புதன், 28 ஜூன், 2023

கருப்பட்டி காஃபி யும் நானும் !!

 வழக்கமாக செல்லும் காஃபி கடைக்கு சென்றேன் , சின்ன ஏமாற்றம் கடை புட்டியிருந்தது. நாம ரெண்டு , மூன்று நாள் சென்னையில் இல்லாட்டி என்னலாம் நடக்கும் போலயே , யாரு கேட்டு சேட்டன் லீவு போட்டார் ? என யோசித்து கொண்டே பக்கத்து கடைக்கு படையெடுத்தேன்.

பல நாள் செல்ல வேண்டும் என நினைத்த கடை , ஆனால் சேட்டனுக்கும் நமக்கும் உள்ள நட்ப்பிற்காக செல்ல முடியாமல் இருந்தது.

இன்று தான் நேரம் அமைந்தது என்று நினைத்து கொண்டு மாஸ்டரிடம் ஒரு காஃபி என்றேன் , டோக்கன் போடுங்க என்றார். பாருடா , வடிவேலு பாணியில் எங்களுக்கே டோக்கனா என்று பார்த்தேன் ,

அந்த மாஸ்டர் பார்வை யாரா இருந்தாலும் டோக்கன் என்பது போல இருந்தது. கல்லா பெட்டியில் இருந்தவரிடம் ஒரு காஃபி என கேட்க 25₹ என கூறினார். எதே , அதே வடிவேலு லுக் காஃபி 15 ₹ தானே என கூற , சார் , இங்கு நாட்டு சர்க்கரை தான் உப்யோகிப்போம் என்றார் , நான் இல்லை எனக்கு நார்மல் சுகர் போடுங்க என்றேன் , அது நம்மிடம் இல்லை என்றார்.

சரி , ஆனால் நமக்கு இது டெய்லி சரி பட்டு வராதே என கூறி பக்கத்து கடை என்ன பூட்டி கிடைக்கு என்றேன் ? சார் இன்று பக்ரீத் அதனால் விடுமுறை என்றார். ஓகோ ?என்றேன் , உங்களுக்கு வேணும்னா நான் மினி காஃபி தருகிறேன் அது 15₹ என்றார். ஓ , நன்றி என்றேன்.

உங்களை நான் டெய்லி பார்ப்பேன் , எங்கள் கடையை கடந்து தான் பக்கத்து கடைக்கு சென்று உங்கள் பஸ் வருகிறதா என்று பார்த்து கொண்டே ஸ்டைலாக காஃபி குடிப்பதை பார்த்துள்ளேன் என்றார். புதுப்பேட்டை அன்பு மாதிரி முகத்தை வைத்து கொண்டு மினி காஃபி ஆர்டர் போட்டேன்.

டோக்கன் மாஸ்டர் கொடுத்தேன். நாட்டு சர்க்கரை காஃபி வந்தது முதல் முறை பருகினேன் , ஒரு மாதிரி கசப்பாக இருந்தது , என்னப்பா இது அவ்ளோ buildup இதுக்கு ஆனால் இப்படி உள்ளதே என்று , எஸ்ட்ரா சுகர் கொடுங்க என்று கேட்டு வாங்கி பருகினேன்.ஹம் அப்படி ஒன்றும் சிறப்பு இல்லை ,

ஒரு வேளை டெய்லி குடித்தால் செட் ஆகுமோ ? Anyhow , நாளைக்கு நம்ம சேட்டன் வந்து விடுவார் என்ற நம்பிக்கை யில் நடையை கட்டினேன். சேட்டனுக்கும் அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். #HappyEid 

#goodmorning #thursdayvibes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக