புதன், 20 ஜனவரி, 2021

வாங்க சாப்பிடலாம்

 வாங்க சாப்பிடலாம்

இம்முறை சென்றது “ஆந்திரா மெஸ்” இந்த பெயரை கேட்டாலே சாப்பாடு பிரியர்களின் கண்களில் ஒரு மகிழ்ச்சி தெரியும். குறிப்பாக Bachelorகளின் ஆபத்பாந்தவன். நாம் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு சாதம் பரிமாறுவது இதன் ஸ்பெஷல்.

 சென்னையில் பல இடங்களில் இதன் பெயர் பலகையை பார்த்திருப்போம் இந்த மெஸ் இருப்பது சென்னை Parries (பாரிமுனை,ப்ராட்வே). 

இங்கு என்ன ஸ்பெஷல் என்று பார்ப்போம். 

சைவ ஹோட்டல்கள் பல இருந்தும்  சங்கீதா,சரவணபவன்கள்,வஸந்த பவன் கள் தனித்து தெரிவது போல் பல ஆந்திரா மெஸ் இருந்தும் இதுவும் தனித்து தெரிகிறது( “Pure & Perfect authentic Andhra mess “ )அதன் சுவையே அதனை உணர்த்துகிறது.

சாப்பாடு டோக்கனை வாங்கி கொண்டால் நாம் எங்கு உட்கார வேண்டும் என்பதை ஒருவர் கூறுகிறார் சிறிது நேரம் காத்திருப்புக்கு பிறகு ஒரு அறை முழுவதும் அனைவரும் உட்காரவைக்க படுகிறார்கள். 

முதலில் வாழை இலை வைக்கபடுகிறது முறையே ஒரு பொறியல்,கூட்டு,கோங்ரா சட்னி,சாதம்,பருப்பு பொடி,நெய் என வரிசையான அணிவகுப்புகள். 

சாதத்தையும்,சட்னியையும் 

சேர்த்து கொள்ளுங்கள் என உத்தரவு பிறப்பிக்கபடுகிறது அட சாப்பிட சொல்லிகொடுப்பாங்க போலயே என்கிறது “மைண்ட்வாய்ஸ்”. சாதத்துடன்,பொடி,நெய்யுடன் அந்த கோங்ரா சட்னி சேர்கையில் இதன் கூட்டணி முதல் சுற்றில் அசாத்திய வெற்றி பெறுகிறது.

பின் நெய்யின் கூட்டோடு சாம்பாருடன் பொறியல் சேர்த்து இரண்டாவது சுற்றும்,பின் கார கொழம்பு,மோர் குழம்பு என நான்காம் சுற்றை முடித்தால் கிரிக்கெட்டில் நான்கு ரன்கள் எடுத்த திருப்தியுடன் வரலாம். இல்லை,இல்லை எனக்கு சிக்ஸர் அடிக்கும் திறமை உண்டு என்றால் இரசம்,மற்றும் தயிருடன் களத்தில் நின்று ஆடி விட்டு வரலாம்.

இங்குள்ள உள்ள பிரச்சனை என்னவென்றால் பரிமாறுபவர்களின் சிறுது சத்தம் அதிகமாக இருக்கும் மேலும் மதிய நேரம் 1.30 to  3.00 மணி கூட்டம் அதிகம் வருமென்பதால் கொஞ்சம் வேகமாக சாப்பிட வேண்டும். 

சாப்பாடு பிரியர்களின் பேட்டை 

இந்த ஆந்திர கோட்டை 

சுவையுடன் 

ராஜா.க

#Andhramess #Meals #Andhrameals 

வியாழன், 14 ஜனவரி, 2021

ராஜாஜீயும், சுஜாதவும்

 நண்பன் ஓருவன் எழுத்தாளர் உங்கள் சுஜாதாவிற்கும் இனப்பற்று உள்ளது என்று கூறினேன்..

எப்படி கூறுகிறாய் என கேட்டதற்கு ?

முதல்வன் திரைப்படத்தில் ஓரு காட்சியில் அர்ஜூன் தந்தை உனக்கு ராஜாஜி ஜாதகம் என கூறுவார். எத்தனையோ தலைவர்கள் இருக்கையில் ஏன் இராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் என்று கேட்டான்?

அந்த காட்சியில் ஏன் ராஜாஜி பெயரை உபயோகபடுத்தினார் சுஜாதா? இதற்கு சற்று சிந்தித்தால் விடை கிடைக்கும்.. உன் கூற்று படி அண்ணா,காமராஜர் போன்றொர்கள் மக்களை (தேர்தலை)சந்திந்து முதல்வர் ஆனவர்கள்.. ராஜாஜி தேர்தலை சந்திக்காமல் முதல்வர் ஆனவர்.. 

இத்திரைப்படத்தில் அர்ஜீன் கதாபாத்திரமும் முதன் முதலில் மக்களை சந்திக்காமலே முதல்வர் ஆவார் ஆதலால் ராஜாஜி ஜாதகம் என்று எழுதியிருப்பார்.. 

சாதி வெறி ஊறிபோய் விட்டால் யார் என்ன சொன்னாலும் தவறாக தான் தெரியும் என்றேன்..

மேன்மக்கள் மேன்மக்களே 

சுஜாதா always great 👍🏻

#Sujatha #Mudhalvan #Shankar

செவ்வாய், 12 ஜனவரி, 2021

பொங்கலும் வாழ்த்துகளும்

 என் சிறு வயதில் தீபாவளி என்றவுடன் சட்டென்று நம் மனதில் மத்தாப்பாய் மலர்வது பட்டாசு தான். இன்றைய நாள் வரை இதன் மேல் உள்ள ஈர்ப்பு சிறிது குறைந்திருக்குமே தவிர முழுவதுமாக இல்லை. 

அது போல் பொங்கல் என்றவுடன் நினைவுக்கு வருவது பல வண்ணங்கள் கொண்ட  

“பொங்கல் வாழ்த்து அட்டைகள்” பொங்கலுக்கு இரு வாரங்களுக்கு முன் இதன் சீசன் தொடங்கி விடும்.  

எங்கள் ஊரில் உள்ள 

அன்பு ஸ்டோர்,வள்ளுவன் ஸ்டோர்,லதா ஸ்டோர் கடைகள் இதற்கு பெயர் பெற்றது. கடைக்கு வெளியே பெரிய பலகைகள் அமைத்து அதில் அனைத்து விதமான வாழ்த்து அட்டைகளை பரப்பியிருப்பார்கள். 

MGR தொடங்கி ரஜினி, கமல், என அனைத்து நட்சந்திரங்களும் நம் பார்வைக்குள் அடங்கியிருப்பார்கள்.

50 பைசா முதல் ஐந்து ரூபாய் வரை வித வித மான அட்டைகள். 

சிறு வயதில் அனைவர் போல ரஜினி வெறியன் நான் . எனக்கு பிடித்த ரஜினி அட்டைகள் தான் பெரும்பாலும்

நான் என் நண்பர்களுக்கு கொடுப்பது. பள்ளி ஆசிரியர்களுக்கு பொங்கல் பானையுடன் கூடிய அட்டைகள் நடிப்பை அப்பொழுதே தொடங்கி ஆயிற்று. 

நமக்கு மிகவும் பிடித்த,எதிர்பார்த்த நபர்களிடமிருந்து வரும் அட்டைகள் தரும் மகிழ்ச்சியை எத்தனை increment கடிதத்தாலும் தர இயலாது.

நண்பர்களுக்கிடையே யாருக்கு அதிகமாக அட்டைகள் வந்துள்ளது என்ற சிறு போட்டியும் இருக்கும்.

அன்று மனமும்,நேரமும் நிறையவே இருந்தது பணம் கம்மியாக இருந்தது. இன்று பணம் இருக்கிறது மனமும்,நேரமும் இல்லை. 

சுஜாதா கூறியதை போல் வாழ்க்கையிலும் TV remote  இல் உள்ளது போல் rewind பட்டன் இருந்தால் எவ்வளவு அழகாக இனிக்கும். 

நண்பர்கள் அனைவருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துகள். 

இனிப்புடன் 

திங்கள், 11 ஜனவரி, 2021

தூள் திருநெல்வேலி

 ஜனவரி 10 

இது போன்றதொரு ஒரு ஞாயிறு வருடம் 2003 பொங்கலுக்கு முந்தின வாரம்.

நீண்ட நாளாக செய்ய வேண்டிய கடமை அதை ஆசை,  இலட்சியம் என்று கூட சொல்லலாம். அன்று   திருநெல்வேலி சீமை தான் எனக்கு நகரம். 

அன்றைய திருநெல்வேலி டவுனில் ஒரு மணி நேரத்திற்கு இன்டர்நெட்  browsing க்கு 50₹. நண்பர்கள் மற்றும் Browsing centre அண்ணன் துணையோடு rediff mail account துவங்கினேன். Gmail இல்லாத காலம்.

ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. படிப்பிற்கான நேரம் முடிந்தது. இப்போது சினிமா விற்கான நேரம். 

அன்றைய பொங்கல்  ரேசில் கமலின் அன்பே சிவம்,

விஜயின் வசீகரா, 

விக்ரமின் தூள். "தில்" லின் தில்லான வெற்றிக்கு பிறகு இணைந்த விக்ரம்-தரணி கூட்டணி. பலத்த எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வித்யாசகர் இசையில் ஹிட். 

தூள் மட்டும் பொங்கல் க்கு ஒரு வாரத்துக்கு முன்னே ரிலீஸ் செய்துவிட்டனர். தூள் திரைப்படம்  பூர்ணாகலா வில் திரையிட்டிருந்தனர். 

டவுனில் இருந்து ஜங்க்ஷன் வந்தாயிற்று. 

தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் , அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கி நன்பர்களுடன் ஆடி,பாடி 

குதூகளித்த பொழுது. 

அடுத்த இரண்டு மாதங்களில் பட்டய படிப்பின் (Diploma) கடைசி செமஸ்டர் , நண்பர்களில் பலருக்கு அது தான் படிப்பின் கடைசி காலகட்டம் ஆதலால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி யின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

#Rediffmail #Dhool #Collegedays 

நாட்கள் தொடரும்