சினிமா நம்ம எல்லாருக்கும் பிடிச்ச ஒன்னு , காரணம் நாம் ரியல் life இல் செய்ய முடியாத சில விஷயங்களை நாம கற்பனை பண்ணி , இப்படி நடந்தா நல்லா இருக்குமே என்று மகிழ்ச்சி அடைவோம். இது தான் சினிமாவும் கூட.
நம்மை போன்ற ஒருவன் , நாம் சந்திந்த சமூகத்தை அப்படியே திரையில் காணும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நாயகன் திரைபடத்தில் வெற்றி பெறும் போது. அப்டி ஓரு படம் தான் கவின் நடித்த ஸ்டார்.
சிறு வயது முதல் நடிக்கணும் என்கிற நாயகன் ஆர்வம் அதற்கு பக்கபலமாக இருக்கும் அவன் குடும்பம் இருந்தும் அவனால் அவ்வளவு எளிதில் அவன் இலக்கை ஏன் அடைய முடியவில்லை என்பதை வெகு இயல்பாக சொல்லி உள்ளார் இயக்குனர்.
நாயகன் பள்ளி பருவம் , கல்லூரி பருவம் என்று வரும் முதல் பாதி கோடைகாலத்தில் ஜில்லுன்னு AC room இல் இருப்பது போல ஒரு feel. கவின் யதார்த்த மாகவும் , மாஸ் நடிப்பு. சமூகத்தோடு ஒட்டி செல்லனும் என்பதற்காக எல்லோர் போல engineering படிப்பு அங்கே கேம்பஸ் interview வில் சினிமா பற்றிய கனவு சொல்வதும் அதற்கு அந்த interviewer செய்வது அழகிய ஹைக்கூ.
யுவனின் இசையில் பாடல்கள் பின்னனி இசை படத்துக்கு மிகப்பெரிய பலம், இரண்டு நாயகிகள் கதைக்கும் பலம் நாயகனுக்கும் பலம், கவின் அப்பாவாக வரும் லால் நடிப்பு செம. கவினின் நடிப்பு மேலும் மேருகேறி உள்ளது.
சினிமா வை ரசிக்கும் ரசிகர்கள், தன் பேஷன் நிறைவேற்ற துடிக்கும் இளைஞர்களுக்கு கண்டிப்பாக இந்த படம் பிடிக்கும்.
இவன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக