திங்கள், 31 ஜூலை, 2017

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே 👑

எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே  👑

மோடி அரசின்  சமீபத்திய பரிசுகளான
வரி ஏற்றம், சிலிண்டர் மாணியம் ரத்து, ரேஷன் பொருட்களுக்கு கடுமையான கெடுபிடி இதை அனைத்தையும் தாங்கி கொண்டு  வழக்கம் போல வலித்தாலும் சிரித்து கொண்டே தன் அடுத்த வேலைக்கு தயாராவது
"மிடில்க்ளாஸ் மாதவன்களே"..

நாளை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இந்த திட்டத்தை கடைபிடிப்பார்களே தவிர ஒரு போதும் ரத்து செய்ய மாட்டார்கள். இன்றைக்கு உள்ள பெரும்பாலான திட்டங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட  பெருமை அவர்களுக்கே..

சிந்தாந்த ரீதியில் வேண்டுமானால் இந்த இரு கட்சிகளுக்கும் வேறுபாடு உண்டே தவிர பொருளாதார கொள்கையில் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளே !!!

இந்த பதிவை படிக்கும் என் நண்பர்களில் சிலர் நீ தான "மோடி மோடினு "கூவின என்று முணுமுணுப்பது கேட்கிறது..

ஆட்சி,அதிகாரத்திற்கு வரும் எவராவது மக்களுக்கு நல்ல திட்டம் திட்டி அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த மாட்டார்களா ?? என ஏங்கி கொண்டு கடைசியில் ஏமாற்றத்தை பரிசாக வாங்கி கொள்ளும் நாட்டின் குடிமகன்களின் நானும் ஒருவன்..

ஏழ்மையை ஒழிப்பேன்,
ஏழ்மையை ஒழிப்பேன்..
என உரக்க கூறியது
ஏழைகளை ஒழித்து விட்டால் ஏழ்மை ஒழிந்து விடும் என்ற உயர்ந்த சிந்தனை போலும்...

நாட்டை ஆளும் அரசன் கை விட்டதால் நாட்டில் உள்ள நாம் அனைவரும் மன்னர்களே !!! இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுக்கும் கொள்கை

எது நம்மிடம் தேவைக்கு அதிகமாக உள்ளதோ அது பணமாக இருக்கட்டும்,அறிவாக இருக்கட்டும் அதை இல்லாதவர்களுக்கு கொடுத்து மகிழ்வுற்று இருப்பதே !!!

இந்த கொள்கைக்கு சட்டமும் கிடையாது பின்பற்ற கூறி சட்டத்தின் காவலர்களும் கிடையாது நம் மனதும்,அறிவும் தான் நம்முள் உள்ள காவலர்கள் அவர்களை நம்மை தவிர யாராலும் ஏமாற்ற முடியாது.
ஏமாற்றுவதர்களுக்கு நாம்
அரசியல்(வியா)வாதிகள் அல்ல .....

புதன், 26 ஜூலை, 2017

நவீன இராமயணம்

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை,
நிரந்தர நண்பனும் இல்லை என்ற
 "புது மொழி" யை நிருபித்திருக்கிறார் திரு.நிதிஷ்குமார்.

ஆட்சி,அதிகாரம் மத்தியில் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களிலும் "தாமரை" யை மலர வைக்கும் ஒற்றை இலக்குடன் வேகமாக நடந்து கொண்டிருக்கும் "பாஜக" வின் சாணக்கியர் திரு.அமித்ஷா விற்கு கிடைத்த அடுத்த வெற்றி.

மத்தியில் தனக்கு கிடைத்த அங்கிகார்த்தை மோடி (பாஜக) செவ்வனே பயன்படுத்தி கொள்கிறது CBI உட்பட.

 தன் சிந்தாந்தங்களுடன் ஒத்து போகும் கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்தி எதிர்கட்சிகளின் பலத்தை "வாலி"யை போல் தனக்கு சாதகமாக்கி கொண்டு 
ராமர் களையும், சுக்கிரவர்களையும், அனுமன்களையும் சேர விடாமல்   நவீன இராமயணத்தை அரங்கேற்றி வருகிறது.

25 வருட கூட்டணியாம் சிவசேனா வை நட்டாற்றில் நிற்க விட்டு இன்று அவர்கள் தயவுடனே மகாராஷ்ட்ரா வில் ஆட்சியில் உள்ள பாஜக விற்கு நிதிஷ் எல்லாம் ஒரு பொருட்டே இல்லை

நடக்கும் அரசியல் திருவிளையாட்டுகளை நாட்டின் மக்களை போன்று எதிர்கட்சியான காங்கிரஸ் வேடிக்கை பார்ப்பது தான் காலக்கொடுமை.

RSS நூற்றாண்டு வருடமான 2025 இல் தன் சிந்தாந்தமான ஓற்றை கட்சி ஆட்சி முறையை பாரதத்தில் நிலை நாட்டுமா ???

அலசுவோம் அரசியலை ....

செவ்வாய், 11 ஜூலை, 2017

அமர்நாத் யாத்ரையும் மத சார்பற்ற கட்சிகளின் அமைதியும்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமர்நாத் யாத்திரை சென்று கொண்டிருந்த யாத்திரிகர்கள் மீது  தீவிரவாதிகள்  தாக்குதல் 9 பேர் பலி.

மோடியின்  ஆட்சியில் மனிதனின் சாப்பாடு  உரிமைக்காக கோலி சோடாவைப் போல் பொங்கும்  தலைவர்களின் தலை களை அம்மனித உயிர்களே பலியாகும் பொழுது ஆழ்ந்த நித்திரையில் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

ஒரு வேளை யாத்ரிகர்கள் குஜராத், மகாராஷ்டிரா போன்ற பாஜக ஆளும்
மாநிலத்தை சேர்ந்த குடிமக்கள் என்பதலா ?

இல்லை

அவர்களுக்கு ஆறுதல் கூற BJP இருக்கிறது நமக்கெதற்கு வம்பு என்பதலா ?

இல்லை

மத்திய கிழக்கு நாடுகளுக்கு புனித பயணம் மேற்கொண்டால் தான் நாங்கள் உற்று நோக்குவோம்,உரக்க குரல் கொடுபோம் என்ற உயரிய சிந்தனையா ?

இந்தியாவின் பன்முக தன்மை  சிதையாமலும் ஜனநாயக நாடாக தலைநிமர வைக்க உதவுவது
மதசார்பற்ற பெரும்பான்மை மக்கள் இங்கு வசிப்பதால் தான். இக்கட்சிகளின் செயல்பாட்டால் அவர்களும் "மதம்" பிடித்த "யானை" கள் ஆகிவிட கூடாது என்பதே அனைவரின் விருப்பமும்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் "மதசார்பற்ற" மக்களாக இருப்பதாலயே பிராந்திய கட்சிகளும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களும் சில மாநில ஆளுகின்றனர்.

இத் தாக்குதலுக்கு  கண்டனம் கூட தெரிவிக்காத காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்,மற்றும் ஏனைய கட்சிகள் மத சார்பற்ற கட்சிகள் என்றால், BJP மதவாத கட்சியாகவே இருந்து விட்டு போகட்டும்.

இந்த கட்சிகளின் கொள்கைகளையும்,சிந்தாந்தங்களையும் மாற்றி கொள்ளாவிட்டால் பாஜக வின் விருப்பமான காங்கிரஸ் இல்லா "பாரதம்" விரைவில் உருவாவதே காலத்தின் கட்டாயம்.