ரொம்ப நாளாக எழுதணும் நினைத்த த்ரெட்.
இன்று நேரம் அமைந்ததால் பதிவிடும் வாய்ப்பு கிடைத்தது.
" கடன்"இந்த வார்த்தை பலரின் வாழ்க்கையில் மிகவும் பரிச்சயமான வார்த்தை.
இந்த கடனால் புதிய நபர்கள் அறிமுகமாவார்கள் , பழைய நண்பர்கள் விலகுவார்கள்.
ஒரு பக்கம் மகிழ்ச்சி , மறு பக்கம் துன்பம் என்று இதனால் இரண்டு வகையான உணர்வுகளையும் அதிகமாகேவே கொடுக்க வல்லது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது கடனுக்கும் பொருந்தும். தன் சக்தி க்கு மீறி கடன் வாங்கும் பலர் சுனாமி அலைகள் போல அடித்து சென்று கடலின் கோர பசிக்கு இறையான சான்று இன்றும் உள்ளது சிலர் மட்டுமே கறை சேருவார்கள்.
உலகமயமாக்களின் விளைவு பெரும்பாலானோர் எங்கோ , யாரிடமோ கடன் வாங்கியிருப்பார்கள். சிலர் வெளியே தெரிந்து (தனி நபர்களிடம்) சிலர் வெளியே தெரியாமல் (வங்கிகளிடம்). மேலே கூறியது போல நம் சக்தி க்கு மீறி கடன் வாங்கினால் இழப்பு வாங்கியவருக்கும் அவரின் சுற்றத்தாருக்கும்.
இந்த கடனால் பல நட்புகள் பரம எதிரிகளாக மாறிய வரலாறை இந்த பூமி கண்டுள்ளது.
கடனும் நானும் :
இன்று வரை நண்பர்களுக்கு மொபைலில் அழைத்தால் attend செய்வார்கள் , அப்போது எடுக்க முடியாமல் போனால் மறுபடியும் அழைபபார்கள். அதற்கான மிக முக்கியமான காரணம் நண்பர்களிடத்தில் பணம் வாங்கவோ கேட்டதோ கிடையாது. இதை எனக்கு உணர்த்தியதே ஒரு நண்பன் தான் , ஒரு முறை அவனிடம் நேரில் பேசி கொண்டு இருக்கையில்
ஒரு முறை அவனிடத்தில் நேரில் பேசி கொண்டு இருக்கையில் அவனுக்கு மொபைலில் அழைப்பு வந்தது , பெயரை பார்த்தவுடன் நெற்றி சுருக்கி அழைப்பை எடுக்க வில்லை , ஏன் டா ? என நான் கேட்க , இவன் லாம் பணம் கேட்க தான் அழைப்பான் என்றான். வேணும் னா பாரேன் , திருப்பி அழைப்பு வந்தது.
நண்பன் விஜய் போன்று இப்போ உனக்கு live demo கொடுக்கறேன் என்று சொல்லி அந்த அழைப்பை எடுத்து பேசினான் ,speaker போட்டு விட்டான். அவன் கூறிய படி கடன் தான் கேட்டான்.நாளை க்கு பேசறேன் இப்போ driving இருக்கேன் என்று அழைப்பை துண்டித்தான் சிரித்து கொண்டே என்னை பார்த்து demo ஓகே வா என்றான்.
ஏன் டா இவனுக்கு கொடுக்க விருப்பமில்லையா என நான் கேட்க ; இவனுக்கு இதற்கு முன் கொடுத்த பணத்தையே தரவில்லை , உனக்காக தான் call attend பண்ணினேன் என்றான் casual ஆக. அப்போது தான் எனக்கு புரிந்தது பாடம் கடன் வாங்கினால் நட்பு என்ன செய்யும் என்று 🤔 engineering இதெல்லாம் சொல்லி தரவில்லை.
மேற்கூறிய இரு நபர்களும் கல்லூரியில் அவ்வளவு நெருக்கம். ஆம் கல்லூரி கால வாழ்க்கை வேறு , கல்லூரி பிறகு வாழ்க்கை வேறு. இந்த சம்பவம் எனக்கு உணர்த்தியது ஒன்று தான் நண்பர்கள் இடத்தில் கடன் வாங்க கூடாது என்று. நாம் ஒரு கொள்கை யில் இருக்க முயன்றால் அதில்
குஷ்பு போல சின்ன , சின்ன movement கூடிய dance ஆட காலம் நினைக்கும் அதை விதி என்றும் கூறலாம். ஒரு property வாங்குவதற்கு Bank லோன் எல்லாம் ஏற்பாடு செய்தாகிவிட்டது. வடிவேலு சொல்வது போல எல்லாம் பிளான் பண்ணினாலும் திடிரென்று 1 இலட்சம் துண்டு விழுந்தது.
என்ன செய்ய என்று யோசித்து சரி இதில் என்ன ஈகோ என அப்பா விடம் கேட்க , அவரோ சிரித்து கொண்டே தருகிறேன் ஆனால் உனக்கு ஒரு பாடம் ; ஏதோ கூறுவாயே உன் நட்பு , நட்பு என்று ,சும்மா அவர்களிடம் கேள் நீ யார் என்று அவர்கள் உனக்கு உணர்த்துவார்கள் என்று.
சூரியன் படத்தில் கவண்டர் மகான் கூறுவது போல " சத்ய சோதனை " என்று கூறி கொண்டு , யாரிடம் கேட்க ? எப்படி கேட்க என இரவு முழுவதும் யோசனை , அவன் என்ன நினைப்பான் , இவன் என்ன நினைப்பான் என ஏகப்பட்ட திரைக்கதை கண் முன் ஓடியது.
நமக்கென்று நாலு பேர் இருக்கிறார்கள் அவர்களில் ஒவ்வொரு நபரிடமும் 25 ஆயிரம் என முடிவு செய்து. முதலில் அழைத்தது" Haja " மறுமுனையில் சொல்லுடா என கூற சற்று தயங்கி பிறகு ஏதோ ஒரு தைரியத்தில் பேச; எவ்வளவு வேணும் என கேட்க என் plan சொல்ல அரை மணி நேரம் கழித்து பேசுகிறேன் என்று கூறி விட்டான்.
ஏகபட்ட கேள்வி கேட்டு கொண்டேன் , நாம் கேட்டது சரியா / தவறா என்று. சரி இன்றைக்கு இது போதும் எதுவாகினும் நாளை மற்றவர்கள் இடத்தில் பேசி கொள்ளலாம் என்று நினைத்து கொண்டேன். அடுத்த 15 நிமிடத்தில் sms வந்தது பார்த்து சற்று அதிர்ச்சி ஆனேன்.
ஆம் 1 இலட்சம் credited to tour account என்ற குறுந்தகவல் மிகப்பெரிய மகிழ்ச்சி யை கொடுத்தது. அவனும் நானும் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருந்தோம் , சொல்ல போனால் அவனை பார்த்து தான் அந்த வங்கியில் கணக்கை தொடங்கினேன் அது ஒரு சுவராஸ்யமான சம்பவம் அதை வேறு த்ரெட்டில் எழுதுகிறேன்.
நண்பனிடம் நன்றி கூற அழைத்த போது " சரிடா யப்பா போதும் " என்று கூறி call ஐ cut செய்தான். தந்தை யிடம் சவாலில் வெற்றி பெறுவது சின்ன சங்கடம் தான் என்றாலும் அவர் சிரித்து கொண்டே உனக்கு இப்போது தான் பொறுப்பு கூடியுள்ளது . கவனமாக இரு என்று ஒரு சின்ன எச்சரிக்கை அதில் அர்த்தம் இருந்தது.
அந்த கடனை அடுத்த 10 நாட்களில் கொடுத்து விட்டேன் , அதன் பிறகு முடிந்த வரை நண்பர்கள் இடத்தில் கடன் வாங்குவது இல்லை. வழியே இல்லாத நிலையில் credit card என்கிற பிரம்மாஸ்திரம் எடுத்து கொள்வேன். ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு சூழ்நிலை உருவாகும்.
முடிந்த வரை கடன் வாங்காமல் ஓட முயற்சி செய்வோம் நட்பு வட்டத்தை பெருக்கி கொள்வோம்.
#கடன் #நண்பன் #credit #loan #loans #personalloan #homeloan
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக