என் முதல் சிறு கதை!!
அனைவரும் படிக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
மரபும் நவீனமும் இணையும் 'கார்த்திகை'
!"
**"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது"** பாடல் யூடியூப் பில் பார்த்து கொண்டிருந்தான் சுகுமாரன்.
**பாடல் முடியும் தருவாயில்** கையில் காஃபி யை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் அவன் மனைவி ஜானகி. அவளிடத்தில் புன்னகையை பரிசளித்து காஃபி யை பெற்று கொண்டான் சுகுமார்.
**என்ன சார்?** இன்னிக்கு தங்கை செண்டிமெண்ட் ரொம்ப பலமா இருக்கு? அது என்ன? இன்னும் சிவாஜி பாடல் தானா கேட்பீர்களா, என கிண்டலாக கேட்டாள் ஜானகி.
**சில விஷயங்கள்** எத்தனை வருடங்கள் ஆனாலும் புதியதாக தான் தெரியும், உன்னை கல்லூரி நாட்களில் பார்த்த அதே காதலியாக தான் இன்றும் என் கண்களுக்கு தெரிகிறாய் **"ஜானு"** என்றான்.
**அது சரி** உங்களுக்கு பேச சொல்லி தரனுமா என்ன? **கவிதையாய்** சொல்லி என்னை காதலித்த கரம் பிடித்த கள்வன் ஆயிற்றே.
**ஒரு கவிதை** முன் கவிதை சொல்லவும் சுலபம் தானே என சுகுமார் கூற, **டேய்** இன்னுமுமா என்னை பற்றி கவிதை எழுதுகிறாய் என ஜானகி ஆச்சரியம் கலந்து கேட்க.
**எனக்கு நீ** முதலில் காதலி பிறகு தான் மனைவி என சிரித்து கொண்டே கூற, **உனக்கு இப்போ** நான் என்ன செய்யணும் என ஜானகி கேட்க.
**இன்று கார்த்திகை**, சாயங்காலம் நிறைய நம் வீட்டினுள் நிறைய விளக்குகள் எல்லாம் ஏற்றி ஒளிமயமா வைச்சா நல்லா இருக்கும்.
**இந்தா மாத** கடைசி என்பதால் 1000₹ இதை வைத்து தேவையானவை கள் வாங்கி கொள் என்றான் சுகுமாரன் ஜானகியிடம்.
ஜானகி ஓகே என்று சொல்வது போல சுகுமாரன் whatsapp tone சிரித்தது. ஜானகி அதை எடுத்து பார்த்தாள் அதில் சுகுமாரன் தங்கை சுமதி , நன்றி அண்ணா என்று message அனுப்பி இருந்தாள்.
அதற்கு மேலே அவன் அவள் தங்கைக்கு 1000₹ கார்த்திகை சீர் என்று பணம் அனுப்பி இருந்தான்.
ஜானகி ஒரு வித ஆச்சரியம் கலந்து சுகுமாரனிடம் கேட்டாள், மாச கடைசி சொல்லறீங்க, பணம் இவ்ளோ தான் சொல்லறீங்க, தங்கைக்கு பணம் அனுப்பறிங்க எனக்கு புரியவில்லை என்றாள்.
நம் கடமையை நாம் தவறாமல் செய்ய வேண்டும், பொதுவாக கார்த்திகை க்கு என் தங்கைக்கு அண்ணன் மார்கள் கார்த்திகை சீர் அனுப்புவது வழக்கம். என் அம்மாவிற்கு என் தாய் மாமா நேரில் வந்து கொடுப்பார்.
என் அம்மாவிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் தான் சொன்னார்கள் கல்யாணம் ஆகி எனக்கு 25 ஆண்டுகள் ஆகிறது இன்றும் என் அண்ணன் இந்த சீரை விடாமல் கொடுக்கிறான். என சிறிது ஆனந்த கண்ணீருடன் கூறினார்கள்.
சில விஷயங்கள் நம் மனதில் பசுமரத்துஆனி போல பதிந்து இருக்கும் அதேபோல் தான் இந்த நிகழ்வு என்றான். இப்போ தான் digital உலகம் ஆகிவிட்டது அதனால் நான் இந்த மாதிரி என் தங்கைக்கு டிஜிட்டல் வழியில் சீர் அனுப்பினேன் என்றான்.
Twitter , Fb , insta ன்னு சோசியல் மீடியா வில் இருக்க அதே நேரத்தில் உன்னோட traditional விட்டு கொடுக்காமல் இருக்க , சிட்டியில் பிறந்து வளர்ந்ததால் தான் என்னவோ இதெல்லாம் எனக்கு புதுசா இருக்கு. இதெல்லாம் எனக்கோ எங்க அண்ணனுக்கு லாம் தெரியாது என்றாள்.
இதில் என்ன இருக்கு நான் வளர்ந்த சூழல் அப்படி உனக்கு தெரிந்த எத்தனையோ எனக்கு தெரியாது என்றான்.
உன்னோட இந்த குணம் தான் என்னை ஆச்சரிய படுத்தி காதலிக்க வைத்தது என்று கூறி விட்டு சென்றாள் ஜானகி.
ஒரு மணி நேரம் கழித்து சற்று ஆச்சரியம் கலந்த முகத்துடன் சுகுமார் முன் வந்து நின்றாள் ஜானகி.
அவள் கவனத்தை திசை திருப்ப ஜானு , ஜானு என்று இரு முறை கூப்பிட்டான் சுகுமாரன். என் அண்ணன் எனக்கு 2000₹ அனுப்பி இருந்தான் , என்ன வென்று நான் அவனை மொபைலில் கேட்க ?
என் அண்ணன் கூறினான் இன்று கார்த்திகை யாம் , உடன்பிறந்த சகோதரிக்கு கார்த்திகை சீர் செய்ய வேண்டுமாம் அவன் என் அம்மாவிடம் கேட்டுள்ளான் அதற்கு அம்மா ஆமாம் என்று சொல்லி உள்ளார்கள் போல.
இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என நான் அண்ணனிடம் கேட்க ?
இன்று டிவிட்டர் , fB இல் கார்த்திகை சீர் தான் ட்ரெண்டிங் போல அதில் தான் நான் படித்தேன் என கூறினான் என அண்ணன் என்றாள் ஜானகி.
ஓ அப்படியா என்று கேட்டு கொண்டான் சுகுமாரன் ,
அவன் (சுகுமார் ) தான் கார்த்திகை சீர் என்று கட்டுரை எழுதி அதை அவனது புனை பெயரில் (எழுத்தாளன்) வெளி இட்டு இருந்தான்.
இவன்
ராஜா.க
#கார்த்திகைதீபம்
#மரபும்_நவீனமும்
#அண்ணன்_தங்கை_மரபு
#தமிழ்கதை
#கார்த்திகைசீர்
#FamilyTraditions
#SiblingLove
#TamilCulture
#ShortStory
#TraditionAndModernity
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக