சிறு வயதில் முதலே மற்ற கடவுள்களை விட பிள்ளையார் க்கும் என( நம)க்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும்.ஏனென்றால் நிறைய இடங்களில் பிள்ளையார் கோயில் இருக்கும். அது ஏன் ?எதற்கு? என்ற வரலாறு (எஸ் டி டி) க்குள் போகாம நேராக என் கல்லூரி க்கு போவோம்.
தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளின் வளாகத்தின் முகப்பில் பிள்ளையார் கோயில் இருக்கும். எங்கள் கல்லூரி மட்டும் விதிவிலக்கல்ல அதற்கு.
ஒரு முறை செமஸ்டர் exam க்கு முந்தின நாள் சாயங்கலாம் நண்பன் ஒருவன், டேய் அந்த பிள்ளையார் கோயிலுக்கு போய்ட்டு வருவோம் என கூற சரி போய்ட்டு வருவோம் என கிளம்பினேன். அடுத்த நாள் பரீட்சை கேள்வி தாள் கொஞ்சம் சுலபமாக வும் இருந்தது. ஏதோ கொஞ்சம் சுமாரா படித்ததால் ஒரு நம்பிக்கை கிடைத்தது தேறிவிடுவோம் என்று.
நம்ம மனசுக்கு அல்ப ஆசை அடுத்த exam க்கும் இதே மாதிரி நடக்குமா என்று ?
சரி முயற்சி பண்ணி தான் பார்ப்போமா என்று ?
அடுத்த exam க்கு முந்தின நாள், நான் என் நன்பனை அழைத்து கொண்டு அதே மாதிரி பிள்ளையார் ஒரு attendance போட்டு வந்தேன். அடுத்த நாள் அதே போல சுபமாக நடந்தது.
அதனால் எதன் மேலாவது நம்பிக்கை வைக்க வேண்டும் அதே நேரத்தில் நம் கடமையை செய்தால் வெற்றி கிடைக்கும்.
அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
இவண்
ராஜா .க
#VinayagarChaturthi
#HappyGaneshChaturthi
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக