தினமும் ஒரு பக்கம் எழுத வேண்டும் என்ற சிறு கொள்கையை இன்று முதல் கடைபிடிக்க உள்ளதால் , என் முதல் ஓரு பக்க உரை.
இரவு முழுவதும் அலுவலகத்தில் இருந்து வேலை பார்த்தேன் , இங்கு தான் இரவு தவிர உலகில் எங்கோ ஒரு மூலையில் விடிந்திருக்கும்.ஒரு படியாக வேலையை சிறப்பாக செய்து முடித்தோம் என்கிற சிறு மகிழ்ச்சி யுடன் அலுவலக் கேண்டின் க்குள் சென்றேன்.
அதிகாலை என்பதால் என்னவோ கலர் , கலர் இருக்கைகள் எதில் வேண்டுமானாலும் அமர்ந்து கொள் என்கிற தொனியில் என்னை பார்த்து புன்முறுவல் பூத்தது. தானியங்கியை தொட்டு உயிர் கொடுத்தேன். பில்டர் காபி தானே வேண்டும் என்பது போல மெனுவில் காபி க்கு முதல் மரியாதை கொடுக்க பட்டிருந்தது.
ஆர்டர் செய்தேன் , payment செய்கையில் புதிய இந்தியாவின் டிஜிட்டல் முறை "உன் வங்கி server temporary not available என்று " புத்திக்கு எட்டும் படி எடுத்துரைத்தது. வழக்கமாக செல்லும் உணவகம் அந்த உரிமையாளர் பழைய இந்தியா வின் மனிதர் தான் ஆதலால் தான் என்னவோ பிறகு பணம் கொடுங்கள் என்று கூறி.
பழைய இந்தியா பாணியில் பேப்பரில் காபி என எழுதி கொடுத்தார். பணத்தோடு , சில மனிதர்களையும் சம்பாதித்து உள்ளோம் என்று என்னை நானே ஆசுவாசப்படுத்தி கொண்டே நுரை ததும்ப கொடுத்த காஃபி யை பருகி என் வயிற்று க்கு 8 மணி நேரம் கழித்து வேலை கொடுத்தேன்.
பின் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி டூவிலர் பயணத்தை தொடங்கினேன் ,என்னப்பா ராஜா நேற்று இரவே வருவாய் என்று நினைத்தேன் காலையில் தான் வருகிறாய் என்று டூவீலர் என்னை கிண்டலாக கேட்டது. சாவியால் அதற்கு உயிர் கொடுத்து அதன் காதுகளை என் கையால் பிடித்து முறுக்கினேன் , டேய் வழக்கமாக மெதுவாக தானே செல்வாய் இன்று ஏன் வேகம் என டூவீலர் கேட்டது போல உணர்ந்தேன்.
உள்ளுணர்வு பெரும்பாலும் சரியாக தான் சொல்லும் அதனால் மெதுவாக வே சென்றேன் , ஒரு கட்டத்தில் இரண்டு வினாடிகள் என்னை அறியாமல் தூங்கி விட்டேன்.
சின்ன பயம் தொற்றி கொண்டது ,இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறையவே உள்ளது இப்போதே tired ஆனால் எப்படி என்று நினைத்து கொண்டு , பிறகு சற்று சுதாரித்து மிகவும் மெதுவாக சென்று ஒரு டீ கடையில் சற்று நிறுத்தி முகத்தை தண்ணீரால் துடைத்து மற்றோரு காபி யை குடித்து சற்று இளைப்பாறினேன். சில பல ரூபாய் நோட்டுக்கள் என்றோ என் Bag இல் இருந்தது உதவியது.
தம்பி அண்ணனை பத்திரமா வீடு கொண்டு சேர்த்து விடு என்று டூவீலர் கூறினேன். வா , வா பார்த்துக்கலாம் என்று கூறி கொண்டு சற்று உற்சாக மாக பயணப்பட்டேன். ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன்.
தொடர்ந்து எழுதுவோம்.
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக