வியாழன், 13 பிப்ரவரி, 2020

மசால் தோசையும் , Arranged Marriage ம்

மசால் தோசையும் ,
Arranged Marriage ம்

உள்துறை அமைச்சர் (மனைவி) உடன் வெளியே சென்றிருந்தேன்;
பார் புகழும் "அண்ணா சாலை"யில் நீண்ட நேர பயணத்தில்  சற்று இளைப்பாற ஒரு அடுமனை (பேக்கரி)க்குள் சென்றோம்.

இன்முகத்துடன் வரவேற்ற waiter மெனு கார்டை கொடுக்க பிரித்து பார்த்தேன்; வடிவேலு ஒரு படத்தில் கூறுவாரே Veg Roll, Spring Roll, என புதிது புதிதாக உணவு வகைகள் கண்டுபிடித்து நாட்டை முன்னேற்ற வழிய பாருங்கப்பானு சொல்லுவாரு.
அது போல அத்தனை வகைகள் இருந்தது மெனுக்கார்டில்.

சிறு வயது முதல் இன்று வரை எனக்கு Veg Puff மீது பிரியம் அதை ஆர்டர் செய்ய, உள்துறை அமைச்சரோ waiter இடம் ஆங்கிலத்தில் உரையாடி கேக் ஆர்டர் செய்தார்.

உங்களுக்கு Pineapple Pastry
கேக் பிடிக்காதா என கேட்க,
இப்படில்லாம் கேக் இருப்பதே இப்போ தான் எனக்கு தெரியும் என நான் கூற, எப்ப பாரு கிண்டல்,நக்கல் என மறுமுனையில்.

சாப்பிட்டு முடித்த பின் பில் வந்தது; எடுத்து பார்த்தேன் சிறிய அதிர்ச்சி  கேக் 99₹ என்று இருந்தது, ஏய் ஒரு கேக் 99₹  ஆ !!! என்ன ஸ்டேட் govt, என்ன central govt என மனசுக்குள் கேட்டு;

இந்த ரூபாய்க்கு ஒரு மசால் தோசையும், பில்டர் காபியும் குடிச்சிருக்கலாம் மைண்ட் வாய்ஸ் என நினைத்து வெளியே கூற;
இப்போ தெரியுது உங்களுக்கு ஏன் "arranged marriage" ஆச்சு னு என உள்துறை அமைச்சர் கூற

சட்டென கவுண்டர் மகான் போல் கவுண்ட்டர் கொடுக்க முடியாமல்,
" சொல்லால் அடித்த சுந்தரி " என விஜயகாந்தை போல் இளையராஜா பாடலை பாடி பில்லை கட்டி நடையை கட்டினோம்.

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்.

இவன்
ராஜா.க

சனி, 8 பிப்ரவரி, 2020

வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும்
சிற்றருவி, தண்ணீர் இல்லாமல் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு!

எல்லா அருவிகளிலும் குளித்த பிற்பாடு இந்த சிற்றருவியில்   குளித்தால் தான் ஒரு finishing touch கிடைக்கும்.

காலத்தின் கோலம்;
வறட்சி சிற்றருவியையும் இன்று விட்டு வைக்கவில்லை..

அன்று பழமுதிர் தோட்டம் அருவி,
நேற்று செண்பகாதேவி அருவி,
இன்று சிற்றருவி..
நாளை ?

 #Courtallam | #Chitraruvi

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

வைரமுத்துக்கள்

ஒவ்வொருவரின் அன்றாட வாழ்க்கையில் பயணத்தின் பங்கு அதிகம். அப் பயணத்தில் திரைப்பட பாடல்களின் பங்கு அதிகம். சிலர் இசையை ரசிப்பார்கள் சிலர் பாடல் வரிகளை ரசிப்பர். நம் மன நிலையை பொறுத்து இரண்டும் வேறுபடும்.

விவரம் தெரிந்த நாள் முதல் கவிஞர் வைரமுத்து win வரிகளை கேட்டு ரசிக்கும் வைரமுத்துக்களில் அடியேனும் ஒருவன். அப்படி ரசித்த பாடல்கள் பல அதில் சில ஒற்றுமையை  உணர்ந்துள்ளேன்.அது பற்றிய ஒரு பதிவு.

வைரமுத்து(க்களி)வின் பாடல்களில் இருக்கும்  உவமைகள்,வேறு ஒரு பாடலில் மீண்டும் இடம்பெறும்.
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறுது  வேறுபட்டிருக்கும்.

அதில் சில பாடல் வரிகள். 

பாடல் : திருமண மலர்கள் தருவயா(பூவெல்லாம் உன் வாசம்)

வரிகள் : ஞாயிறுக்கும்,திங்களுக்கும் தூரமில்லை,

பாடல் : போராளே பொண்ணு தாய்(கருத்தம்மா)

வரிகள் : அது சரி வியாழனும்,வெள்ளியும் இருப்பது தூரமில்லை..

பாடல் : கொஞ்சம் நிலவு(திருடா திருடா)

வரிகள் : கொஞ்சம் கடவுள்,
கொஞ்சம் மிருகம்

பாடல் : கடவுள் பாதி (ஆளவந்தான்)

வரிகள் : கடவுள் பாதி,
மிருகம் பாதி..

பாடல் : என்னை பந்தாட பிறந்தவளே

வரிகள் : மண்ணில் உள்ள வளம் என்ன என்ன வென்று செயற்கை கோல் அறியும் பெண்ணே.
உன்னில் உள்ள வளம் என்ன வென்பெதுன்று உள்ளம் கை அறியும் பெண்ணே.

பாடல் : இளமை விடுகதை (வரலாறு)

மண்ணில் இருக்கும் புதயலை செயற்கை கோல் அறியும்,
பெண்ணில் இருக்கும் புதயலை இயற்கை தான் அறியும்..

வைரமுத்துகளுடன்