தலைவாசல்..
இந்த படம் பற்றி எழுதுவதற்கு முதல் காரணம் 90களில் நடந்த கல்லூரி வாழ்க்கையை கண் முன் நிறுத்திய படம். கமலின் நம்மவர் படத்துக்கு முன்னோட்டம் இந்த படம்.
சென்னையில் உள்ள நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்க கேடான கல்லூரி , அந்த கல்லூரியை எப்படி திருத்தினார் கல்லூரியின் முதல்வர்.
படத்தின் நாயகன் ஆனந்த் ஆனால் கதையின் நாயகன் SP.பாலசுப்ரமணியம் நாயகி சில படங்களில் நடித்து பிரபலமான சிவரஞ்சினி கதாநாயகி.
கல்லூரி சேர்மன் தேர்தல் ,கானா பாடல்கள் , கஞ்சா , அரசியல் என கலந்து கட்டிய கமர்ஷியல் சினிமா. கானா பாடல்கள் பாடும் கானா பாபு தான் " விஜய்" இப்போது தலைவாசல் விஜய். சிறந்த குணசித்திர கதாபாத்திரம்.
வில்லனாக நாசர் "பீடா சேட்" கதாப்பாத்திரத்தில் கலக்கி இருப்பார். இயக்குனர் செல்வா இயக்கத்தில் சிறந்த கல்லூரி திரைப்படம்.
இவன்
ராஜா .க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக