வெள்ளி, 7 டிசம்பர், 2018

பாஜகவும் , அதிமுகவும்

அறிவோம் அரசியல்:

அரசியலில் கட்சிகளின் இடையே ஆன கூட்டணி வேடிக்கையாகவும்,விசித்திறமாகவும் இருக்கும்;அதில் ஒன்று அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையே உள்ள உறவு ருசிகரமானது.

அது ஏன் குறிப்பாக BJP அதில் ஒரு வரலாற்று சம்பவம் பதிவாகியுள்ளது.
1998ல் திரு.வாஜ்பாய் தலைமையில் NDA government அங்கம் வகித்தது அதிமுக.

அச்சமயத்தில் தமிழகத்தில் திமுக தலைமையில் ஆட்சி நடக்கிறது ; மத்திய அரசின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்தார் அம்மையார். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட ஒரு அரசை கலைக்க மேதகு திரு.வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு கலைக்க விரும்பவில்லை.

அப்படி இருந்த பாஜக தான் இப்போது
இப்படி இருக்கிறது என்பது வேறு கதை.

சரியாக 13 மாதங்கள் ஆகையில் அதிமுக NDA அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றது, NDA அரசை கலைக்க காங்கிரஸ் உடன் “கை” கோர்த்தது  உடன் டெல்லி சென்றது அதிமுக தலைமை, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஒரு ஓட்டு வித்யாசத்தில் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க தவறியது பாஜக.

அந்த 13 மாத காலத்தில் திரு.வாஜ்பாய் பதவி முள் மேல் படுக்கை போன்றது அதனால் தான் என்னவோ பாராளுமன்றம் விட்டு வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் வணக்கம் வைத்தது மிக பிரபலம்.

பாராளுமன்றம் கலைக்க பட்டு
ஒட்டு மொத்த இந்திய தேசமும் தேர்தலை சந்தித்து. அதன் பின் நடந்த தேர்தலில் திமுக மற்றும் பிற மாநில கட்சிகளின் தயவுடன்  NDA அரசு வெற்றி பெற்று 5 ஆண்டுகள் பதவி வகித்தது ஓரு புறம்.

அன்று நடந்த ஆட்சி கலைப்பிற்காக அதிமுக வின் தலைமையில் ஏற்பட்ட வெற்றிடத்த பயன்படுத்தி அக்கட்சியை (அதிமுக) BJP தன் கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்துவிட்டது.

அறிந்ததும், அறிவதும் தொடரும்.
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக