நடிகர் ராமராஜன் நடித்த படம். "ஊரு விட்டு ஊரு வந்து " நடிகை கௌதமி யின் கல்யாணம் கடைசி நேரத்தில் தடைபட்டு நிற்க ராமராஜன் அம்மா நீ கட்டுடா தாலியை என சொல்ல கல்யாணம் செய்கிறார் கதாநாயகன். முதல் இரவில் கௌதமி க்கு பேய் பிடித்தது தெரிய வருகிறது. எதற்கு கௌதமியை அந்த பேய் பிடித்தது.
சிங்கப்பூர் உள்ள தன் தந்தை யை தூக்கிலிருந்து ராமராஜன் எப்படி காப்பாற்றினார் என்பதை கவுண்ட மணி ,செந்தில் , காமெடி இளையராஜா இசை சொர்க்கமே என்றாலும் பாடல் இந்த படம் தான் )சுவாராஸ்யமாக சொல்லி இருப்பார்கள்.
சரி இந்த படத்தை ஏன் சொல்லறோம் னா ?
சமிபத்தில் பார்த்த நானே வருவேன் படமும் கிட்ட திட்ட ஒரே கதை தான் , தன் சகோதரனை கொன்றவனை கொல்ல துடிக்கும் ஆவி இன்னொரு உயிர்க்குள் போய் அவளை பாடாய் படுத்தி எடுக்கிறது. அந்த ஆவியுடன் பேசி அது கேட்பதை செய்ய ஒத்துக்கொள்கிறான் கதாநாயகன் தனுஷ்.
#நானேவருவேன்
முதல் பாதியில் ஒரு மகளின் தந்தையாக அப்படி ஒரு பக்குவபட்ட நடிப்பு , அந்த பெண் குழந்தை தனுஷ் ஒவ்வொரு முறையும் Dada என்று கூறுகையில் அவ்ளோ அழகு. தன் குழந்தை க்கு பிரச்சினை என்ற பின் தனுஷ் தன் முகத்தில் காட்டும் expression அவ்ளோ எதார்த்தம். #தனுஷ் #நானேவருவேன்
இரண்டாம் பாதியில் மற்றோரு தனுஷ் அவரும் மனைவி குழந்தை களுடன் சந்தோஷமாக வாழ்கிறார் . இரவில் வேட்டை க்கு செல்கிறார் , அவருக்கு தெரியமால் மகனும் அவருடன் ஏறி செல்கிறார் , மகனுக்கு என்ன ஆனது ? என இரண்டு கதைகளையும் சுவாரஸ்யமான முறையில் முடித்து வைக்கிறார் இயக்குனர் #செல்வராகவன்
இரண்டாம் பாதியில் வரும் தனுஷ் நடிப்பு நடிப்பின் அடுத்த பரிமாணம் , ஒரே ஒரு ஊரிலே பாட்டுக்கு தனுஷ் போடும் ஆட்டம் கலக்கல். @dhanushkraja தன் கண் முன்னே தன் மகள் உடல்நிலை மோசமாவதை ஏற்று கொள்ள இயலாமல் நொறுங்கிறார் #தனுஷ் #நானேவருவேன்
இறுதியில் தன் மகளை காப்பாறினாரா , அந்த ஆவியின் ஆசை நிறைவேறியதா என்பதை எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் தன் அனுபவ இயக்கத்தால் நகர்த்தி செல்கிறார் #செல்வராகவன் #நானேவருவேன்
வென்று விட்டான் 💪🏼👏🏼👏🏼👌🏻👌🏻#Amazonprime
%20(27).jpeg)
%20(28).jpeg)
%20(29).jpeg)
%20(30).jpeg)
%20(31).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(16).jpeg)