மகிழ்ச்சி தரும் மார்கழி
அதிகாலை ஆதவன் ☀️ வரும் முன்,
கடிகாரம் உதவியுடன் துயில் கலைந்து, நீராடி, நண்பர்களுடன் “பஜனை” என்ற நம்பிக்கை வழியில் ஒன்று கூடுவோம். அவர்களின் வீட்டில்,
எங்களை அன்புடன் வரவேற்று, தததும்ப தததும்ப நுரையுடன் கூடிய பில்டர் காபி ☕️️ வழங்கப்படும்.
அந்த குளிருக்கு சூடான காபி அவ்வளவு இதமாக இருக்கும்.
பனி பொழியும் அந்த நிமிடம், பக்தி குரலில், "முருகா சரணம்!! சரணம் முருகா!!" எனச் சொல்லிச் உச்சரித்து நடையை தொடங்குவோம்.
இறைவனிடம் எவ்வித பொருட்பாடு இல்லாமல்,
இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்காமல்
பக்தியுடன் சிரமமின்றி இறைப்பாதையில் சென்றோம்.
பயணங்களை கடந்து, (திருச்செந்தூர் )சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று அவரின் அருள் பெறுவோம்.
கோவிலில், கையில் சூடான நெய் சாதமும், அதற்கான துணையாக துவையலும் பிரசாதமாக கிடைக்கும். அதை உண்டு, கடற்கரையில் கால் நனைத்து, ஓடி, ஆடி, விளையாடி, அந்த இனிய காலத்தை அனுபவித்தோம்.
அந்த நினைவுகள் இப்பொழுதும் என் உள்ளத்தில் அசைபோடுகின்றன.
நினைவுகள் தொடரும்... #மார்கழி #மார்கழி_மாதம் #சுப்பிரமணியசுவாமி #பஜனை #பரிவுக்குரியபருவம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக