்ணே கொஞ்சம் பிரிச்சி கொடுங்க என்றார். 

சரி பொறுமையா

அந்த ரப்பர் பேண்டை கழட்டி கொடுத்தேன் , சோகம் என்னன்னா நமக்கு இந்த மாதிரி நடக்கும் போது எரிச்சல் வரும் அடுத்தவர்களுக்கு என்று வரும் போது பொறுமை யா கை ஆள்வோம் அது தான் டிசைன் போல. இந்த உதவிக்கும் ரொம்ப thanks அண்ணே என்றார். அட இருக்கட்டும் என்றேன்.

தூங்க தொடங்கினேன். பக்கத்து சீட் பேர்வழி சாப்பிட்டு விட்டு போனில் சத்தமாக பேச தொடங்கினார் , ரைட்டு இன்று நம் தூக்கம் அவ்ளோ தான் போல என்று நினைத்தேன். பேசி முடித்து விட்டு lover  அண்ணே , புரிஞ்சுக்கவே மாட்டிக்கிறா என்னை என்று காதல் கதை சொல்ல ஆரம்பித்து விட்டான் அந்த தம்பி.

அடேய் போதும் டா , என்னை தூங்கவிடு தம்பி என்று மனதுக்குள் சொல்லி கொண்டேன். அழ ஆரம்பித்தான் ஒரு வழியா மனதில் உள்ளதை எல்லாம் சொல்லி விட்டு அப்படியே தூங்கி விட்டார் அந்த குடிகாரர் தம்பி. இந்த மாதிரி காலேஜ் days என் நண்பர்கள் செய்வது ஏன் நினைவுக்கு வந்தது.

காதல் இன்னும் இவ்வுலகில் உயிர்ப்போடு உள்ளது தான் போல அதை நினைத்து கொண்டு ,  சிரித்து கொண்டே தூங்க தொடங்கினேன். திடீரென ஒரு சத்தம் , ஆம் குறட்டை சத்தம் , தம்பி பயங்கரமா குறட்டை விட்டு கொண்டே அவரின் கைகளை என் மீது போட்டார் , அவரின் கைகளை தள்ளி விட்டேன்.

ஆனால் குறட்டை சத்தம் தொடர்ந்து ஒலித்தது. எனக்கு தூக்கம் எல்லாம் பல கிலோமீட்டர் க்கு அப்பால் சென்று விட்டது. இனிமேல் இந்த மாதிரி சீட் புக் பண்ணுவ என எனக்கு நானே கேட்டு கொண்டேன். ஒரு வழியா தூங்கி எழுகையில் கூடுவாஞ்செரி அருகில் பஸ் சென்றது.

சுதாரித்து எழுந்து கொண்டு பக்கத்து சீட் தம்பியை எழுப்பினேன் ,  அவர் எழுந்து அண்ணே ரொம்ப thanks என்றார் சிரித்து கொண்டே வண்டலூர் இறங்கி கொண்டேன். காலங்கள் மாறினாலும் சில காட்சிகள் இன்னும் மாறவில்லை. கதைகள் தொடரும் ..

#travel  #Travelexperience #journey 

இவண் 

ராஜா. க