வெள்ளி, 25 மார்ச், 2022

RRR என் பார்வையில்

 RRR

சினிமா என்பது ஒரு கண் கட்டி வித்தை, பார்க்கும் நம் இரு கண்களை  ஒரு மூன்று மணி நேரம் கட்டி போட்டு திரையில் வரும் காட்சிகளோடு நம்மை பயணிக்க வைப்பது. சில  திரைப்படங்கள் பார்த்து விட்டு தியேட்டர் விட்டு வெளியேறிய பின்பும் சில காட்சிகள் நம் மன திரையில் ஒடும் அப்படி யுள்ள படங்கள் காலத்தால் அழியாத கோலங்கள்.

ராம் சரண், ஜூனியர் NTR  நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் 

வெளிவந்துள்ள திரைப்படம்

RRR .

சமீப காலமாக சினிமாவில் கதை பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்றெல்லாம் ஒரு பேச்சு அடிபடும் எனக்கு அதில் பெரும்பாலும் உடன்பாடு கிடையாது, ஏனென்றால் நம் வாழும் வாழ்க்கை நம்மை சுற்றியுள்ள மனிதர்கள் என ஒவ்வொன்றும் வித்தியாசமானது அதை வைத்தே ஆயிரமாயிரம் கதை எழுதலாம் மேலும் நம் இந்தியா வில் பிறந்ததுநாளோ என்னவோ ராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம், மணிமேகலை என இதிகாசங்களை கேட்டு வளர்ந்து இருப்போம்.

இன்னும் சொல்ல போனால் ராமாயணம், மகாபாரதம் போன்ற வற்றில் உள்ள கிளை கதைகள் மட்டுமே ஆயிரத்துக்கும் மேல் அதில் உள்ள ஒரு கிளை கதையை வைத்து சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் இன்றைய technology உபயோகித்து திரையில் நம் கண்களுக்கு விருந்து படைக்கலாம்.

இந்த இதிகாசங்களில் உள்ள ஒரு வரி கதை யை நிகழ் காலத்தில் நம் சந்திந்த நாம் பார்த்த மனிதர்களோடு இணைத்து ஒரு கதையை கையில் எடுத்து அதை தொய்வில்லாமல் நகர்த்தும் திரைக்கதை அமைத்தால் அப்படம் வெற்றியே.

சுதந்திரத்திற்கு முன் இந்தியா வில் உள்ள ஒரு  மலைவாழ் கிராமம் அங்குள்ள சிறு பிள்ளையை (மல்லி) அவளின் குடும்பத்தினர் சம்மதம் இல்லாமல் பிரிட்டிஷார் மனைவி மல்லியை இழுத்து செல்கிறாள் அவளை அந்த கிராமத்து காப்பான் ஒருவன் எப்படி மீட்க போகிறான் இது ஒரு கதை.

பிரிட்டிஷாரின் போலீஸ் பணியில் சேர்ந்து மிக உயர்ந்த பொறுப்பான உச்ச காவல் அதிகாரி யாக விரும்பும் ஒரு இந்திய இளைஞன் அவன் ஏன் அந்த பணியில் சேர விரும்பினான் ? அதற்காக அவன் என்னவெல்லாம் செய்தான் , எதற்காக இதை செய்கிறான் இது ஒரு கதை.

இந்த இரு கதையில் உள்ள நாயகர்கள் ஒரு மைய புள்ளியில் இணைந்து அவர்கள் எவ்வாறு வெற்றி இலக்கை அடைந்தார்கள் என்பதை 3 மணி நேரம் மிக சுவாரஸ்யமான திரைக்கதை யால்  நகைச்சுவை, பாசம்,நட்பு, காதல்,துரோகம்,தேசம்,

விடுதலை என எல்லாம் கலந்து நம் கவலைகளை மறக்க செய்து இவ்வளவு கஷ்டப்பட்டா நமக்கு சுதந்திரம் கிடைத்தது என நம்மை நினைக்க வைத்து வெற்றி பெறுகிறார் இயக்குனர்.

ராம் சரண், ஜூனியர் NTR இவர்களின் அசாத்திய உடற் கட்டு இவர்கள் எதிரிகளை துவம்சம் செய்யும் போதெல்லாம் இதெல்லாம்  சாத்தியம் தான் என் நம்மை நினைக்க வைப்பது தான் கதாபாத்திரங்கள் வெற்றி அதை செவ்வனே செய்துள்ளார்கள் இருவரும்.

முதல் பாதியில் junior NTR நடிப்பு, நடனம்,சண்டை காட்சிகள், கண்ணீர் என ஸ்கோர் செய்கிறார், இரண்டாம் பாதியில் ராம் சரண்  ஸ்கோர் செய்கிறார்  அதிலும் அவரின் தோற்றமும், வில் ஏந்தி ராமனாக வே நம் கண்களில் தோன்றி வெள்ளை காரர்களை வதம் செய்வதெல்லாம் மயிற்கூச்சரியும் காட்சிகள்.

ராம்சரனை கண்டதும் அவரின் காதலி சீதா கொடுத்த டாலரை NTR கொடுப்பது அழகிய ஹைக்கூ ❤️❤️

ராமனுக்கு (ராம் சரன் ) உதவியாக பீம் (Junior NTR) இருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் பரபரப்பின் உச்சம். (சொல்லப்போனா சில்லறைகளை சிதற விடும் காட்சிகள்)

மதன் கார்கியின் வசனங்கள் துப்பாக்கி யில் இருந்து வரும் தோட்டாகள் ரகம் (வைரமுத்து மகன் ஆயிற்றே).

இரண்டு கதாபாத்திரங்களும் சம அளவில் பங்கு கொடுத்தற்கே இயக்குனர்க்கு சபாஷ்.பாடல்களும் சரி ,பிண்ணனி இசையும் சரி படத்திற்கு மிக பெரிய பலம்.

அசுரன்  போன்ற படங்களுக்கு சென்று அப்படத்தை பார்த்து கலைஞர்களை  ஊக்குவித்த மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இது போன்ற சுதந்திர த்தை போற்றும் திரைப்படங்களுக்கும் சென்று ஊக்குவித்தால் அனைத்து மக்களுக்கும் இது சென்றடையும் அனைவரும் மகிழ்ச்சி அடைவர்.

ராஜமௌலி சார் உங்கள் திரைப்படத்தில் இன்னொரு மணிமகுடம் இந்த RRR வாழ்த்துக்கள்  ❤️❤️❤️

#RRR 

ரசிகன்

ராஜா.க

செவ்வாய், 8 மார்ச், 2022

தூளான பொங்கல்

தூள் !!!

பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்பே படம் ரிலீஸ்.

#நெல்லை பூர்ணகலா தியேட்டரில் நண்பர்களுடன் பார்க்க சென்றாகிவிட்டது. Online இல்லாத காலகட்டம் மேட்னி ஷோக்கு கூட்டம் அப்படி, இப்பிடி னு நண்பன் டிக்கெட் வாங்கிவிட்டான்.

 #தில் இன் தில்லான வெற்றிக்கு பின்  தரணி-#விக்ரம் இணைகிறார் கள் இரண்டாவது முறை ஏகப்பட்ட எதிர்பார்ப்பு,

 #வித்யாசாகர் துள்ளாளன இசை, பாட்டு எல்லாம் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

கேசட்டுகள் புழக்கத்தில் இருந்த நேரம்.

 கொடுவா மீசை, 

சோக்கே சோக்கே பாடல் ,ஆசை ஆசை ,  சிங்கம் போல நடந்து வராண்டி பாட்டுடன் கூடிய சண்டை காட்சி, என அனைத்து பாடல்களும் ஹிட்.

 ஜோ,ரீமாசென் இரண்டு கதாநாயகிகள், விவேக் காமெடி, பசுபதி , சொர்ணக்கா மிரட்டல்  வில்லத்தனம், ஷகிலா வின் கெஸ்ட் அப்பியிரன்ஸ் 

தரணி யின் சின்ன,சின்ன டிவிஸ்டிங்க் திரைக்கதை,  என பக்கா மசாலா திரைப்படம். அதனால் தான் என்னவோ நான்கு நாட்களுக்கு

பின்பு பொங்கல் க்கு வெளி வந்த அன்பேசிவம், வசீகரா என்ற இரண்டு நல்ல படங்களும் 

#தூள் என்னும் சுனாமியால் அடித்து வெளியேறப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் #சீயான் தமிழ்சினிமாவின் வசூல் தாதா, இந்த படத்தின் நூறு நாட்கள் வெற்றி க்கு பிறகு #சாமி என்னும் படம் வெளியாக தயாராக இருந்தது #சீயான் #விக்ரம்

ஞாயிறு, 6 மார்ச், 2022

காந்தி மகான்

 மகான்  ,

விக்ரம், பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்துள்ள படம் மகான்.

 ஒரு படம் பார்த்து முடிக்கும் போது அந்த Hero character நம்மிடம் சில மணி நேரங்களாவது நாமே அந்த கதாபாத்திரமா உணரும் படி இருக்கணும்.அது தான் ஒரு சினிமா மற்றும் இயக்குனர் க்கு கிடைத்த வெற்றி, 

அந்த விதத்தில் கார்த்திக் சுப்புராஜ்  காந்தி மகான்  வெற்றி பெற்றிருக்கிறார்.

படத்தின் மிக பெரிய பலம் வசனங்கள் கத்தி போல கூர்மையானதாக உள்ளது.

எ.கா என்னை மாதிரி எந்த கொள்கையும் இல்லாம எல்லா செயல்களும் செய்து வாழ்க்கையே நடத்துவதும் தவறு,

உன்னை மாதிரி கொள்கை , கொள்கை னு அடுத்தவரின் வாழ்க்கையை கெடுப்பதும் தவறு இரண்டுமே extreme.

கார்த்திக் சுப்புராஜ் ட்ரெண்ட் மார்க் திரைக்கதை யில் நிகழும் சின்ன சின்ன ட்விஸ்ட் தான்.இந்த படத்தில் அது climax தான் வருகிறது. மற்றபடி கோர்வையான திரைக்கதை படத்தை நன்றாக பயணிக்க வைக்கிறது..

விக்ரம் நடிப்பு சூப்பர் ஒரு அப்பாவாக அவரின் தவிப்பு உணர்ந்து நடித்துள்ளார்.

பாபி சிம்ஹா வும் நல்ல scope திறம் பட செய்துள்ளார்.

துருவ் மட்டும் சைக்கோ வாக மனதில் பதிகிறார்.

நல்ல கதை , திரைக்கதை தாராளமாக amazon prime பார்க்கலாம் இந்த காந்தி மகானை.