திங்கள், 30 ஆகஸ்ட், 2021

சுவாதியும், ரோஹிணியும்

 சுவாதியால் ரோகிணிக்கு என்ன பயன் ?

கடலில் உள்ள சிப்பி என்னாலும் முத்துக்களை தர இயலாது;

சுவாதி நட்சத்திர நாளில் தான்,

சிப்பி தன் வாயை பிளந்து மழை நீரை உட்கொண்டு முத்தாக மாறும்; ஆதலால், சுவாதிக்கு எப்போதும் தன்னால் தான் முத்து உருவாகும் என்ற பெருமை. 

அத்தோடு நிற்காமல் தன் தோழியான ரோகினியை பகடி செய்யும், உணக்குறிய நாளில் யாது ஒரு சிறப்பும் இல்லையே ? என்று. மன வருத்தம் அடைந்த ரோகினி பெருமாளை நோக்கி கடும் தவம் புரிந்தாள்.

பெண்கள் தவம் புரிய கூடாது என்பதால், மனமுருகிய பெருமாள் ரோகினியிடம் எதற்காக என கேட்க  நடந்தை கூற பெருமாள் ஒரு வரம் அளித்தார். என் அடுத்த அவதாரமான கிருஷ்ணா அவதாரத்தில்  

“ முத்து கிருஷ்ணனாக“ ரோகினி நட்சத்திரத்தில் அவதரிக்கிறேன் என்றார். 

மகிழ்ச்சி அடைந்தாள் “ரோகிணி” 

அனைவருக்கும் கோகுல அஷ்டமி நல்வாழ்த்துகள் 😊

#gokulashtami #Janmashtami2021 #KrishnaJanmashtami2021 #KrishnaJayanthi

இவண்

ராஜா கண்ணன்

சனி, 21 ஆகஸ்ட், 2021

சென்னை நீ என் அன்னை

வந்தாரை

வாழ (வைத்த,வைக்கின்ற,வைக்கும்)

சென்னை

 நீ என் அன்னை !!

சுனாமி,புயல், மழை என எத்தனை இயற்கை இடற்பாடுகள் வந்தாலும் அத்தனையும் முறியடித்து மேலும்,மேலும் வளர்கிறாய்.. 

வயது ஆக,ஆக நீ மேலும் 

அழகாகிறாய் !!! 

Devotion-Triplicane,Santhome

Shopping- T-Nagar,

Theatre- Sathyam,phoenix

Art-Mahabalipuram

Filter Coffee - West Mambalam 

382 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சென்னை 

#சென்னைதினம்

#MadrasDay2021

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

கண்களில் பட்டது

கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021

#Myclicks 

கேமரா கண்களின் வழியே பார்த்தது !!!

#WorldPhotographyDay2021

#Myclicks 

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2021

பாபாவும், சுதந்திர தினமும்

 இது போன்றதொரு சுதந்திர தினத்தில் காலை 6 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து ஒரு படையோடு புறப்பட்டு 7 மணிக்கெல்லாம் அருகில் உள்ள ஆத்தூர் க்கு சென்றாகிவிட்டோம்.

மூன்று ஆண்டுகள் இடைவெளி க்கு  பிறகு,   

மேலும் இது தான் கடைசி என்று ஒரு பேச்சு எதிர்பார்ப்பை மேலும் இரட்டிப்பாக்கியது. 

8 மணிக்கு முதல் காட்சி,

ஆத்தூர் பம்பையா திரை அரங்கம் முழுக்க படையப்பனின் படை !!! 

ஆம் இந்த முறை பாபா முத்திரை யுடன் பாபா, பாபா என்ற கூக்குரல் !!!

பாட்ஷா புகழ் சுரேஷ்கிருஷ்ணா ரஜினி யுடன் இணைகிறார், 

ரகுமான் இசை ,

நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி யுடன் ரஜினி,

பூஜை போட்ட நாள் முதல் வெளிவரும் ஒவ்வொரு ஸ்டில் வேற லெவல் இருந்தது.

பாடல்களில் வழக்கமான அரசியல் வாடை 

"உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்" , 

"உயிர் வாழ்ந்தால் இங்கே தான் ஓடி விட மாட்டேன்,"

"கட்சிகளை பதவி களை நான் விரும்பமாட்டேன்,

காலத்தின் கட்டளை நான் மறுக்க மாட்டேன் "

என்று டாப் கியர் போட்டு ரசிகர்களின் BP யை ஏத்தியிருப்பார்

கவி பேரரசு.

படம் ரிலீஸ் நேரத்தில் பாமக கட்சி யுடன் மோதல் என பரபரப்பு க்கு பஞ்சம் இல்லாமல் ஆகஸ்ட் 15 ல் வெளியானது பாபா.

ரஜினியின்  அறிமுக காட்சி, ரகுமான் பின்னணி இசையில் பலத்த ஆரவாரம்.

 நொடி பொழுதில் ஆரவாரம் கலைந்தது ஆம் ரஜினி பூவ்வாவா  என்று டிப்புக்குமாரி  பாடலை பாடுவார் ரஜினியின் முதல் பாடல் செண்டிமெண்ட் பெரும்பாலும் spb தான் பதில் இந்த முறை சங்கர் மகாதேவன். 

ரஜினியின் பீடி பிடித்தல், சாராயம் குடித்தல், அந்த தலைப்பாகட்டு, பாபா கத்தி, பாபா counting, இப்போ ராமசாமி யிடம் பேசும் வசனம் என முதல் பாதி 

 நன்றாக தான் சென்றது.

இரண்டாம் பாதி  கொஞ்சம் இல்லை ரொம்ப மெதுவாக சென்றது இறுதியில் இமயமலை க்கு செல்லாமல் இங்கேயே இருப்பது போன்ற காட்சி. சுஜாதா தான் அன்னை செண்டிமெண்ட் வழக்கம் போல இந்த படமும் சுமார் ரகமே இதற்கு முன் (கொடி பறக்குது,உழைப்பாளி) 

படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு ரஜினி ரசிகர் குரல் , இந்த படம் ஓடாதது ஒரு வகையில் நல்லது தான் அப்போ தான் தலைவர் அடுத்த படம் நடிப்பார் என்று.

நினைவுகளுடன்

ராஜா.க

#Tamilcinema #Baba # IndependenceDay

#August #Rajini 

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

விஸ்வாசமும், கொரானா வும்

 நண்பருடன் வெளியே சென்றிருந்தேன், வேலை முடித்த பின்பு எங்கு இரவு உணவிற்கு செல்லலாம் என்று கேட்க ?  குரோம்பேட்டை யில் உள்ள பாலாஜி பவன் க்கு செல்லலாமா என்றதும் நண்பரும்  அதை வழி மொழிந்தார்.

வழக்கமாக அமரும் டேபிளில் அமர, சர்வர் புன்னகையுடன் வரவேற்று பரஸ்பர விசாரிப்புக்கு பின் ஆர்டர் கொடுத்தோம்.

குரோம்பேட்டை ஒரு புதிய திநகர் போன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஆதலால் ஹோட்டலில் நல்ல கூட்டம். மக்கள் இயல்பு நிலைக்கு சென்றது தெரிந்தது. 

நண்பரிடம்  கூறினேன் இந்த சர்வர் எனக்கு பழக்கம் நீண்ட நாட்களாக இங்கு உள்ளார் மேலும் இவர்களை போன்றவர்களை லாக்டவுண் காலத்திலும் வீட்டிக்கு அனுப்பாமல் உரிய ஊதியம் கொடுத்து தக்கவைத்து கொண்டது இந்த ஹோட்டல் நிர்வாகத்தின் வெற்றி என்று கூறினேன்.

என் கருத்திலிருந்து நண்பர் வேறுபட்டார், இவர்களுக்கு நிர்வாகம் சம்பளம் கொடுத்திருக்க வாய்ப்பு குறைவு என்று கூறினார். கடையே திறக்காமல் எப்படி?சம்பளம் கொடுக்க முடியும் என்று கூறினார்.

எனக்கு உடன்பாடில்லை, சற்று பெரிய நிறுவனங்கள் நீண்ட  நாள் ஊழியர்கள்

 தக்க வைத்து கொள்ள சம்பளம் கொடத்திருபார்கள் என்பது என் வாதம்.

நேரடியாக ஊழியருடன் கேட்டு விட்டேன் அவரின் பதில் எனக்கு சற்று ஆச்சரியத்தை கொடுத்தது. 

சம்பளம் கொடுக்க வில்லையாம் வேறு யாரோ சிலர் தான் இரண்டு மாதத்திற்கு உரிய மளிகை சாமான்கள் கொடுத்தார்கள் போலும்.

அவரின் பதிலும் , அவரின் குரலில் உள்ள வலியையும் வார்த்தைகளால் கூற முடியாது.

சிறு நிர்வாகமோ,

பெரிய நிர்வாகமோ, தங்கள் நலனுக்கு தான் முன்னுரிமை போலும் மற்றவர்கள் எல்லாம்.அப்புறம் தான் போல.

விஸ்வாசம் என்கிற வார்த்தை அழிந்து கொண்டு இருப்பதற்கான பின்னாள் உள்ள காரணங்கள் இது தான் போல.

தடுப்பூசி எடுத்து கொள்வோம்,

கொரனாவை ஒழிப்போம் !!

#Bhavan #Hotel #Chennai #Chrompet

#Corona