ஒரு படம் நமக்கு பிடிக்கணும் என்றால், அந்த படத்தில் வரும் சில காட்சிகள் நமக்கு கனெக்ட் ஆகணும். அப்போதுதான் அந்த படம் நம்மை உணர்ச்சியால் தொடும்.
அப்படிப்பட்ட ஒரு feel-good படம் தான் தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’.
---
நினைவுகளில் இடம் பிடித்த இட்லி 🍛
தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கும் இட்லி என்ற உணவில் எங்கோ ஒரு அழகான நினைவு இருக்கும்.
எனக்கும் ஒரு நினைவு இருக்கு — என் எஞ்சினியரிங் இறுதி ஆண்டில், காலேஜ் பஸ் செவல்பட்டி என்ற ஊரில் நிக்கும்போது அங்குள்ள இட்லி கடையில் டிபன் சாப்பிடுவோம். ஒரு இட்லி ₹1!
பத்து இட்லி, சாம்பார், சட்னி சேர்ந்து சாப்பிட்டு போயிடுவோம்.
ஒரு நாள் அந்த கடை ஓனரிடம் கேட்டேன் —
“ஏமாத்தி போன நாள் என்ன பண்ணுவீங்க?”
அவர் சிரிச்சுட்டு சொன்னார் —
> “படிக்கிற பசங்க ஏமாற்ற மாட்டாங்க.
எனக்கு வசதி இருந்தா இலவசமா கொடுப்பேன் அவர்களுக்கு.”
அந்த வார்த்தைகள் இன்னும் நினைவிலே இருக்கு.
அந்த அப்பாவி மனசு கொண்ட அந்த மனிதர் தான் இந்த படத்திலுள்ள சிவநேசன் நினைவுக்கு வந்தார்.
---
அப்பாவின் கனவு, மகனின் பயணம் 🎬
சிவநேசன் தனது மகனை இட்லி கடை நடத்துவார் என்று நம்புகிறார்.
ஆனால் மகன் (தனுஷ்) பணம் தேடி வெளிநாடு செல்கிறான்.
அங்கே விதி விளையாடுகிறது…
இறுதியில் யாரின் கனவு நிறைவேறுகிறது?
அப்பாவின் கனவா, மகனின் கனவா?
அதை ரொம்ப அழகாக திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தனுஷ்.
---
நடிப்பின் நெகிழ்ச்சி 🎭
தனுஷ் ஒவ்வொரு படத்திலும் வேற மாதிரி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து புதியதொரு பரிமாணம் காட்டுகிறார்.
ராஜ்கிரண் நடிப்பு அவ்வளவு இயல்பாக, இதயம் தொட்ட மாதிரி இருக்கு.
தன் தந்தை போலவே உணவு பரிமாறி அதை உண்ணும் அந்த ரெகுலர் வாடிக்கையாளர் கண்ணீர்,
அந்த கன்னுக்குட்டி தனுஷ் கட்டி கொள்வது — உண்மையான feel-good தருணம்.
---
உணர்வுகளோடு இணையும் படம் ❤️
இந்த மாதிரி உணர்வுகளுடன் வாழ்பவர்கள் இந்தப் படத்தை மனதோடு இணைத்துக் கொள்வார்கள்.
ஆனா —
> “பணம் சம்பாதிக்க ஓடணும், அதுவே வாழ்க்கை”
என்று நினைப்பவர்கள் — மன்னிக்கணும்,
இது உங்களுக்கான படம் இல்லை.
---
முடிவாக ✨
தனுஷ் சார், ஒரு அழகான மனசை திரையில் காட்டியதற்கு வாழ்த்துக்கள்! 👏❤️
#IdliKadai #Netflix #MovieReview #Dhanush #TamilCinema

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக