வெள்ளி, 14 அக்டோபர், 2022

உன்னால் முடியும் !!

 உன்னால் முடியும் !!

90's களில் ஆடியோ கேசட்டுகள் பிரபலம் , அதில் பெயர் போனது HMV கம்பெனி. இவர்களின் பக்தி பாடல்கள் ஆல்பம் பெரிய ஹிட். அதில் ஒன்று சூலமங்களம் sister's பாடிய கந்த சஷ்டி கவசம் , கந்த குரு குவசம்.  ஆனால் இவர்கள் எல்லா கடைகளுக்கும் தங்கள் கேசட்டுகளை கொடுக்க மாட்டார்கள் , ஒரு குறிப்பிட்ட deposit தொகை கொடுத்தால் மட்டுமே சாத்தியம்.

எங்கள் கடை அப்போது தான் வளர்ந்து கொண்டிருந்த நேரம் , சண்முகவிலாசம் புக்ஸ்டால். எல்லாருக்கும் வழி கிடைத்தது போலவே எங்களுக்கும் கிடைத்தது ஆம் HMV இணையாக symphony என்ற கேசட் கம்பெனி அப்போது பிரபலமாகி தொடங்கி இருந்தது. அவர்கள் எங்கள் கடைக்கு எந்த deposit தொகை யும் இல்லாமல் உங்களுக்கு விற்பனை ஆவதை வைத்து எங்களுக்கு பணம் செலுத்தினால் போதும் என்றனர்.

Symphony யும் கந்த சஷ்டி கவசம் ஆல்பம் ரெடி செய்தனர் பாடியது மகாநதி பட புகழ் ஷோபனா. எங்கள் கடைக்கு முதலில் 500 கேசட்டுகள் கொடுத்தனர். பள்ளி நேரங்கள் தவிர கிடைக்கும் நேரங்களில் கடைக்கு சென்று வியாபாரம் செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். 

டேப்பிர் கார்டில் மாகநதி ஷோபனா பாடிய கந்த சஷ்டி கவசம் பாட்டை கேட்டேன் , மிகவும் பிடித்தது. சரி இதை விற்பனை செய்ய வேண்டும் ஆனால் கேட்க்கும் பலரும் HMV யின்  சூலமங்களம்  சிஸ்ட்ரஸ் பாடிய கேசட்டுகள் தான் வேண்டும் என்றனர். தனது முயற்சி யில் சற்றும் தளராத விகர்மாதித்ன் போல வந்தவர்களிடம் இந்த பாடலை ஒரு கேட்டு பாருங்கள் என்ற கேட்க ஆரம்பித்தேன்.

முதல் முயற்சி வெற்றி கிடைத்தது , ஆம் கேட்டவர்களுக்கு பிடித்த போக அதே யுக்தியை கையாண்டேன். மற்ற கேசட்டுகள் கேட்டு வந்தாலும் இந்த கேசட் விளம்பர படுத்தினேன். ஒரு வழியாக 500 கேசட்டுகள் விற்று தீர்ந்தது. அடுத்து முறை 1000 கொடுத்தார்கள் நம்பிக்கை அடிப்படை யில் , உள்ளூர வைராக்கியம் இவர்கள் நம்மை நம்பி கொடுத்துள்ளனர்.

கேசட்டுகள் அடுக்கி வைத்திருக்கும் ரெக்கில் மகாநதி ஷோபனா விற்கென்று தனி Row , வருப்வர்களிடத்தில் எல்லாம் இந்த கேசட்டுகள் விற்று தீர்த்து விட வேண்டும் என்ற இலட்சியம். கடவுள் ஆசியுடன் இனிதே நடந்தது. ஆம் 5000 கேசட்டுகள் விற்பனை செய்தோம்.

பின்னாளில் sympony கம்பெனி யின் பல ஆலபங்கள் hit. குறிப்பாக "கட்டும் கட்டி " என்ற ஆல்பம் இன்று வரை மார்கழி மாதத்தில் ஒலிக்கும். மனதில் சின்ன மகிழ்ச்சி நம்மால் முடியும் என்று.

#ஷண்முகவிலாசம்புக்ஸ்டால் 

#திருச்செந்தூர்

#ShanmugavilasamBookStall

#Tiruchendur 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக