வியாழன், 9 ஜனவரி, 2020

தர்பார் என் பார்வையில்

பல வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமா வின் சூப்பர் ஸ்டார் படத்திற்கு (தர்பார்) முதல் நாள் டிக்கெட் கிடைத்தது. அப்பொழுதே சிறிது சந்தேகம் எழுந்தது இருந்தாலும் உற்சாகத்துடன் திரையரங்கம் சென்றாயிற்று.

எந்த தள்ளுமுள்ளும் இல்லாமல்  சீட்டில் அமர்ந்தபின் சுற்றும் முற்றும் பார்த்தேன், பல இருக்கைகள் காலியிருந்தது. ஆகா சிக்கிட்டோம் போல, என்றது மைண்ட் வாய்ஸ்.

மகளை கொலை செய்த வில்லன்களை கொல்ல துடிக்கும்  தந்தை யின் கதை.
யார் கொலை செய்தார் என்று தெரியாமல் அனைத்து ரவுடிகளையும் encounter செய்கிறார் ரஜினி.

என்ன லைட்டா கஜினி ஸ்மெல் அடிக்குதா ஆமாம் அதில் சஞ்செய் ராமசாமி இதில் ஆதித்யா அருணாச்சலம் அவ்வளவே வித்யாசாம். அதற்காக ரஜினியிடம் இன்னொரு கஜினியை எதிர்பார்த்தால் ஏமாற்றமே.

மும்பையில் அதிகரிக்கும் Drugs விற்பனையை கட்டுப்படுத்த வருகிறார் கமிஷனர், துணை முதல்வரின் மகளை வில்லன்கள் கடத்துகிறார்கள் அப் பெண்களுடன் மேலும் பல பெண்களை காப்பற்றுகிறார், வில்லனை சிறை பிடிக்கிறார் பின் அவனை கொல்கிறார் இப்படியாக முதல் பாதி செல்கிறது.

சரி இரண்டாம் பாதி நன்றாக இருக்கும் நம்பினால் ஏமாற்றமே. ரஜினி படத்தில் வில்லன்கள் தான் ரஜினியின் பாதி பலமே இதில் வில்லன்களுக்கு வெறும் buildup தான் (international don) பட்டம் வேறு.

இந்த கதைக்கு யாரும் சொந்த கொண்டாடத போதே தெரிகிறது இப்படத்தில் கதையே இல்லையென்று.
யூகிக்க பட்ட திரை கதை அலுப்படைய செய்கிறது.

படத்தின் பலம்
ரஜினி,அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், அனிருத் பின்னணி இசை அவ்வளவே.  நயன்தாரா எதற்கு ?

ரஜினியின் தர்பார் சும்மா கிழியுது !!!

#தர்பார் #Darbar

2 கருத்துகள்: