செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

விஸ்வாசமும், கொரானா வும்

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.

வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.

குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 

நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.

என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.

எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.

நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.

அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.

சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.

விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.

தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!

#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona

இவண் 

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக