திங்கள், 11 ஜனவரி, 2021

தூள் திருநெல்வேலி

 ஜனவரி 10 

இது போன்றதொரு ஒரு ஞாயிறு வருடம் 2003 பொங்கலுக்கு முந்தின வாரம்.

நீண்ட நாளாக செய்ய வேண்டிய கடமை அதை ஆசை,  இலட்சியம் என்று கூட சொல்லலாம். அன்று   திருநெல்வேலி சீமை தான் எனக்கு நகரம். 

அன்றைய திருநெல்வேலி டவுனில் ஒரு மணி நேரத்திற்கு இன்டர்நெட்  browsing க்கு 50₹. நண்பர்கள் மற்றும் Browsing centre அண்ணன் துணையோடு rediff mail account துவங்கினேன். Gmail இல்லாத காலம்.

ஏதோ சாதித்தது போன்ற உணர்வு. படிப்பிற்கான நேரம் முடிந்தது. இப்போது சினிமா விற்கான நேரம். 

அன்றைய பொங்கல்  ரேசில் கமலின் அன்பே சிவம்,

விஜயின் வசீகரா, 

விக்ரமின் தூள். "தில்" லின் தில்லான வெற்றிக்கு பிறகு இணைந்த விக்ரம்-தரணி கூட்டணி. பலத்த எதிர்பார்ப்பு. ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் வித்யாசகர் இசையில் ஹிட். 

தூள் மட்டும் பொங்கல் க்கு ஒரு வாரத்துக்கு முன்னே ரிலீஸ் செய்துவிட்டனர். தூள் திரைப்படம்  பூர்ணாகலா வில் திரையிட்டிருந்தனர். 

டவுனில் இருந்து ஜங்க்ஷன் வந்தாயிற்று. 

தியேட்டரில் கட்டுக்கடங்காத கூட்டம் , அடித்து பிடித்து டிக்கெட்டை வாங்கி நன்பர்களுடன் ஆடி,பாடி 

குதூகளித்த பொழுது. 

அடுத்த இரண்டு மாதங்களில் பட்டய படிப்பின் (Diploma) கடைசி செமஸ்டர் , நண்பர்களில் பலருக்கு அது தான் படிப்பின் கடைசி காலகட்டம் ஆதலால் மிகுந்த மகிழ்ச்சியுடன் கல்லூரி யின் இறுதி நாட்களை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

#Rediffmail #Dhool #Collegedays 

நாட்கள் தொடரும்

ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக