புதன், 28 ஜூன், 2023

கருப்பட்டி காஃபி யும் நானும் !!

 வழக்கமாக செல்லும் காஃபி கடைக்கு சென்றேன் , சின்ன ஏமாற்றம் கடை புட்டியிருந்தது. நாம ரெண்டு , மூன்று நாள் சென்னையில் இல்லாட்டி என்னலாம் நடக்கும் போலயே , யாரு கேட்டு சேட்டன் லீவு போட்டார் ? என யோசித்து கொண்டே பக்கத்து கடைக்கு படையெடுத்தேன்.

பல நாள் செல்ல வேண்டும் என நினைத்த கடை , ஆனால் சேட்டனுக்கும் நமக்கும் உள்ள நட்ப்பிற்காக செல்ல முடியாமல் இருந்தது.

இன்று தான் நேரம் அமைந்தது என்று நினைத்து கொண்டு மாஸ்டரிடம் ஒரு காஃபி என்றேன் , டோக்கன் போடுங்க என்றார். பாருடா , வடிவேலு பாணியில் எங்களுக்கே டோக்கனா என்று பார்த்தேன் ,

அந்த மாஸ்டர் பார்வை யாரா இருந்தாலும் டோக்கன் என்பது போல இருந்தது. கல்லா பெட்டியில் இருந்தவரிடம் ஒரு காஃபி என கேட்க 25₹ என கூறினார். எதே , அதே வடிவேலு லுக் காஃபி 15 ₹ தானே என கூற , சார் , இங்கு நாட்டு சர்க்கரை தான் உப்யோகிப்போம் என்றார் , நான் இல்லை எனக்கு நார்மல் சுகர் போடுங்க என்றேன் , அது நம்மிடம் இல்லை என்றார்.

சரி , ஆனால் நமக்கு இது டெய்லி சரி பட்டு வராதே என கூறி பக்கத்து கடை என்ன பூட்டி கிடைக்கு என்றேன் ? சார் இன்று பக்ரீத் அதனால் விடுமுறை என்றார். ஓகோ ?என்றேன் , உங்களுக்கு வேணும்னா நான் மினி காஃபி தருகிறேன் அது 15₹ என்றார். ஓ , நன்றி என்றேன்.

உங்களை நான் டெய்லி பார்ப்பேன் , எங்கள் கடையை கடந்து தான் பக்கத்து கடைக்கு சென்று உங்கள் பஸ் வருகிறதா என்று பார்த்து கொண்டே ஸ்டைலாக காஃபி குடிப்பதை பார்த்துள்ளேன் என்றார். புதுப்பேட்டை அன்பு மாதிரி முகத்தை வைத்து கொண்டு மினி காஃபி ஆர்டர் போட்டேன்.

டோக்கன் மாஸ்டர் கொடுத்தேன். நாட்டு சர்க்கரை காஃபி வந்தது முதல் முறை பருகினேன் , ஒரு மாதிரி கசப்பாக இருந்தது , என்னப்பா இது அவ்ளோ buildup இதுக்கு ஆனால் இப்படி உள்ளதே என்று , எஸ்ட்ரா சுகர் கொடுங்க என்று கேட்டு வாங்கி பருகினேன்.ஹம் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை ,

ஒரு வேளை டெய்லி குடித்தால் செட் ஆகுமோ ? Anyhow , நாளைக்கு நம்ம சேட்டன் வந்து விடுவார் என்ற நம்பிக்கை யில் நடையை கட்டினேன். சேட்டனுக்கும் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். #HappyEid 

#goodmorning #thursdayvibes

வெள்ளி, 23 ஜூன், 2023

திருநெல்வேலி சீமையிலே

 90களில் #SunTV philips super 10 என்று பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது.

Anchor Priya தொகுத்து வழங்குவார். சீவலப்பேரி பாண்டி படம் வரும் முன் ரஜினியின் வீரா முதல் இடத்தில் இருந்தது. இப்படம் ரிலீசுக்கு பிறகு தொடர்ந்து பல வாரங்கள் இப்படம் முதல் இடம் பிடித்தது. 

ஆதித்யன் இசையில் பாடல்கள் எல்லாம் செமயா இருக்கும். அனைத்து பாடல்களும் ஹிட். குறிப்பா ஒயிலா பாடும் பாட்டிலே இந்த பாடலில் அவ்ளோ instrument உபயோக படித்தியிருப்பார். Walkman கேட்க்கும் போது அருமையா இருந்தது. நடிகர் நெப்போலியன் க்கு மிக பெரிய திருப்பு முனை. 

ஜாதி யால் ஒரு மனிதன் எப்படி திசைமாறி , அவன் வாழ்க்கையை புரட்டி போட்டது என்பதை தெளிவான திரைக்கதை யால் உணர்தியிருப்பார் இயக்குனர். குறிப்பாக நெப்போலியன் தன்னை சுடும் முன் பேசும் வசனம் சாதிக்கு சாட்டை யடி. ஆனால் சில மக்கள் என்னவோ அவர் மீசை யை முறுக்கியத்தை பார்த்து பெருமை கொண்டனர். 

சரண்டா , நிழல்கள் ரவி சார்லி வைத்து 

தனி காமெடி track , பக்கா கமர்ஷியல் & Hit படம். 

@CINEMANEWS_24

#TamilCinema #நெப்போலியன் #சீவலப்பேரிபாண்டி

இவன் 

ராஜா.க

வியாழன், 22 ஜூன், 2023

இட்லியும் , இரவு உணவும்

 Night 10 மணிக்கு பஸ் 

#சென்னை - #திருச்சி highway இல் திண்டிவனத்தில் உள்ள ஐஸ்வர்யா பவன் dinner க்கு நிப்பாட்டினாங்க. சரி பார்க்க ஹோட்டல் நல்லா இருக்கே உள்ள போய் ஏதாவது try பண்ணுவோம் னு , உள்ளே போனேன். ஹோட்டல் environment  செமயா இருந்தது. 

எந்த ஹோட்டல் போனாலும் முதலில் சோதனை செய்வது #இட்லி யை வைத்து தான் , ஒரு பிளேட் இட்லி என்று சொல்ல கொண்டு வந்தார். நாம் நினைத்தது எங்க சூடா இருக்கும் போது என்று , ஆனால் வந்தது என்னவோ சும்மா ஆவி பறக்க இட்லி தொட்டு கொள்ள மூன்று வகையான சட்னி (தேங்காய் , தக்காளி , கொத்தமல்லி )

சாம்பாரை டேபிள் வைத்து சூடு படுத்தி கொடுத்தனர். அட ,இது நல்லா இருக்கே என்று சில நிமிடங்கள் சூடான சாம்பார் உதவுயிடன் இட்லி யை முடித்து தோசை. கவுண்டமணி - சத்யராஜிடம்  சொல்வது போல பேப்பர் ரோஸ்ட் போல ரொம்ப லேசாக இருந்தது. பேப்பர் ரோஸ்ட் க்கு லிவர் க்கு நல்லது போல என்று கூறி கொண்டே

தோசை முடித்து , அடுத்து சூடா காஃபி , நல்லாவே இருந்தது. விலை பயங்கரமா இருக்கும் என நினைத்தேன். ஆனால் விலை என்னவோ நினைத்ததை விட கம்மி தான். சென்னை to திருச்சி செல்லும் வழியில் திண்டிவனம் ஐஸ்வர்யா பவன் தாராளமாக செல்லலாம். 

#Chennai

#ஐஸ்வர்யாபவன் #திண்டிவனம்

ஞாயிறு, 18 ஜூன், 2023

வேலையும் , காபியும்

 தினமும் ஒரு பக்கம் எழுத வேண்டும் என்ற சிறு கொள்கையை இன்று முதல் கடைபிடிக்க உள்ளதால் , என் முதல் ஓரு பக்க உரை.

இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தேன் , இங்கு தான் இரவு தவிர உலகில் எங்கோ ஒரு மூலையில் விடிந்திருக்கும்.ஒரு படியாக வேலையை சிறப்பாக செய்து முடித்தோம் என்கிற சிறு மகிழ்ச்சி யுடன் அலுவலக் கேண்டின் க்குள் சென்றேன்.

அதிகாலை என்பதால் என்னவோ கலர் , கலர் இருக்கைகள் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள் என்கிற தொனியில் என்னை பார்த்து புன்முறுவல் பூத்தது. தானியங்கியை தொட்டு உயிர் கொடுத்தேன். பில்டர் காபி தானே வேண்டும் என்பது போல மெனுவில் காபி க்கு முதல் மரியாதை கொடுக்க பட்டிருந்தது.

ஆர்டர் செய்தேன் ,  payment செய்கையில் புதிய இந்தியாவின்  டிஜிட்டல் முறை "உன் வங்கி server temporary not available என்று " புத்திக்கு எட்டும் படி எடுத்துரைத்தது. வழக்கமாக செல்லும் உணவகம் அந்த உரிமையாளர் பழைய இந்தியா வின் மனிதர் தான் ஆதலால் தான் என்னவோ பிறகு பணம் கொடுங்கள் என்று கூறி. 

பழைய இந்தியா பாணியில் பேப்பரில் காபி என எழுதி கொடுத்தார். பணத்தோடு , சில மனிதர்களையும் சம்பாதித்து உள்ளோம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டே நுரை ததும்ப கொடுத்த காஃபி யை  பருகி என் வயிற்று க்கு 8 மணி நேரம் கழித்து வேலை கொடுத்தேன்.

பின் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி டூவிலர் பயணத்தை தொடங்கினேன் ,என்னப்பா ராஜா நேற்று இரவே வருவாய் என்று நினைத்தேன் காலையில் தான் வருகிறாய் என்று டூவீலர் என்னை கிண்டலாக கேட்டது. சாவியால் அதற்கு உயிர் கொடுத்து அதன் காதுகளை என் கையால் பிடித்து முறுக்கினேன் , டேய் வழக்கமாக மெதுவாக தானே செல்வாய் இன்று ஏன் வேகம் என டூவீலர் கேட்டது போல உணர்ந்தேன். 

உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக தான் சொல்லும் அதனால் மெதுவாக வே சென்றேன் , ஒரு கட்டத்தில் இரண்டு வினாடிகள் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.

சின்ன பயம் தொற்றி கொண்டது ,இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது இப்போதே tired ஆனால் எப்படி என்று நினைத்து கொண்டு , பிறகு சற்று சுதாரித்து  மிகவும் மெதுவாக சென்று ஒரு டீ கடையில் சற்று நிறுத்தி முகத்தை தண்ணீரால் துடைத்து மற்றோரு காபி யை குடித்து சற்று இளைப்பாறினேன். சில பல ரூபாய் நோட்டுக்கள் என்றோ என் Bag இல் இருந்தது உதவியது.

தம்பி அண்ணனை பத்திரமா வீடு கொண்டு சேர்த்து விடு என்று டூவீலர் கூறினேன். வா , வா பார்த்துக்கலாம் என்று கூறி கொண்டு சற்று உற்சாக மாக பயணப்பட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். 

தொடர்ந்து எழுதுவோம்.

செவ்வாய், 6 ஜூன், 2023

கார்கில் போரும் , ஷாஜகான் பாடலும்

 கவிஞர் #வைரமுத்து விஜய் நடித்த #ஷாஜஹான் படத்தில் 

காதல் ஒரு தனி கட்சி  கொடியேத்து எத்து

காதல் ஒரு வாக்குறுதி  நிறைவேத்து எத்து என ஒரு

பாடலில் 

இப்படி ஒரு வரி எழுதியிருப்பார்.

கார்கிலை வெற்றி கொண்டது

நம் பாரத படை அல்லவா

மெய் காதலை வெற்றி கொள்வது எங்கள் காவலர் படை அல்லவா என்று எழுதியிருப்பார்.

1999-ல் பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் #இந்தியா வெற்றி பெற்றது.#ஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். 

வரலாற்று நிகழ்வுகளை தன் பாடலில் மறக்காமல் சேர்பவர் எங்கள் கள்ளி காட்டு கவிஞர். #வைரமுத்து