அன்று சிவாஜியின் " பாசமலர்" தொடங்கி நேற்று வந்த
சிகா வின் "நம்ம வீட்டுபிள்ளை" வரை திரையில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை பாசத்தை வைத்து
இன்று வெளி வந்துள்ள மற்றோரு திரைப்படம் "உடன்பிறப்பே ".
நாளையும் இது போன்று படம் வரும் காரணம் நம் மக்களும் நம் மண்ணில் இன்றளவும் உளவும் அண்ணன்-தங்கை இடையிலான பாசமும்.
உலக சினிமா பார்ப்பவர்கள் சிலர் இப்படத்திற்கான விமர்சனத்தில் கிரிஞ்ச் (cringe ) என்று மேற்கோள் காட்டியிருந்தனர்.
சரி என்னதான் இன்று உலக சினிமா வெல்லாம் நாம் பார்த்தாலும் ஒரு காலத்தில் திருச்செந்தூரில் கிருஷ்ணா டாக்கீஸ் "கிழக்கு சீமையிலே" பார்த்து கண் வேர்த்த பயலுக தானே நாம என்று முடிவு செய்து பார்க்க ஆரம்பித்தேன்.
அமேசான் ப்ரைமில் வெளி வந்துள்ளது சூர்யா வின் தயாரிப்பில் அவரின் மனைவி ஜோ வின் 50தாவது திரைப்படம்.
பெரும்பாலான அண்ணன் தங்கை பாச படங்களில் தங்கையின் கணவன் மற்றும் அவனது குடும்பத்தாரை வில்லன்களை கொடூரமாக காட்டுவது தமிழ் சினிமா செண்டிமெண்ட் அந்த செண்டிமெண்ட் இதில் இல்லை என்பது ஆறுதல்.
சசிகுமார்-ஜோ இருவரும் சேர்ந்து திரையில் தோன்றும் காட்சி குறைவே,
மாறாக திரைக்கதை யில் அவர்களின் பாசத்தை காட்டிய இயக்குனர் க்கு சபாஷ்.
அடி,தடி யை நம்பும் அண்ணன் சசிகுமார்,
அகிம்சை போதிக்கும் மாப்பிள்ளை சமுத்திரகனி இவர்களுக்கு இடையேயான கொள்கை முரண்பாடால் பிரிவு பிறகு காலமும் நேரமும் எப்படி இவர்களை சேர்த்து வைத்தது என்பதை கொஞ்சம் அடி தடி நிறைய பாசம் கலந்து கொடுத்திருக்கிறார்கள்.
அண்ணனால் வளர்க்க பட்ட தங்கை கள் இப்படத்தை பார்த்தால் கண்ணீர் க்கு guarantee. மற்ற அண்ணன் - தங்கைகளுக்கு இப்படி ஒரு அண்ணன் கிடைக்காதா இப்படி ஒரு தங்கை கிடைக்காதா என படம் பார்க்கும் போது நினைக்க வைப்பது தான் பார்க்கும் சினிமா விற்கு வெற்றி.
அந்த வெற்றியை இப்படம் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்கலாம் தாராளமாக.
இவண்
ராஜா.க
#Tamilcinema #udanpirape #Jothika #sasikumar