September 5
Radhakrishnan Birthday
#TeachersDay 👩🏫 👨🏫
என் முதல் ஆசிரியை என் அம்மா எங்கள் வீட்டு கதவை கரும்பலகையை
மாற்றி ஒரு குவளை சாதத்தை கையில் வைத்து அன்னையாகவும் , ஆசிரியையாகவும் மாறியவர்கள்.
நர்சரி பள்ளி தொடக்க பள்ளிகள் மீது பயம் களைந்து விருப்பத்துடன் பள்ளி செல்ல காரணமானவர்கள் இருவர் திருமதி.செல்லம்மா , திருமதி.ஈஸ்வரி காலம் முழுவதும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
இப்படி தமிழில் சரளமாக கட்டுரைகள எழுத காரணமான எனது தமிழ் ஆசிரியியை (ஹேமாவதி) , அறிவியலில் ஆர்வம் ஏற்பட திருமதி. ஜானகி டீச்சர்.
வரலாற்றையும் , அரசியலையும் (civics ) வெறும் புத்தக பாடமாக போதிக்காமல் அதன் மேல் இன்று வரை ஈர்ப்பு குறையாமல் படிக்க உதவிய திருமதி.சாந்தா , வசந்தா டீச்சர்.
ஒரு உதவாக்கரையை
இன்று
ஒரு உதவும்கரை ஆக்கி
இச்சமூகத்தில் பொறியாளனாக கட்டமைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக