படத்தின் தலைப்பே எதை பற்றி என்று இருப்பதால் அது தான் கதையே..
தமிழ் சினிமா முதல் உலக சினிமா வரை அடித்து,துவைத்த சப்ஜெட் காதல். இன்றளவும் திரைப்படமாக வருவகிறதென்றால் அதில் மாற்றம் என்றதொரு காரணி இருப்பதால் தான்..
கால மாற்றதிற்கு ஏற்ப மாறபடுவதில் “காதல்” ஒன்றும் விதிவிலக்கல்ல;
மிடில் க்ளாஸ் குடும்பம் அம்மா,அப்பா வளர்ப்பில் அன்பான பையன் கதையின் நாயகன்,
ஹைக்ளாஸ் குடும்பம் அப்பா வளர்ப்பில் மகள் இவர்களுக்கிடையே காதல்.. கைகூடியதா ?
Live In relationship மையமாக வைத்து வந்திருக்கும் மற்றொரு தமிழ்படம். வழக்காமன தமிழ் சினிமாவில் கதாநாயகி செய்வதை இதில் கதாநாயகன் கன கச்சிதமாக செய்கிறான் (அழுவது ) முதற்
கொண்டு.
அவன் மேல் பரிதாபம் வருகிறது ஆனால் அவன் கேள்விகளுக்கு
கதாநாயகி அளிக்கும் பதில் அவள் பக்கம் இருக்கும் நியாயத்தை உணர முற்படுகிறார் இயக்குனர். இறுதியில் சுபமாக முடிகிறது.
ரைசா பின்னி பெடல் எடுக்கிறார். ஹரிஸ் நடிப்பு செம,நம்மில் ஒருவனாகவே இருக்கிறார், நீண்ட நாட்களுக்கு பிறகு யுவன் இசையில் கேட்கும் படி பாடல் ஆனால் எதற்கு இத்தனை பாடல்கள் ?
எனக்கு கலாச்சாரம் தான் முக்கியம் ஆண் என்றால் இப்படி பெண் தான் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று கூறுபவர்களா ? தயவு
செய்து விலகி கொள்ளுங்கள் உங்களுக்கான படம் இல்லை இது.
இந்த கலாச்சாரம், கசமுசா எல்லாம் 5 வருட ஆட்சி மாற்றம் போல் மாறி கொண்டே இருக்கும், என்று ஏற்று கொள்பவர்களுக்கு இது ஒரு நல்ல பொழுது போக்கு திரைப்படம்.
அந்த காலத்தில் இயக்குனர் பாலசந்தர் தன் திரைப்படங்களில் கடினமான கதை களத்தை தன் திரைக்கதையால் இலகுவாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார்;அப்பொழுதும் கலாச்சார பேர்வழிகள் அவரை தூற்றுவார்களாம்;
இயக்குனர் இளன் தான் நினைத்ததில் எந்த சமரசமும் செய்யாமல் காட்சி படுத்தி இருக்கிறார் இறுதி காட்சி வரை.
ப்யார்,ப்ரேமா,காதலுடன்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக