செவ்வாய், 23 ஜூன், 2020

தமிழ் சினிமாவின் புற்று நோய்

தமிழ் சினிமாவின் புற்று நோய்

சினிமாவில் காட்டும் நல்ல காட்சிகள் மனதில் பதிவதை விட,அதில் இடம் பெறும் சில தீய காட்சிகள் ஆழ் மனதில் பதிந்துவிடும்.

அன்றைய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் திரையில் புகை பிடிப்பதை அறவே தவிர்த்தார். அதன் பலன் அவரின் ரசிகர்களும்  புகை பிடிப்பதை தவிர்த்தனர்.

அதன் பிறகு ரஜினியின் கொடி பறக்கிறது தமிழ் சினிமாவில். குறிப்பாக அவரின் ஸ்டைல் அனைவரையும் வசிகரித்தது. ஆனால் அதில் அவரின் புகை பிடிக்கும் பழக்கமும் ஸ்டைலானது தான் துரதிர்ஷடம் .
சினிமாக்களில் வெற்றி பெற எம்.ஜி.ஆர் formula க்களை பயன்படுத்திய ரஜினி இப்பழக்கத்தில் நேரெதிர்.

விளைவு இன்றைய தமிழகத்தில் 40-50 வயது உடையவர்கள் சிகரெட் (புகை)பிடிப்பதற்கு இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒரு காரணம்.

இன்று தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு படையை வைத்திருக்கும் தளபதி
நடிகர் “விஜய்”. அவருக்கென்று சமூக பொறுப்புக்கள் உள்ளது அதை சில சமயங்களில் திறம்பட செயல்படுத்துவார்.

விஜயின் சமீபத்திய திரைப்படமான “சர்கார்” முதல் போஸ்டரில் கையில் சிகரெட் உடன் இருப்பது போல் உள்ளது சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
புகை பழக்கத்திற்கு எதிராக இன்றைய காலகட்டத்தில் அதை கடுமையாக எதிர்ப்பவர் மருத்துவர் திரு.அன்பு மணி ராமதாஸ்.

இது தொடர்பாக அவரிடம் கேட்டதற்கு அந்த சிகரெட் கையில் இல்லாமல் இருந்தாலும் கூட விஜய் ஸ்டைலாக இருப்பார் என்று கூறியிருந்தார் அவரின் கருத்து வரவேற்க்கதக்கது.

பெற்றோர்களை விட கண்மூடித்தனமாக தனக்கு பிடித்த கதாநாயகனை மதிக்கும் ரசிகர்களை கொண்டது தமிழகம். 

விஜய் போன்ற உச்ச நட்சத்திரம் திரையில் புகைபிடிப்பதை தவிர்த்து,
புகை பிடிக்காதீர்கள் என்று கூறினால் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களின் எண்ணிக்கை உயராது மாறாக ஸ்டைலாக புகை பிடித்தால் கண்டிப்பாக அதன் எண்ணிக்கை உயரும்.

இந்த விஷயத்தில் இன்னொரு ரஜினியாக விஜய் வர வேண்டாம்.
புகைப்பதை தவிர்ப்போம்,
புற்று நோயை ஒழிப்போம்.
#Vijay #NoSmoking

இவண்
ராஜா.க

ஞாயிறு, 7 ஜூன், 2020

சிலேடையும், ரிதமும்

பிடித்த வரிகள் !!!

தமிழ் இலக்கணங்களில் அழகான மற்றும் நகைச்சுவை பொருள் படி மக்களுக்கு கருத்தை கொண்டு சேர்வதில்
"சிலேடை" பங்கு அதிகம்.

சிலேடை என்பது இரு நபர்களின் பொதுவான குணங்களை மிக அழகாக எடுத்துரைப்பது.
ரிதம் படத்தில் இடம்பெறும்
" நதியே நதியே "  பாடலில் தண்ணீரையும்,பெண்ணையம் ஒப்பிட்டிருப்பார் கவிஞர்.

காதலியின் அருமை பிரிவில்,
மனைவியின் அருமை மறைவில்,
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் ,
விரல்கள் தொட்டால் உருகும்,
நீரும் பெண்ணும் ஒன்று ,
வாடையிலே !!!!

வண்ண வண்ணப் பெண்ணே, வட்டமிடும் நதியே,
வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு !!

மெல்லிசைகள் படைத்தல்,
மேடு பள்ளம் மறைத்தல் ,
நதிகளின் குணமே
அது நங்கையின்  குணமே !!!

பெண்ணின் பெருமையையம்,
தண்ணீரின் அருமையையும் தன்
"வைர" வரிகளால் பதித்தவர்
வைரமுத்து !!!

#வைரமுத்து #ரிதம் #தமிழ்பாடல்கள்

#Vairamuthu #Rahman

இவன்