.
அலஙகாநல்லூர் " வாடி வாசல்" இன்று தமிழகம் மட்டுமல்லாமல் இந்த ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது. அதோடு நில்லாமல் தமிழக மக்கள் அனைவரையும் ஒரே நேர் கோட்டில் ஒன்றினைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக மூடி கிடக்கும் இந்த கதவுகளை ஜன நாயகத்தின் அரணான சட்டமும்,மத்திய,மாநில அரசுகளும் திறந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்களுக்கு வருடா வருடம் பொங்கல் பரிசாக மாற்றத்திற்கு பதிலாக "ஏமாற்றத்தையே " பரிசாக கொடுத்தது.
"கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பார்கள்" இந்த முறையும் தட்ட ஆரம்பித்தினர் ஆனால் இங்கே இந்த முறை தட்டுபவர்கள் இளைஞர்கள். "இளம் கன்று பயமறியாது "ஆதலால் என்னவோ இதன் சத்தம் பலமாகவே ஒலிக்கிறது. இந்த போராட்டம் பீட்டா என்ற தனியார் அமைப்புக்கு எதிரானது மட்டும் அல்ல மாறாக தங்கள் தனித்துவத்தையும்,கலாசாரத்தையும் யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம் என்று உரக்க சொல்கிறார்கள் தமிழ் மக்கள் இந்த உலகத்திற்கு.
மத்திய / மாநில அரசுகள் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாக தான் செல்லும்.
இரவோடு இரவாக பண மதிப்பு நீக்குதல் (demonetisation) மூலம் 14 இலட்சம் கோடி மதிப்பு இழக்க வைக்கும் சர்வ வல்லமை கொண்ட அதிகாரம் நடுவன் (மோடி) அரசுக்கு உண்டெனில் அவசர சட்டம் மூலம் "ஏறு தழுவுதல் "அனுமதிக்க மறுப்பதேன் ? உங்கள் கூற்று படியே உச்சநீதி மன்ற மாண்பை கெடுக்கும் செயல் என்றால், காவிரி நதி நீர் பங்கீட்டீல் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் தீர்ப்பை மதிக்காமல் பாராளுமன்றம் மூலம் காலம் தாழ்த்தும் உங்கள் செயலை என்ன வென்று சொல்வது.நில ஆக்கிரமிப்பு வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இழுக்கையில் நாடாளுமன்றத்தில் அவசர சட்டம் கொண்டுவந்த பொழுது மாண்பு மீறப்படவில்லையா ???
"நாணல் போல வளைவது தான் சட்டம் ஆகுமா ? அதை வளைப்பதற்கு மத்திய வழக்கறிஞர் (Attorney general) பட்டம் வேணுமா என்றே எண்ண தோன்றுகிறது. அதிகாரம் இருந்தும் சட்டசபையில் அவசர சட்டம் மூலம் ஏறுதழுவுதல் நிறைவேற்றமால் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவே முனைப்பு காட்டுகிறது மாநில அரசு,
தமிழ்கத்தில் என்ன நடந்தாலும் நமது மத்திய (மோடி) சர்கார்க்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறது, இந்த வேடிக்கை குணம் மக்களுக்கும் ஏற்பட்டால் நாளை இந்தியாவின் இறையாண்மைக்கே ஆபத்தாகிவிடும் என்றே எண்ண தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக