ஞாயிறு, 12 மார்ச், 2017

மாநில கட்சிகளுக்கு அடித்த எச்சரிக்கை மணியா ??

சமீபகாலமாக இந்தியாவில் உத்திரபிரதேசம்,பஞ்சாப், மணிப்பூர்,மகாராஷ்ட்ரா, கர்நாடகா,ஹரியானா மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பிராந்திய கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திந்து வருவதோடு ஆட்சியையும் பறி கொடுத்துள்ளது.

"கழுதையும் தேர்தலில் ஜெயிக்கும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் நின்றால்.. "என்று இருமாப்புடன் இருந்தவர்கள்,"நான் படுத்து கொண்டே
ஜெயிப்பேன்.. "என்ற சொன்ன திரு.காமராஜ் அவர்களுக்கு எதிராக களம் கண்டார் முதறிஞர் ராஜாஜி.

1967 ல் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தீய தீர வேண்டும்  என்ற ஒற்ற கொள்கையுடன்  காங்கிரஸ் க்கு எதிராக  18 கட்சிகள் துணையுடன் மெகா கூட்டணி அமைத்தார் திரு.ராஜாஜி.
திரு. அண்ணாதுரை பேச்சு, திரு.கருணாநிதியின் தேர்தல் வியூகம் ,MGR இன் புகழ் என எல்லாம் சேர்ந்து திமுக கூட்டணி 179 இடங்களிலிலும் திமுக 137 இடங்களில் அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி ஒரு மாநில கட்சி அரியனை ஏறி திமுக அச்சாரமிட்டது.
இதனை தொடர்ந்து   ஆந்திரா,மகாராஷ்ட்ரா,பஞ்சாப்,
கர்நாடகா,மணிப்பூர்,காஷ்மீர்,பீகார்,மேற்கு வங்கம்,உபி வரை மாநில காட்சிகள் கோலாச்சியது, இதனால்
இந்த மாநிலங்களில் மொழி,கலாச்சாரம் தனித்துவம் பெற்று விளங்கியது.

தேசிய கட்சிகளின் வளர்ச்சியால் பிராந்திய மொழிகளான மராத்தி,ஒடியா,அஸ்ஸாமி,பீகாரி,
ஹரியான்வி,மைதிலி புறக்கணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அழிந்தே போனது அங்கேயெல்லாம் இந்தியே பிராதான மொழியாக்க முயற்சிக்கப்பட்டு அதில் பாதி வெற்றியும் பெற்றது.

 அண்ணாதுரை,கலைஞர்,ஜெயா,
மம்தா, பிரகாஷ் சிங் பாதல்,
பால் தாக்ரே,ஓமர் போன்ற வலுவான தலைவர்கள் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளததால் தங்கள் மாநில உரிமைகள் ஒரளவு காத்துவந்தனர்.

இதே போன்று இன்றைய  தலைவர்கள் தங்கள் மாநில கொள்கையையும், மாநில உரிமைகளையும் எப்படி தேசிய கட்சிகளிடமிருந்து பாதுகாக்க போகிறார்கள் இது மாநில  கட்சிகளுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்.

இந்தியா போன்ற பண்முகம் கொண்ட நாடுகளின் பெருமையே பல மொழி,பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரம் தான் இவற்றை பேணிக்காக்கும் கடமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சம பங்குண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக