வெள்ளி, 28 ஆகஸ்ட், 2026

Hi – ஒரு அழகான Feel Good Love Story ❤️

 Hi – ஒரு அழகான Feel Good Love Story ❤️

ஒரு திரைப்படம் பார்க்கும் ரசிகனுக்கு, அந்தப் படத்தின் நாயகனைப் பார்த்ததும்,

“அட… நம்மள மாதிரியே இருக்கானே!”

என்று தோன்ற வேண்டும்.

அல்லது,

“நாமும் இப்படியிருந்தா நல்லா இருக்குமே…”

என்று நினைக்க வைக்க வேண்டும்.

அப்படி ஒரு connect கிடைத்துவிட்டால், அந்தப் படம் ரசிகனுக்கு வெற்றி பெற்றுவிடுகிறது.

Hi படத்தின் நாயகன் கவின் அந்த முதல் ரகம்.

அம்மா பையன். கொஞ்சம் பயந்த சுபாவம். எதற்கெடுத்தாலும் emotional ஆகிறவன். காதலை propose செய்தால் rejection வாங்குகிறவன்.

அப்படிப்பட்ட மயில்சாமி என்கிற மயில், காதலித்து திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற ஆசையில் வீட்டை விட்டு வெளியேறி, தன் காதலை எப்படி கரம் பிடிக்கிறான் என்பதுதான் Hi.

கதை புதுசு என்று சொல்ல முடியாது.

ஆனால் அதை சொல்லியிருக்கும் விதத்திலும், கதாபாத்திரங்களின் இயல்பான தன்மையிலும் ஒரு அழகு இருக்கிறது.

கவின் – நயன்தாரா chemistry நன்றாக work ஆகிறது. ❤️

நயன்தாரா இன்னும் அழகாகவே தெரிகிறார். குறிப்பாக romance scenes-ல், அவருடைய expressions மற்றும் body language ரசிக்க வைக்கிறது.

கவின் வழக்கமான “hero” மாதிரி இல்லாமல், ஒரு சாதாரண இளைஞனாகவே தெரிகிறார்.

சிரிக்க வைக்கிறார்.

தேவையான இடங்களில் அழ வைக்கிறார்.

சில இடங்களில் நம்மையே அவருக்குள் பார்க்க வைக்கிறார்.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று…

கவினை reject செய்த பெண், அதற்கான விளக்கத்தைச் சொல்லிவிட்டு செல்கிறார். கவின் சட்டையின் முதல் பட்டனைப் போட்டுக்கொள்கிறார்.

அதைப் பார்த்த நயன்தாரா அந்த பட்டனை மீண்டும் கழற்றிவிடுகிறார்.

பெரிய dialogue எதுவும் இல்லை.

ஆனால் அந்த ஒரு gesture-ல் காதலை சொல்லிவிடுகிறார்கள்.

இதை இவ்வளவு அழகாக ஒரு காதல் காட்சியாக மனதில் பதிய வைத்த இயக்குநருக்கு ஒரு சபாஷ்! 👏❤️

பிரபு, பாக்யராஜ், ராதிகா, சத்யன் என பெரிய நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

பிரபுவின் மனைவியாக வரும் நடிகையின் சிறப்புத் தோற்றமும் கவனிக்க வைக்கிறது.

First half – ஜாலி. 😄

Second half – அதே ஜாலியோடு கொஞ்சம் sentiment. ❤️

இரண்டாம் பாதியில் சில இடங்களில் கொஞ்சம் கத்திரி போட்டிருந்தால் இன்னும் crisp-ஆ இருந்திருக்கும்.

ஆனால் மொத்தத்தில்,

காதல் + romance + comedy + கொஞ்சம் sentiment கலந்து ஒரு pleasant feel-good movie. ❤️

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனால், ஒரு நல்ல இரண்டு மணி நேர entertainment-ஆக ரசிக்கலாம்.

Hi – ஒரு perfect love story இல்லையென்றாலும், ஒரு அழகான feel-good

love story. ❤️

— இவன்

ராஜா. க @Kavin_m_0431 @NayantharaU #Hi

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2026

சௌகார் ஜானகி — ஒரு நடிகை அல்ல, ஒரு நடிப்புப் பள்ளி

சில நடிகர்களை நாம் அவர்கள் நடித்த கதாபாத்திரங்களுக்காக நினைவில் வைத்திருப்போம்.

சிலரை அவர்கள் நடித்த படங்களுக்காக நினைவில் வைத்திருப்போம்.

ஆனால் சௌகார் ஜானகி போன்ற சில நடிகைகளை, அவர்கள் நடிப்பையே நினைத்துப் பார்த்து ரசிப்போம்.

எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் ஒருவரான கே.பாலசந்தரின் படங்களில் சௌகார் ஜானகி ஒரு தனி presence.

எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள் என்று ஒவ்வொரு படத்திலும் அவருடைய நடிப்பு ஒவ்வொரு விதமாக இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை அவர் நடித்தார் என்று சொல்வதைவிட, அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

அவருடைய dialogue delivery மட்டும் இல்லை…

ஒரு பார்வை, ஒரு reaction, ஒரு சிறிய body language கூட அந்தக் காட்சியின் mood-ஐ மாற்றிவிடும்.

குறிப்பாக பாமா விஜயம் போன்ற படங்களில் அவருடைய timing-ஐ இன்றைய comedy scenes-ோடு compare செய்து பார்த்தாலும் ரசிக்க முடியும். அந்தக் காலத்து நடிப்பு என்பதால் மட்டும் அது பழையதாகத் தெரியாது. அதுதான் அவருடைய பெரிய பலம்.

அதே சௌகார் ஜானகியை தில்லுமுல்லு படத்தில் பார்க்கும்போது இன்னொரு surprise.

அது இரட்டை வேடம் கிடையாது. ஆனால் அவர் காட்டும் நடிப்பில், ஒரே கதாபாத்திரத்துக்குள் இரண்டு விதமான shades இருப்பது போல ஒரு feel இருக்கும்.

ரஜினிகாந்துடன் வரும் அந்த comedy portions-ல் அவருடைய expressions, timing, reaction எல்லாமே வேற லெவல். காட்சியில் அவர் பேசும் வசனத்தைவிட, அவர் கொடுக்கும் reaction-ஐ பார்த்து சிரிக்க வைக்கும் அளவுக்கு அந்த performance இருக்கும்.

அதனால்தான் சௌகார் ஜானகியின் நடிப்பை “அந்தக் காலத்து நடிப்பு” என்று மட்டும் சொல்லிவிட்டு கடந்து போக முடியாது.

இன்றைய தலைமுறை performance, screen presence, comic timing, natural acting என்று தனித்தனியாக பேசும் விஷயங்கள் எல்லாம் அவருடைய நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது.

ஒரு நடிகை அழகாக நடிக்கலாம்.

ஒரு நடிகை நன்றாக வசனம் பேசலாம்.

ஒரு நடிகை comedy செய்யலாம்.

ஆனால் ஒரே career-ல் இத்தனை விதமான கதாபாத்திரங்களையும், இத்தனை இயல்பாக carry செய்வது தான் சௌகார் ஜானகியின் தனித்துவம்.

கே.பாலசந்தரின் படங்களில் அவரைப் பார்க்கும்போதெல்லாம், “இந்தக் கதாபாத்திரத்திற்கு இவரைத் தவிர வேறு யாரை யோசித்திருக்க முடியும்?” என்ற எண்ணம் வரும்.

அதுதான் ஒரு great actor-ன் அடையாளம்.

சினிமா மாறிவிட்டது.

கதைகள் மாறிவிட்டன.

நடிப்பு style மாறிவிட்டது.

ஆனால் நல்ல நடிப்புக்கு expiry date கிடையாது.

அதனால் தான் பல வருடங்கள் கழித்தும் எதிர்நீச்சல், பாமா விஜயம், இரு கோடுகள், தில்லுமுல்லு போன்ற படங்களில் சௌகார் ஜானகியைப் பார்க்கும்போது, அவருடைய performance இன்னும் fresh-ஆகவே இருக்கிறது.

ஒரு தலைமுறை பார்த்து ரசித்த நடிகை…

இன்னொரு தலைமுறை பார்த்து வியக்க வேண்டிய நடிகை.

தமிழ் சினிமாவின் அந்த அற்புதமான நடிப்புத் தலைமுறையைச் சேர்ந்த சௌகார் ஜானகி இன்று நம்மிடையே இல்லை.

சௌகார் ஜானகி மறைந்தார்.

ஆனால் அவர் விட்டுச் சென்ற நடிப்பு — திரையில் என்றும் மறையாது. ❤️

இவன் 

ராஜா . க 

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

DC – ராவான ஒரு Gangster உலகம் | Movie Review

ஒரு போலீஸ் வாகனத்தை வழிமறித்து, அதில் இருக்கும் ஆயுதங்களை ஒரு gang கடத்திச் செல்கிறது. அந்த gang-ன் தலைவன் Das. இந்தக் கதாபாத்திரத்தில் இயக்குநர் Lokesh Kanagaraj ஹீரோவாக நடித்திருக்கிறார்.

ஒரு தந்தை, தன் மகனை English Medium-ல் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில், தன்னிடம் இருக்கும் சொத்துகளை விற்று ₹7 லட்சம் பணத்தைச் சேர்க்கிறார். அந்தப் பணத்தை ஒரு போலீஸ் அதிகாரி பறித்துக்கொண்டு, அந்தத் தந்தையைக் கொலை செய்கிறார்.

அந்தப் பணம் அந்த மகனுக்குக் கிடைத்ததா? அவன் தன் தந்தையின் கனவை நிறைவேற்றி படிக்கச் சென்றானா? என்பதுதான் படத்தின் முக்கியமான emotional thread.

அதன்பிறகு படம் முழுவதும் துப்பாக்கிச் சத்தம், violence, bloodshed என்று ஒரு raw world-க்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. அதற்கு கூடுதல் பலமாக இருக்கிறது Anirudh-ன் BGM. சில காட்சிகளில் காட்சியை விட BGM-தான் அந்த intensity-ஐ இன்னும் அதிகமாக உணர வைக்கிறது.

Das-ஆக Lokesh Kanagaraj

இயக்குநராக Lokesh Kanagaraj-ஐ ரசித்திருக்கிறேன். ஆனால் ஹீரோவாக அவரை எப்படி பார்க்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்புடன் தான் படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

Das கதாபாத்திரத்தில் மிகவும் raw-ஆ நடித்திருக்கிறார்.

அவருடைய body language, பேசும் விதம், fight sequences என ஒரு gangster character-க்கு தேவையான roughness-ஐ கொண்டு வர முயற்சி செய்திருக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் வரும் காட்சிகளில் romance-ஐ கொண்டு வரவும் முயற்சி செய்திருக்கிறார்.

ஆனால் அந்த romantic portions மட்டும் சில இடங்களில் கதையின் rawness-க்கு நடுவில் கொஞ்சம் வேறுபட்டதாகத் தெரிகிறது.

Sanjana & Wamiqa

முதல் கதாநாயகியாக வரும் Sanjana Krishnamoorthy – Parvathi கதாபாத்திரம் சில காட்சிகளில்தான் வந்தாலும், மனதில் நிற்கிறது.

இரண்டாவது கதாநாயகியாக வரும் Wamiqa Gabbi – Chandra வேற லெவல்!

குறிப்பாக அவர் துப்பாக்கி சுடும் காட்சிகள் எல்லாம் பட்டாசு! 🔥

அவருடைய character-க்கு இன்னும் கொஞ்சம் depth கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் வந்தாலும், performance மற்றும் action portions-ல் கவனம் ஈர்க்கிறார்.

Action – ரத்தமும் சதையுமாக!

Das-ஐ சுற்றி வரும் நண்பர்கள் மற்றும் gang members-ன் நடிப்பும் மிகையாக இல்லாமல் இயல்பாக இருக்கிறது.

குறிப்பாக interval-க்கு முன் வரும் fight sequence ரொம்ப raw.

ரத்தம், சதை, violence என்று எந்தவிதமான polishing-ம் இல்லாமல் காட்டியிருப்பது அந்தக் காட்சிக்கு ஒரு தனி intensity கொடுக்கிறது.

தமிழ் சினிமாவில் வழக்கமாக பார்க்கும் gangster/action movie template-ஐ தாண்டி, Korean மற்றும் English crime films பார்க்கும் உணர்வை சில இடங்களில் கொடுக்கிறது.

படம் கொடுக்கும் இன்னொரு உணர்வு…

இந்தப் படத்தைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தொடர்ந்து மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

நாமெல்லாம் எவ்வளவு comfortable-ஆ ஒரு வாழ்க்கையை வாழ்கிறோம்!

படத்தில் காட்டப்படும் அந்த இருண்ட உலகம், violence, பணத்துக்காக நடக்கும் கொலைகள், போலீஸைச் சுற்றி வரும் சில சம்பவங்கள் — இவை எல்லாமே நம்முடைய சாதாரண வாழ்க்கைக்கு முற்றிலும் எதிரான ஒரு உலகத்தை காட்டுகின்றன.

சில காட்சிகளில் போலீஸ் என்றாலே வேறு ஒரு பயம் வருகிற அளவுக்கு அந்த உலகம் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில்…

DC வழக்கமான தமிழ் gangster movie மாதிரி இல்லை.

இது ஒரு raw gangster movie.

துப்பாக்கிச் சத்தம், ரத்தம், violence, gangster world, Anirudh-ன் BGM, Lokesh-ன் raw performance — இவை எல்லாம் சேர்ந்து ஒரு வேறுபட்ட experience-ஐ கொடுக்கின்றன.

அதே நேரத்தில், சில character arcs மற்றும் romantic portions இன்னும் கொஞ்சம் convincing-ஆ எழுதப்பட்டிருக்கலாம் என்ற குறையும் இருக்கிறது.

ஆனால் படம் முடிந்த பிறகும் சில காட்சிகளும், அந்த raw world-ம் மனதில் நிற்கிறது.

ராவான ஒரு gangster உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் படம் — DC. 🎬🔥

குறிப்பு: இது A Certificate / 18+ படம். குழந்தைகளுடன் பார்க்க வேண்டாம்.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஒரு தலைமுறையின் Chubby Crush… ஹன்சிகா மோத்வானி! ❤️

 தமிழ் சினிமாவின் “Chubby Charm” கதாநாயகிகளில் ஹன்சிகாவுக்கும் ஒரு தனி இடம் உண்டு. ❤️

குஷ்பு…

ஜோதிகா…

அதற்குப் பிறகு ஒரு காலகட்டத்தில் நயன்தாரா…

தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகியின் அழகு என்பது எப்போதுமே “size zero” மட்டும் கிடையாது.

கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருந்தாலும், முகத்தில் ஒரு குழந்தைத்தனம்… கண்களில் ஒரு குறும்பு… திரையில் வந்தாலே ஒரு positive vibe…

அந்த வரிசையில் 2010-களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் ஹன்சிகா மோத்வானி. ❤️

விவேக் ஒரு காமெடியில் சொல்வார்…

“தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் size இருந்தால்தான் பிடிக்கும்” என்று.

காமெடியாக சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவின் heroine ரசனையைப் பார்த்தால் அதில் கொஞ்சம் உண்மை இருப்பதை மறுக்க முடியாது. 😄

குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய காலம் முதல், ஜோதிகாவின் இயல்பான அழகை ரசித்த காலம் வரை… heroine-ன் உடல் தோற்றத்தைவிட அவளிடம் இருக்கும் ஒரு குடும்பத்தன்மையான charm-ஐ தமிழ் ரசிகர்கள் அதிகம் ரசித்திருக்கிறார்கள்.

அந்த charm-ஐ தன்னுடைய generation-ல் கொண்டு வந்தவர் ஹன்சிகா.

குழந்தை நட்சத்திரமாகத் தொடங்கிய பயணம்…

மாப்பிள்ளை மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம்…

அதற்குப் பிறகு எங்கேயும் காதல், வேலாயுதம் என பெரிய ஹீரோக்களுடன் பயணம்.

ஆனால் ஹன்சிகாவின் career-ல் ஒரு முக்கியமான turning point என்றால்…

Oru Kal Oru Kannadi.

உதயநிதி ஸ்டாலினின் கதாநாயகனாக முதல் படம்.

ஹன்சிகா கதாநாயகி.

படம் மிகப்பெரிய வெற்றி.

அந்தப் படத்தின் வெற்றி உதயநிதிக்கு ஹீரோவாக ஒரு அடையாளத்தை கொடுத்தது மட்டுமல்ல… ஹன்சிகாவையும் அந்தக் காலகட்டத்தின் முக்கியமான commercial heroines-ல் ஒருவராக இன்னும் வலுவாக நிலைநிறுத்தியது. அந்தப் படத்திற்காக அவர் SIIMA Best Actress விருதையும் பெற்றார்.

தமிழ் சினிமாவில் இன்னொரு சுவாரஸ்யமான sentiment உண்டு.

ஒரு heroine-ஐ வைத்து படம் ஹிட் ஆனால்,

அடுத்த படத்திலும் “அவங்க ராசி”ன்னு சொல்லி அதே heroine-ஐ தொடர்வது.

அந்த sentiment-க்கு ஒரு அழகான example-ஆ உதயநிதி–ஹன்சிகா கூட்டணியை சொல்லலாம்.

Oru Kal Oru Kannadiக்குப் பிறகு, இருவரும் மீண்டும் Manithan படத்தில் இணைந்தார்கள். அந்தப் படத்தில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்தையும் original Hindi version-ஐ விட விரிவுபடுத்தியதாக இயக்குநர் Ahmed கூறியிருந்தார்.

அதுதான் சினிமா…

சில நேரங்களில் ஒரு நடிகையின் நடிப்பு மட்டும் நினைவில் நிற்காது.

அவள் வந்த காலம்,

அவள் நடித்த பாடல்கள்,

அவள் தோன்றிய அந்த cute expressions,

அவள் நடித்த படங்களோடு சேர்ந்த நம்முடைய நினைவுகள்…

இவை எல்லாமே சேர்ந்து ஒரு heroine-ஐ “நம்ம heroine” ஆக்கிவிடும்.

ஹன்சிகாவும் அப்படித்தான்.

ஒரு கல் ஒரு கண்ணாடி,

தீயா வேலை செய்யணும் குமாரு,

சிங்கம் 2,

அரண்மனை…

Commercial cinema-வின் ஒரு முக்கியமான காலகட்டத்தில் தொடர்ந்து ரசிகர்களை சந்தித்த முகம்.

இன்று காலம் மாறிவிட்டது.

Heroine-களின் image மாறிவிட்டது.

Cinema-வின் கதைக்களமும் மாறிவிட்டது.

ஆனால்…

“அந்த காலத்து ஹன்சிகா”

என்று சொன்னவுடன் ஒரு தலைமுறைக்கு

ஒரு சின்ன சிரிப்பும்,

ஒரு cute face-மும்,

ஒரு cinema nostalgia-வும்

கண்டிப்பாக நினைவுக்கு வரும். ❤️

அதுதான் ஒரு நடிகை ரசிகர்களின் நினைவில் வென்றிருக்கிறாள் என்பதற்கான அடையாளம்.

Happy

Birthday, Hansika Motwani! 🎂❤️

தமிழ் சினிமாவின் அந்த அழகான

Chubby Charm-க்கு… ✨

By

ராஜா. க 

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

காலத்தை முந்தி வாழ்ந்த கலைஞர் – ஜே. பி. சந்திரபாபு

 தமிழ் சினிமா வரலாற்றில் சில கலைஞர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தை விட பல ஆண்டுகள் முன்னோக்கி சிந்தித்தவர்கள். அப்படிப்பட்ட அரிய கலைஞர்களில் மிக முக்கியமானவர் ஜே. பி. சந்திரபாபு.

அவரைப் பற்றி பேசும்போது "நகைச்சுவை நடிகர்" என்ற ஒரு வார்த்தையில் அடக்கிவிட முடியாது. அவர் ஒரு நடிகர், பாடகர், நடனக் கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல திறமைகளை ஒரே நேரத்தில் கொண்டிருந்த அபூர்வ கலைஞர்.

ஆரம்ப வாழ்க்கை

ஜோசப் பணிமயதாஸ் சந்திரபாபு ரோட்ரிக்ஸ் (J. P. Chandrababu Rodriguez) என்ற முழுப் பெயர் கொண்ட அவர், 1927 ஆகஸ்ட் 5 அன்று பிறந்தார். அவருடைய குடும்ப வேர்கள் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையவை என்பதால், தூத்துக்குடி மக்களுக்கும் அவர் ஒரு பெருமைக்குரிய கலைஞர்.

சிறுவயதிலேயே இசை, நடிப்பு மற்றும் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீது ஈர்ப்பு கொண்டிருந்தார். பின்னர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கினார்.

தமிழ் சினிமாவின் வித்தியாசமான கலைஞர்

1950 மற்றும் 1960-களில் சந்திரபாபு தோன்றிய விதமே புதுமையாக இருந்தது.

அவருடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு, நகைச்சுவை நேர்த்தி, மேற்கத்திய நடன அசைவுகள், ஆங்கிலம் கலந்து பேசும் பாணி – இவை அனைத்தும் அந்தக் கால தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தன.

இன்று "ஸ்டைல்" என்று நாம் சொல்லும் பல அம்சங்களை, பல தசாப்தங்களுக்கு முன்பே அவர் தனது நடிப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

நடிகர் மட்டுமல்ல... பாடகரும்!

சந்திரபாபுவின் குரல் தனித்துவமானது. அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.

பாடலை வெறும் பாடாமல், நடித்து பாடும் திறமை அவரிடம் இருந்தது. அதனால் அவருடைய பாடல்களில் ஒரு தனி உயிரோட்டம் இருக்கும்.

சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆரும் நடித்த காலத்தில் தனக்கென இடம்

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர். போன்ற ஜாம்பவான்கள் உச்சத்தில் இருந்த காலத்திலும், சந்திரபாபு தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அவர் நடித்த கதாபாத்திரங்கள் வெறும் நகைச்சுவைக்காக மட்டும் அல்ல; பல கதாபாத்திரங்களில் உணர்ச்சியையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.

பலருக்குத் தெரியாத உண்மை

சந்திரபாபு ஒரு நடிகராக மட்டுமே இருக்க விரும்பவில்லை.

திரைப்படத் தயாரிப்பிலும், இயக்கத்திலும் ஆர்வம் காட்டினார். ஆனால் அந்த முயற்சிகள் அவருக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தின.

கலை மீது இருந்த காதல், வாழ்க்கையில் பல சோதனைகளையும் அவருக்குக் கொண்டு வந்தது.

ஒரு சோகமான முடிவு

அசாதாரண திறமை கொண்ட கலைஞராக இருந்தாலும், வாழ்க்கையின் இறுதிக்காலம் அவருக்கு எளிதாக அமையவில்லை.

பொருளாதார சிக்கல்கள், வாய்ப்புகள் குறைதல் மற்றும் தனிப்பட்ட ஏமாற்றங்கள் அவரை மிகவும் பாதித்தன.

1974 மார்ச் 8 அன்று அவர் மறைந்தார்.

ஆனால் அவரது கலை மட்டும் இன்னும் உயிருடன் வாழ்கிறது.

ஏன் சந்திரபாபுவை நினைவில் வைத்திருக்க வேண்டும்?

ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக மட்டுமல்ல...

தனித்துவமான நடிகர்

சிறந்த பாடகர்

மேற்கத்திய நடனத்தை தமிழ் சினிமாவில் பிரபலப்படுத்திய முன்னோடிகளில் ஒருவர்

வித்தியாசமான உடல் மொழியை அறிமுகப்படுத்திய கலைஞர்

பல திறமைகளை ஒரே மனிதனில் கொண்ட அபூர்வ ஆளுமை

இன்று "Multi-talented Artist" என்று நாம் பாராட்டும் பல அம்சங்களை, பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கலை வாழ்க்கையில் நிரூபித்தவர் ஜே. பி. சந்திரபாபு.

நிறைவாக...

சில கலைஞர்கள் வெற்றி பெற்றதால் வரலாற்றில் இடம்பிடிக்கிறார்கள்.

சிலர் தோல்விகளைச் சந்தித்தாலும், அவர்களின் திறமை காலத்தை வென்று நிற்கிறது.

ஜே. பி. சந்திரபாபு அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்த மகத்தான கலைஞர்.

அவரது பிறந்தநாளில், தமிழ் சினிமாவின் இந்த மறக்க முடியாத பல்துறை கலைஞருக்கு நமது மரியாதையை செலுத்துவோம்.

"கலைஞர்கள் மறைவதில்லை... அவர்கள் உருவாக்கிய கலை மூலமாக தலைமுறைகளைத் தாண்டி வாழ்கிறார்கள்." ❤️

சனி, 25 ஜூலை, 2026

சேனல் மாற்ற மனசே வராத ஒரு பாடல் – ஆளுங்குயில் கூவும் ரயில்"

 சில பாடல்கள் டிவியில் ஓடும்போது, ரிமோட் கையில் இருந்தாலும் சேனல் மாற்ற மனசே வராது.

பார்த்திபன் கனவு படத்தில் வரும் "ஆளுங்குயில் கூவும் ரயில்" அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்று.

இந்தப் பாடலைப் பார்க்கும் போதெல்லாம், வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வரும் "சிப்பி இருக்குது முத்து இருக்குது" பாடலின் feel எனக்கு ஞாபகத்திற்கு வரும். அந்தப் பாடலில் ஹீரோ கமல் பேசிக்கொண்டே பாடுவார். இந்தப் பாடலில் ஹீரோயின் பாடிக்கொண்டிருக்க, ஹீரோ சில வார்த்தைகள் மட்டும் சொல்ல... அதற்கு பதிலாக கவிதை போல பாடல் வரிகள் வருவது இந்தப் பாடலின் தனி அழகு.

எனக்கு மிகவும் பிடித்த சில வரிகள்...

திருக்குறள்...

"இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,

இருவரும் இது போல இருந்தால் சுகம்..."

இந்த வரிகள் வரும் போது, ஸ்ரீகாந்த் மெதுவாக ஸ்நேகாவிற்கு அருகில் வந்து அமரும் அந்தச் சிறிய தருணம்... பெரிய காதல் வசனங்களை விட அந்த ஒரு movement-தான் மனதில் நிற்கிறது.

"கண்ணாடி..."

"இதில் என்னைப் பார்க்கிறேன்... அது உன்னைக் காட்டுதே!"

எவ்வளவு எளிமையான வரிகள்... ஆனால் காதலை அழகாகச் சொல்லிவிடுகின்றன.

"மீசை..."

"இது எனக்கு மட்டும் சொந்தமாகும்... கூந்தல் குழந்தைதான்."

இப்படி சாதாரண வார்த்தைகளையே கவிதையாக்கி இருப்பது இந்தப் பாடலின் மிகப்பெரிய பலம்.

இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகுதான், கர்நாடக இசையின் காபி ராகத்தை அடிப்படையாக வைத்து இசையமைப்பாளர் வித்யாசாகர் இவ்வளவு அழகாக compose செய்திருக்கிறார் என்று அறிந்தேன். அதிலும், இறுதியில் "என்ன தவம் செய்தனாய் யசோதா" என்ற கர்நாடக இசைத் தொடுதலோடு பாடலை முடிப்பது... ஒவ்வொரு முறையும் கேட்கும்போது ஒரு தனி ஆனந்தத்தை தருகிறது.

90s kids-களின் favourite ஜோடிகளில் ஒன்றான ஸ்நேகா மற்றும் ஸ்ரீகாந்த், இந்தப் பாடலில் நடித்ததே இல்லை... வாழ்ந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். இருவரின் இயல்பான நடிப்பு, இந்த மெலடிக்கு இன்னும் உயிர் சேர்க்கிறது.

ஒரு பாடல் வெற்றி பெறுவது இசை, வரிகள், பாடகர்கள் மட்டுமல்ல... அதை எப்படி திரையில் கொண்டு வருகிறார்கள் என்பதும் முக்கியம். அந்த வகையில் இயக்குநர் கரு. பழனியப்பன், இந்தப் பாடலை மிகுந்த ரசனையுடன் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

Last but not least...

இந்தப் பாடலுக்கு தனது குரலால் உயிர் கொடுத்தவர் பாடகி ஹரிணி. எனக்கு மிகவும் பிடித்த பாடகிகளில் ஒருவர்.

Gen Z-க்கு சொல்லணும்னா... இன்று உங்களுக்கு favourite-ஆ இருக்கும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரின் அம்மாதான் இந்தப் பாடலைப் பாடிய ஹரிணி.

சில பாடல்கள் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும்...

சில பாடல்கள், "இப்படி ஒரு காதல் நமக்கும் நடந்திருந்தா எவ்வளவு அழகாக இருந்திருக்கும்..." என்று கனவு காண வைக்கும்...

"ஆளுங்குயில் கூவும் ரயில்" எனக்கு அந்த இரண்டு வகையிலும் சேர்ந்த பாடல்.

அடுத்த முறை இந்தப் பாடல் டிவியில் வந்தால்... சேனலை மாற்றாதீங்க.

ஒரு ரசிகன் சொல்றான்...

ஒரு முறை feel பண்ணி பாருங்க.

இவன்,

செவ்வாய், 21 ஜூலை, 2026

கட்டாகுஸ்தி2 - Review 🎬

 #கட்டாகுஸ்தி2 - Review 🎬

இரண்டு வாரங்களாக இந்தப் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். வாய்ப்பு அமையவில்லை. மூன்றாவது வாரத்தில் தான் நேரம் கிடைத்தது. அதுவும் Weekend Housefull! அதுவே இந்தப் படத்தின் வெற்றிக்குச் சான்று.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாக கதை தொடங்குகிறது. ஹீரோ - ஹீரோயின் வாழ்க்கையில் ஒரு பெண் குழந்தை. குழந்தையை வளர்க்கும் House Husband-ஆக ஹீரோவும், Wrestling-ல் தொடர்ந்து சாதிக்கும் ஹீரோயினும். இதைப் பார்த்து கடுப்பாகும் பக்கத்து வீட்டு கணவன்மார்கள், பள்ளி ஆசிரியையாக வரும் மீனு, இடையிடையே சிரிக்க வைக்கும் நகைச்சுவை என முதல் பாதி ரசிக்க வைக்கிறது. ஹீரோ - ஹீரோயின் பிரிவோடு இடைவேளை வருகிறது.

இரண்டாம் பாதியில் கருணாஸ் தனது நகைச்சுவையால் கலகலப்பை கூட்டுகிறார். குழந்தையின் இயல்பான நடிப்பு மனதை கவர்கிறது. ரம்யா கிருஷ்ணனின் கோர்ட் காட்சிகள் கதைக்கு வலு சேர்க்கின்றன. இறுதியில் ஹீரோ - ஹீரோயின் மோதலும், அதற்கான தீர்வும் திருப்திகரமாக அமைந்துள்ளது.

இன்றைய காலத்தில் குழந்தைகள் கட்டாயம் ஏதாவது ஒரு தற்காப்புக் கலையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற இயக்குநரின் சிந்தனைக்கு ஒரு பெரிய சபாஷ்! 👏

இரண்டாம் பாதியில் வரும் அப்பா - மகள் பாடல் மனதை நெகிழ வைக்கிறது.

பெரிய லாஜிக் எதையும் தேடாமல், குடும்பத்தோடு அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு படம். தியேட்டரில் பார்த்ததில் முழு திருப்தி.

– ராஜா க.

சனி, 11 ஜூலை, 2026

சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...

 சில இடங்கள் நம்மை மறப்பதில்லை...

கன்னியாகுமாரி எனக்குக் கற்றுக் கொடுத்த வாழ்க்கைப் பாடங்கள்.

சில இடங்கள் சிலருக்குப் பிடிக்கும்.

சில இடங்களுக்கு சிலரைப் பிடித்துவிடும்.

நான் இரண்டாவது வகை.

திருச்செந்தூரில் பிறந்து அங்கே வளர்ந்த எனக்கு, இந்தியாவின் தென் கோடி எல்லையான கன்னியாகுமாரி ஒரு சுற்றுலாத் தலம் மட்டும் அல்ல. அது என் வாழ்க்கையின் பல பருவங்களை அமைதியாகச் சேமித்து வைத்திருக்கும் ஒரு நினைவுக் களஞ்சியம்.

சிறு வயது முதலே எங்கு சுற்றுலா என்றாலும், பள்ளி சுற்றுலாவாக இருந்தாலும், குடும்பச் சுற்றுலாவாக இருந்தாலும், இறுதியில் வந்து சேரும் இடம் கன்னியாகுமாரிதான்.

சிலருக்குச் சில்லென்ற மலைகள் பிடிக்கும்.

எனக்கோ வெயில் பிடிக்கும்.

வெயிலோடு விளையாடி, வெயிலோடு வளர்ந்தவன் நான். அதனாலோ என்னவோ, கடலின் உப்புக் காற்றும், சூரியனின் வெப்பமும் எனக்கு எப்போதும் நெருக்கமானவை.

"இமயம் முதல் குமரி வரை" என்று புத்தகங்களில் படித்திருக்கிறோம்.

ஆனால், அந்த "குமரி" என் வாழ்க்கையில் ஒரு பாடப்புத்தக வரியாக இல்லாமல், நினைவுகளால் நிரம்பிய இடமாக மாறிவிட்டது.

சிறு வயதில் என் பள்ளி ஆசிரியர் என் கையைப் பிடித்து இந்த மண்ணை எனக்கு அறிமுகப்படுத்தினார்.

வாலிப வயதில் நண்பர்களும் நண்பிகளும் கைகோர்த்து வந்தோம்.

காலம் இன்னும் கொஞ்சம் நகர்ந்தது.

எங்கள் வீட்டின் அடுத்த தலைமுறையின் சிறிய கைகளைப் பிடித்து, "இது தான் கன்னியாகுமாரி..." என்று பெருமையோடு காட்டினேன்.

இந்த முறை மட்டும் அந்தப் பயணம் வேறுபட்டிருந்தது.

என் பெற்றோரின் கைகளைப் பிடித்து அவர்களை அழைத்து வந்தேன்.

விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் படகு ஒவ்வொரு அலையிலும் உயர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது.

அப்பா அருகிலிருந்த கைப்பிடியை இன்னும் கொஞ்சம் இறுக்கமாகப் பிடித்தார்.

அந்த ஒரு நொடியில்...

சிறு வயதில் அவர் என் கையைப் பிடித்து நடத்திய நாட்கள் எல்லாம் கண்முன்னே ஓடின.

அந்த அலைகளை விட என் நினைவுகள்தான் அதிகமாக அசைந்தன.

அன்றுதான் புரிந்தது...

சிறு வயதில் நம்மை யாரோ கைபிடித்து உலகத்தை அறிமுகப்படுத்துவார்கள்.

ஒரு நாள், அதே கைகளை நாம் பிடித்து நடத்த வேண்டிய காலமும் வரும்.

வயோதிகம் எல்லோருக்கும் வரும்.

ஆனால் அது நம் பெற்றோரிடம் வரும்போது மட்டும், அதை ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

அந்த உண்மையை எனக்குக் கற்றுக் கொடுத்த மண் கன்னியாகுமாரி.

அதனால்தான் ஆரம்பத்திலேயே சொன்னேன்...

சில இடங்கள் நமக்குப் பிடிக்கும்.

சில இடங்களுக்கு நம்மைப் பிடித்துவிடும்.

கன்னியாகுமாரி என்னை அப்படித்தான் பிடித்துவிட்டது.

ஒவ்வொரு முறையும் அங்கு செல்லும் போது, கன்னியாகுமாரி பகவதி அம்மன் மீண்டும் அழைத்திருக்கிறார் என்ற உணர்வு வரும்.

காலை சூரியன் கடலில் இருந்து மெதுவாக எழும் காட்சியைப் பார்ப்பது...

அலைகளோடு குழந்தைகளைப் போல விளையாடுவது...

படகில் ஏறி விவேகானந்தர் பாறையை அடைவது...

மூன்று கடல்கள் சங்கமிக்கும் அந்த எல்லையற்ற நீலத்தை அமைதியாக நின்று ரசிப்பது...

தியானம் என்றால் என்னவென்று தெரியாத வயதிலேயே, அமைதிக்கும் ஒரு மொழி இருக்கிறது என்று சொல்லிக் கொடுத்த இடம் அது.

இன்று வானைத் தொடும் திருவள்ளுவர் சிலையும், கண்ணாடிப் பாலமும் அந்த அழகுக்கு மேலும் ஒரு பெருமையைச் சேர்த்திருக்கின்றன.

கன்னியாகுமாரியில் ஒரு பழக்கம் மட்டும் இன்னும் மாறவில்லை.

அங்குள்ள கடைகளில் ஒரு கவ்பாய் தொப்பி வாங்குவது.

பிறகு, மொபைலில் எத்தனை புகைப்படங்கள் எடுத்தாலும், அங்குள்ள புகைப்படக் கலைஞரை அழைத்து குடும்பத்தோடு ஒரு புகைப்படம் எடுப்பது.

ஏனென்றால், அந்த ஒரு புகைப்படத்தில் நம் நினைவுகள் மட்டுமல்ல...

அவருடைய வாழ்வாதாரமும் இருக்கிறது.

இந்த உலகத்தில் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ்கிறோம்.

இந்த முறை எங்கள் குடும்பப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் "சிரிங்க..." என்றார்.

நாங்களும் சிரித்தோம்.

அந்தப் புகைப்படத்தில் சிரித்தது முகங்கள் மட்டும் இல்லை.

பல வருட நினைவுகளும்.

ஒவ்வொரு முறை கன்னியாகுமாரியை விட்டு திரும்பும் போதும், "மீண்டும் வா..." என்று யாரோ மெதுவாக அழைப்பது போல இருக்கும்.

அது கடலா...

காற்றா...

பகவதி அம்மனின் அருளா...

இல்லை என் சிறுவயது நினைவுகளா...

எனக்குத் தெரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் தெரியும்.

சில இடங்கள் நம்மை மறப்பதில்லை.

கன்னியாகுமாரி... என்னை இன்னும் மறக்கவில்லை.

– ராஜா.க ✍🏻✍🏻

திருச்செந்தூரில் பிறந்தவன். நினைவுகளைத் தேடி பயணிப்பவன்.

சனி, 27 ஜூன், 2026

ஹீரோவை அல்ல... திரைக்கதையையே ஹீரோவாக்கிய மனிதர்

என் பார்வையில் 'சின்ன வீடு' மற்றும் K. பாக்யராஜ்

ஒரு படைப்பாளியின் மறைவு என்பது ஒரு மனிதரை இழப்பது மட்டுமல்ல.

ஒரு காலத்தின் கதை சொல்லும் மொழியையே இழப்பது.

அப்படிப்பட்ட ஒரு பெயர் K. பாக்யராஜ்.

அவர் மறைந்த செய்தியை கேட்டவுடன், எனக்கு முதலில் நினைவுக்கு வந்த படம் 'சின்ன வீடு'.

அந்த படம் வெளியானபோது நான் பிறந்திருக்கவில்லை.

90-களின் இறுதியில் தொலைக்காட்சியில்தான் முதன்முதலாக பார்த்தேன்.

உண்மையைச் சொன்னால், பதின்ம வயதில் அந்தப் படத்தின் சில காட்சிகள்தான் முதலில் என்னை ஈர்த்தது. ஆனால் வயதும், வாழ்க்கை அனுபவமும் அதிகரித்த பிறகு அதே படத்தை மீண்டும் பார்த்தபோது புரிந்தது...

நான் ரசித்தது அந்தக் காட்சிகளை அல்ல.

ஒரு திரைக்கதை மேதையின் சிந்தனையை.

'சின்ன வீடு' ஒரு சாதாரண குடும்பக் கதை அல்ல.

வெளிப்புற அழகை மட்டுமே வாழ்க்கையின் அளவுகோலாக நினைக்கும் ஒரு மனிதன், ஒரு பெண்ணின் அன்பு, பொறுப்பு, தியாகம், மன அழகு ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் பயணம்தான் அந்த படம்.

திருமணத்திற்கு முன் அழகான பெண்ணைத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் கதாநாயகன்...

திருமணத்திற்குப் பிறகு மனைவியின் அன்பைப் பார்த்து மெதுவாக மாறுகிறான்.

அந்த மாற்றத்தை ஒரு பெரிய வசனத்தால் சொல்லவில்லை.

சிறிய சிறிய காட்சிகளால் உணர வைத்தார் பாக்யராஜ்.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி ஒன்று.

மதியத்தில் மனைவி சமைத்த குழம்பை இரவிலும் கேட்பார்.

அப்போது அம்மா,

"உனக்கு சூடாகச் சமைத்ததுதானே பிடிக்கும்... அதனால்தான் இரவுக்கு புதிதாக சமைத்தேன்." என்பார்.

அதற்கு அவர்,

"இல்லை... மதியம் அவள் சமைத்தது மிகவும் நன்றாக இருந்தது. இத்தனை வருடமாக இப்படிப்பட்ட சாப்பாடு சாப்பிட்டதே இல்லை." என்பார்.

அந்த ஒரு வசனத்திற்குப் பிறகு பாக்கியலட்சுமியின் கண்களில் தெரியும் கண்ணீர்...

அது வெறும் மகிழ்ச்சி அல்ல.

அங்கீகாரம்.

அந்தக் காட்சியில் அவர் மனைவியின் அழகைப் பாராட்டவில்லை.

அவளுடைய அன்பைப் பாராட்டுகிறார்.

அதுதான் அந்தக் காட்சியின் உண்மையான அழகு.

இன்னொரு சிறிய விஷயம்...

பாக்கியலட்சுமி M.Com படித்திருந்தும், திருமண அழைப்பிதழில் தனது பட்டத்தை சேர்க்க விடமாட்டாள்.

ஏனெனில் கணவர் B.Com மட்டுமே படித்தவர்.

ஒரு வசனம் கூட இல்லாமல், ஒரு பெண்ணின் மனதை ஒரு சிறிய விவரத்தின் மூலம் புரிய வைத்திருப்பார் பாக்யராஜ்.

இதுதான் Character Writing.

படம் முழுவதும் அவர் தனது மனைவியை "பாக்கி" என்றே அழைப்பார்.

ஒரு காட்சியில் இயல்பாக,

"உனக்கு பெரிய மனசு பாக்கி..." என்று சொல்வார்.

முதல் முறை அந்த வசனத்தைக் கேட்டபோது அது ஒரு சாதாரண பாராட்டு என்று தோன்றியது.

இன்று மீண்டும் பார்க்கும்போது புரிகிறது...

அந்த ஒரு வரியிலேயே பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தின் முழு வாழ்க்கையையும் சொல்லிவிடுகிறார்.

அவள் கணவனின் குறைகளைப் பெரிதுபடுத்தவில்லை.

அவரை மாற்ற முயற்சித்தாள்; ஆனால் அவமானப்படுத்தவில்லை.

காதலித்தாள்; ஆனால் தன்னுடைய சுயமரியாதையை இழக்கவில்லை.

மன்னித்தாள்; ஆனால் பலவீனமாக இல்லை.

அதனால்தான் "பெரிய மனசு" என்ற இரண்டு வார்த்தைகள், அந்தக் கதாபாத்திரத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

ஒரு நல்ல கதாபாத்திரத்தை உருவாக்குவது வேறு.

ஒரே ஒரு வசனத்தில் அந்தக் கதாபாத்திரத்தை பார்வையாளர்களின் மனதில் நிலைநிறுத்துவது வேறு.

அதுதான் K. பாக்யராஜ் என்ற எழுத்தாளரின் முத்திரை.

அதேபோல்...

80-களின் தமிழ் சினிமாவில் "அம்மா எப்போதும் சரி" என்ற எழுதப்படாத விதி இருந்தது.

ஆனால் 'சின்ன வீடு'வில், மனைவி சரியான இடத்தில் இருக்கிறார்.

அம்மா தவறான இடத்தில் இருக்கிறார்.

அதை எந்த தயக்கமும் இல்லாமல் திரையில் காட்டினார் பாக்யராஜ்.

அந்த காலத்திற்கு அது மிகப்பெரிய தைரியம்.

அதனால்தான் 'சின்ன வீடு' இன்று வரை பேசப்படுகிறது.

இன்று கூட...

"பாக்கியலட்சுமி" என்ற கதாபாத்திரத்தின் பெயர் எனக்கு நினைவில் இருக்கிறது.

இருபது ஆண்டுகளுக்கு முன் பார்த்த ஒரு படத்தின் கதாபாத்திரம் இன்னும் மனதில் வாழ்ந்தால்...

அது நடிகையின் வெற்றி மட்டுமல்ல.

அதை உருவாக்கிய எழுத்தாளரின் வெற்றி.

'சின்ன வீடு' படத்தைப் பார்த்த பிறகுதான்...

நான் K. பாக்யராஜ் படங்களைத் தேடித் தேடிப் பார்க்க ஆரம்பித்தேன்.

ஒவ்வொரு படமும் எனக்கு ஒரு புதிய திரைக்கதைப் பாடமாக இருந்தது.

'ருத்ரா' படத்தில், கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் கழித்துதான் அந்தக் கதாபாத்திரம் களமிறங்குகிறது. ஆனால் அதன்பிறகு படத்தின் வேகமே மாறிவிடுகிறது. ஒரு கதாபாத்திரத்தின் மூலம் திரைக்கதையின் தாளத்தை எப்படி மாற்றுவது என்பதை அங்கே பார்க்கலாம்.

'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி'...

வெளிப்படையாக அது ஒரு நகைச்சுவைப் படம்.

ஆனால் அதன் பின்னால் இருக்கும் திரைக்கதை அமைப்பு வியக்க வைக்கும் அளவுக்கு இறுக்கமாக இருக்கும்.

'முந்தானை முடிச்சு'...

இன்றும் தொலைக்காட்சியில் அந்தப் படம் ஒளிபரப்பானால், சேனலை மாற்ற மனம் வருவதில்லை.

அதுதான் ஒரு காலத்தை வென்ற கிளாசிக் திரைப்படத்தின் அடையாளம்.

'மௌன கீதங்கள்'...

என்னுடைய மிகவும் பிடித்த பாக்யராஜ் படங்களில் ஒன்று.

காதல், குடும்பம், உறவுகள், மனித உணர்வுகள்...

எதையும் மிகைப்படுத்தாமல், வாழ்க்கையைப் போலவே திரையில் வாழ வைத்த படம்.

இந்த எல்லாப் படங்களையும் ஒன்றாக இணைக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது.

அந்தப் படங்களில் ஹீரோ பாக்யராஜ் அல்ல.

திரைக்கதைதான் ஹீரோ.

ஒரு நடிகரை நாம் நினைவில் வைத்திருப்பது அவரது முகத்திற்காக.

ஒரு எழுத்தாளரை நாம் நினைவில் வைத்திருப்பது அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களுக்காக.

அவர் நடித்த கதாபாத்திரங்கள் நம்மைச் சிரிக்க வைத்தன.

அவர் எழுதிய கதாபாத்திரங்கள் நம்மை யோசிக்க வைத்தன.

அவர் இயக்கிய காட்சிகள் இன்றும் நம் நினைவில் வாழ்கின்றன.

அதனால்தான் K. பாக்யராஜ் ஒரு வெற்றிகரமான நடிகர் மட்டுமல்ல...

தமிழ் சினிமா கண்ட மிகச் சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவரும், மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் ஆவார்.

இன்று அவர் நம்முடன் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் "பாக்கியலட்சுமி" இன்னும் நம்முடன் வாழ்கிறாள்.

'முந்தானை முடிச்சு' இன்னும் நம்மைச் சிரிக்க வைக்கிறது.

'மௌன கீதங்கள்' இன்னும் மனதை நெகிழ வைக்கிறது.

'ஓர் ஊரில் ஒரு ராஜகுமாரி' இன்னும் திரைக்கதை எப்படி எழுத வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது.

ஒரு படைப்பாளி மறையலாம்.

ஆனால் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களும்...

அவர் எழுதிய திரைக்கதைகளும்...

காலத்தால் ஒருபோதும் அழியாது.

அவை ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறந்து, புதிய ரசிகர்களைக் கண்டடையும்.

அதுவே K. பாக்யராஜ் என்ற படைப்பாளியின் உண்மையான வெற்றி.

நன்றி, திரைக்கதை ஜாம்பவான். 🙏🎬

இவன் 

ராஜா க 

வெள்ளி, 26 ஜூன், 2026

ஒரு காலத்தையே உருவாக்கிய மும்மூர்த்திகள்

 ஒரு காலத்தை உருவாக்கிய மும்மூர்த்திகள் – தமிழ் சினிமாவின் மறக்க முடியாத கூட்டணிகள்

நம் பாரம்பரியத்தில் "மும்மூர்த்திகள்" என்ற உவமைக்கு ஒரு தனி இடம் உண்டு. அது மூன்று தெய்வங்களைப் பற்றியது மட்டுமல்ல; ஒரு முழுமையான படைப்பின் மூன்று பரிமாணங்களை நினைவூட்டும் ஒரு சிந்தனையும் கூட.

அதேபோல, தமிழ் சினிமாவிலும் சில காலங்களை மூன்று படைப்பாளிகள் சேர்ந்து வடிவமைத்திருக்கிறார்கள்.

ஒருவர் கதைகளுக்கு உயிர் கொடுத்தார்.

ஒருவர் அந்த உணர்வுகளுக்கு வார்த்தைகள் கொடுத்தார்.

மற்றொருவர் அந்த வார்த்தைகளுக்கு உயிர் தந்த இசையை வழங்கினார்.

ஒரு சிறந்த திரைப்படம் உருவாக பல நூறு பேரின் உழைப்பு தேவை. ஆனால், ஒரு தலைமுறையின் மனதில் நிலைத்து நிற்கும் திரைப்படங்களை உருவாக்கியதில் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் ஆகிய மூவரின் பங்களிப்பு அளவிட முடியாதது.

ஒரு காலத்தின் அடையாளங்கள்

MSV • கண்ணதாசன் • K. பாலச்சந்தர்

இசை, இலக்கியம், மனித உறவுகள்—இந்த மூன்றையும் ஒன்றாக இணைத்து தமிழ் சினிமாவிற்கு புதிய உயரத்தை அளித்த காலம்.

இளையராஜா • வைரமுத்து • பாரதிராஜா

கிராமத்தின் மண்வாசனையை இசையிலும், கவிதையிலும், காட்சிகளிலும் உணர வைத்த தலைமுறை.

ஷங்கர் • A.R. ரஹ்மான் • வைரமுத்து

பிரம்மாண்டம், தொழில்நுட்பம், உலகத் தர இசை, கவித்துவமான வரிகள்—தமிழ் சினிமாவை உலக அரங்கில் பேச வைத்த கூட்டணி.

செல்வராகவன் • யுவன் ஷங்கர் ராஜா • நா. முத்துக்குமார்

இளைஞர்களின் மனக்குழப்பம், காதல், தனிமை, வாழ்க்கையின் சொல்லப்படாத உணர்வுகளை இசையாலும், வரிகளாலும், காட்சிகளாலும் மனதில் பதித்த தலைமுறை.

இவர்கள் வெறும் வெற்றிக் கூட்டணிகள் அல்ல.

ஒரு தலைமுறையின் காதல் மொழியை உருவாக்கியவர்கள்.

ஒரு தலைமுறையின் இசை ரசனையை மாற்றியவர்கள்.

ஒரு தலைமுறையின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்தவர்கள்.

அதனால்தான், சில கூட்டணிகள் வெற்றிப் படங்களை மட்டும் உருவாக்குவதில்லை.

அவர்கள் ஒரு காலத்தையே உருவாக்குகிறார்கள்.

இன்று அந்தப் படங்களை மீண்டும் பார்க்கும்போது, நாம் கதையை மட்டும் நினைவுகூர்வதில்லை.

அந்த காலத்தையும், அந்த இசையையும், அந்த உணர்வுகளையும், நம் வாழ்க்கையின் ஒரு பகுதியையும் மீண்டும் வாழ்கிறோம்.

அதுவே காலத்தை வென்ற படைப்பாளிகளின் உண்மையான வெற்றி.

திங்கள், 22 ஜூன், 2026

அந்த கவிதையின் முகவரி

சிலர் சிரிப்பால் நினைவில் நிற்பார்கள்.

சிலர் பேச்சால் மனதில் நிற்பார்கள்.

ஆனால் சிலர்...

அவர்களின் கண்களால் மட்டும்

நம்முள் ஒரு இடத்தை உருவாக்கி விடுவார்கள்.

நீ எத்தனை முறை

உன் கண்களின் புகைப்படத்தைப் பகிர்ந்தாலும்,

அதை நான் வெறும் புகைப்படமாகப் பார்ப்பதில்லை.

ஒவ்வொரு முறையும்

புதிதாக திறக்கும்

ஒரு கவிதையின் கதவாகத்தான் பார்க்கிறேன்.

உன்னை முதல் முறையாகப் பார்க்கவில்லை.

ஆனால்,

ஒவ்வொரு முறையும்

உன் கண்கள் என் கண்களைத் தொடும்போது,

வார்த்தைகள் வருவதில்லை.

வியப்புதான் வருகிறது.

கவிதை எழுத நினைக்கிறேன்.

ஆனால்,

என்னை அறியாமலே

கவிதையாக மாறி நிற்கிறேன்.

"என் கண்களில் அப்படி என்னதான் இருக்கிறது?"

என்று

குறும்பாய் கேட்கும் உன் கண்களுக்கு,

எப்படி சொல்வது?

இந்த மண்ணில் பிறந்த

ஒரு புதுக் குழந்தை,

முதல் முறையாக

வானத்தையும்,

வண்ணங்களையும்,

வாழ்க்கையையும்

விரிந்த விழிகளால்

வியந்து பார்ப்பதைப் போல,

உன் கண்களை

ஒவ்வொரு முறையும்

புதிதாகப் பார்க்கிறேன்.

நேற்று பார்த்த கண்கள்தான்.

ஆனால் இன்று,

அதில் ஒரு புதிய நிலவு உதிக்கிறது.

இன்று பார்த்த கண்கள்தான்.

ஆனால் நாளை,

அதில் ஒரு புதிய உலகம் பிறக்கிறது.

அதனால்தான்,

உன் கண்களைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும்,

நான் காதலனாக இருப்பதில்லை.

இந்த உலகத்தை

முதல் முறையாகக் காணும்

ஒரு குழந்தையாகி விடுகிறேன்.

அந்த வியப்பின் பெயர்தான்

என் கவிதை.

அந்த கவிதையின் முகவரிதான்

உன் கண்கள்.

இவன் 

ராஜா க ✍🏻

செவ்வாய், 9 ஜூன், 2026

29 — காஃபியின் சுவையும், தமிழ் சினிமாவின் காதலும்!

 ​🎬 29 — சினிமா விமர்சனம் ☕🌾

​காஃபியோட ருசி அதை நாம குடிக்கிற இடத்தை பொறுத்து மாறலாம், ஆனா காஃபி ஒண்ணுதான். காதலும் அப்படித்தான். அது எல்லாத்துக்கும் பொதுவானதுதான். ஆனா, அதை தமிழ் சினிமாவுல எந்தக் களத்துல வச்சு, எவ்வளவு எதார்த்தமா சொல்றாங்கன்றதுல தான் ரசிகனோட மனசுக்குள்ள அந்தப் படம் போய்ப் உட்காருது. ✨

​🧑‍🤝‍🧑 கதை சுருக்கம்:

​29 வயசுல ஒரு பையன், 21 வயசுல ஒரு பொண்ணு. ரெண்டு பேருக்கும் இடையில வர்ற காதல், அப்புறம் எதிர்பாராம நடக்குற பிரிவு. அந்தப் பிரிவுக்கு அப்புறமா அவங்க வாழ்க்கையை எப்படி எதிர்கொள்றாங்க, எப்படித் தேத்திக்கிறாங்கங்கிறதுதான் இந்த '29' படத்தோட கதை.

​📊 SPEEDOMETER RATINGS & EMOTION METERS

​(கீழே உள்ள மீட்டர்கள் படத்தின் தன்மையை துல்லியமாக காட்டும்)

​1. காதல் & எமோஷன் (Romance & Emotions Meter)

🟢🟢🟢🟢🟡 | 90% - டாப் நாட்ச்!

​விளக்கம்: காதலைச் சொன்னதும் சரி, பிரிவைச் சொன்னதும் சரி... நெஞ்சைத் தொடுது.

​2. வசனங்கள் (Dialogues Meter)

🟢🟢🟢🟢🟢 | 96% - பக்கா ரியலிஸ்டிக்!

​விளக்கம்: பாஸ்கர் சக்தி பாணியில் சாமான்யனின் எதார்த்தக் கவிதை. வசனங்கள் தான் படத்தின் முதுகெலும்பு.

​3. காமெடி (Comedy Meter)

🟢🟢🟡⚪⚪ | 50% - ஆங்காங்கே ரசிக்க வைக்கும்!

​விளக்கம்: கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை.

​4. ஆக்ஷன் & புரட்சி (Action & Drama Meter)

🟢🟡⚪⚪⚪ | 30% - ஓட்டவில்லை!

​விளக்கம்: செகண்ட் ஹாஃபில் வரும் அந்த 'புரட்சி மோடு' படத்திற்கு செட் ஆகவில்லை.

​⏱️ SCREENPLAY DASHBOARD (திரைக்கதை வேகம்)

​முதல் பாதி (First Half): [🔴]—[🟠]—[🟡]—[🟢]—[👉90%] 🚀 செம்ம ஸ்பீடு, எமோஷனல் கனெக்ட் சூப்பர்!

​இரண்டாம் பாதி (Second Half): [🔴]—[🟠]—[👉50%]—[🟢]—[⚪] 📉 வண்டி தடம் மாறி லூப் லைனில் சிக்கிக்கொள்கிறது.

​வில்லன் வெயிட்டேஜ் (Villain Weightage): [🔴]—[👉20%]—[🟡]—[🟢]—[⚪] 🤖 VIP படத்து 'டம்மி' வில்லன் மாடல்.

​🌾 படத்தின் பலங்கள் (The Positives):

​வசனங்கள்: பாசாங்கு இல்லாத எதார்த்தமான வரிகள். காதலைச் சொன்ன விதம் ரொம்பப் புதுசு. மனசுல நச்சுனு தைக்கிற சில டயலாக்ஸ்:

​"அவ பேரை முதன்முதலா எழுதும்போது எனக்குத் தெரியாதுப்பா... என் ஆயுசு முடியுற வரைக்கும் அந்தப் பேரைத்தான் நான் உச்சரிக்கப் போறேன்னு!" 🥺🎯

"என்னைத் தொட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா? இல்லை என்னை தொட்டுட்டு கல்யாணம் பண்ணிக்கப் போறியா?" (நெருக்கமான கேள்வி!)

"திருப்பிப் போட்ட திருக்குறள் மாதிரி உன் உதடு..." 💋 (அழகான உவமை).

​இயல்பான காதல்: முதல் பாதியில வர்ற காதலும் சரி, அவங்க பிரியுற இடமும் சரி... எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம அவ்வளவு அழகா இருக்கு.

​நடிப்புத்திறன்: விஜி தலையைத் தொட்டு "நாம பிரிஞ்சிடலாம்"னு சொல்ற அந்த ஒரு இடத்துல சத்யாவோட நடிப்பு இருக்கே... அப்படியே கண்ணுல தண்ணி வரவச்சிருது. 🥹❤️👌🏼 ரெண்டு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. ப்ரீத்தி கொள்ளை அழகு, மனசைக் கொள்ளையடிச்சிடுறாங்க. ❤️🫠

​இசை: "சிலே சிலே" பாட்டு மனசுக்குள்ளேயே ஒரு மெல்லிய ராகமா ஓடிக்கிட்டே இருக்கு. பிஜிஎம் படத்தோட எமோஷனை நல்லா தாங்கிப் பிடிக்குது. 🎵

​⚠️ படத்தின் பலவீனங்கள் (The Negatives):

​தடம் மாறிய செகண்ட் ஹாஃப்: முதல் பாதியில இருந்த அந்த யதார்த்தம், இரண்டாம் பாதியில அப்படியே தலைகீழா மாறிடுது. திடீர்னு ஒரு 'புரட்சி mோடுக்கு' மாறுறதால, நம்மால கதையோடு முழுசா ஒட்ட முடியாம ஒரு அந்நியத்தன்மை வந்துடுது.

​வில்லன் கேரக்டர்: 'VIP' படத்துல வர்ற மாதிரி ரொம்ப வீக்கான வில்லன். அவரோடப் பகுதிகள் கதையோடு ஒட்டவே இல்லை, சுணக்கம் தருது.

​📋 பாட்டம் லைன் (Final Verdict):

​First Half: 💪🏻💪🏻💪🏻💪🏻 (மனசைத் தொட்டது)

​Second Half: 💪🏻💪🏻 (கொஞ்சம் சுமார்தான்)

​இவன்,

✍️ ராஜா. க

ஞாயிறு, 7 ஜூன், 2026

நண்பர்களும் புரிதலும்

 நண்பர்களும் புரிதலும்

இன்று நண்பர்களுக்கிடையே ஏற்படும் பல குழப்பங்களுக்கும், மனக்கசப்புகளுக்கும் முக்கிய காரணம் என்ன என்று யோசித்தால், என் மனதில் முதலில் தோன்றும் வார்த்தை — "புரிதல்".

நண்பர்களுக்குள் அந்த புரிதல் இருந்துவிட்டால், பல பிரச்சினைகள் உருவாகவே உருவாகாது. சாதாரணமாக நடந்த சம்பவங்கள் கூட, வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அழகான நினைவுகளாக மனதில் பதிந்துவிடும்.

அப்படி என் கல்லூரி வாழ்க்கையில் நடந்த இரண்டு சம்பவங்கள், நட்புக்கும் புரிதலுக்கும் சிறிய சான்றுகள்.

செல்வராஜ், டேவிட் — கல்லூரி காலம் முதல் இன்று வரை என் நெருங்கிய நண்பர்கள்.

கல்லூரி இறுதியாண்டில், யார் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல், விடுதியை விட்டு வெளியே தங்கி படிக்க முடிவு செய்தோம்.

சிவகாசியின் சசி நகரில் ஒரு பெரிய வீடு. ECE மற்றும் CSE நண்பர்கள் சேர்ந்து மொத்தம் பத்து பேருக்கும் மேல் தங்கியிருந்தோம்.

விடுதியின் கட்டுப்பாடுகளுக்குள் இருந்த எங்களுக்கு, அந்த வாழ்க்கை புதிதாக இறக்கை முளைத்த பறவைகளின் சுதந்திரத்தைப் போல இருந்தது.

எங்கள் வீட்டைச் சுற்றி compound சுவர் இருந்தது. மாலை நேரங்களில் அந்த குட்டிச் சுவரில் அமர்ந்து அரட்டை அடிப்பது எங்களின் வழக்கம்.

ஒரு நாள் அப்படி அமர்ந்திருந்தபோது, ECE நண்பர்கள் சிலர் மிகவும் serious-ஆக ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் வழக்கம்போல ஒரு நகைச்சுவை சொல்ல, செல்வாவும் டேவிட்டும் சிரித்தார்கள்.

அதில் எரிச்சலடைந்த ஒரு நண்பன்,

"நாங்க இங்க serious-ஆ பேசுறோம்... உங்களுக்கு புரியாது..."

என்று முகத்தைச் சுளித்தான்.

அடுத்த நொடி, நான் சுவரிலிருந்து கீழே குதித்தேன்.

அதே தருணத்தில்...

மேலும் நான்கு கால்கள் தரையில் பதிந்த சத்தம் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

செல்வாவும், டேவிட்டும் என்னுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

யாரும் யாரையும் அழைக்கவில்லை.

எதுவும் பேசவில்லை.

ஆனால் நாங்கள் மூவரும் ஒன்றாக அந்த இடத்தை விட்டு நடந்தோம்.

அது நட்பு.

அதை விட முக்கியமாக...

அது புரிதல்.

---

இரண்டாவது சம்பவம்.

எட்டாவது செமஸ்டர்.

பெரும்பாலும் வகுப்புகள் இருக்காது. இருந்தாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருந்ததால் A மற்றும் B பிரிவு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்திருந்தோம்.

A பிரிவு பேராசிரியர் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.

எங்களைப் பார்த்தவுடன்,

"இது A Section class. மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இருக்கலாம்..."

என்று கூறினார்.

நாங்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அதையே கூறினார்.

அப்போதும் அமைதியாக இருந்தோம்.

மூன்றாவது முறையாகவும் அதே வார்த்தைகள் வந்தவுடன், செல்வா எந்த தயக்கமும் இல்லாமல் எழுந்தான்.

அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் நானும், டேவிட்டும் எழுந்துவிட்டோம்.

மூவரும் ஒன்றாக வெளியே நடந்தோம்.

எங்களைப் பார்த்து எங்கள் B Section நண்பர்களும் வெளியே வந்தார்கள்.

அந்த தருணம் இன்று நினைத்தாலும் புன்னகையை வரவழைக்கிறது.

---

நட்பு என்பது எப்போதும் ஒன்றாக இருப்பது அல்ல.

சில நேரங்களில் வார்த்தைகள் இல்லாமலேயே புரிந்து கொள்வது.

அழைக்காமலேயே கூடவே நடப்பது.

விளக்கம் கேட்காமலேயே மனதை புரிந்து கொள்வது.

அதுதான் உண்மையான நட்பு.

இன்று செல்வா எங்களுடன் இல்லை.

ஆனால் அவன் விட்டுச் சென்ற நினைவுகளும்...

எங்களுக்குள் இருந்த அந்த புரிதலும்...

இன்றும் எங்களுடன் இருக்கின்றன.

Miss You, Selva.

புரிதலுடன்,

Parimala & Co Movie Review:

Parimala & Co Review – குடும்பத்தோடு சிரித்து ரசிக்கக்கூடிய பாண்டிராஜ் படம்!

இயக்கம்: Pandiraj

நடிப்பு: Jayaram, Urvashi, Mysskin, Sandy Master, சஞ்சனா, அனந்திகா

ஒளிப்பதிவு: George C. Williams

இசை: பாக்ஸன்

தமிழ் சினிமாவில் குடும்பப் பாங்கான கதைகளை எளிமையாகவும், ரசிக்கும்படியும் சொல்லும் இயக்குநர்களில் முக்கியமானவர் பாண்டிராஜ். அந்த வரிசையில் அவரது புதிய படமான Parimala & Co-வும் குடும்ப உறவுகள், நகைச்சுவை, சிறிய அளவிலான திரில்லர் ஆகியவற்றை கலந்து சொல்ல முயற்சிக்கிறது.

கதை

ஒரு ரவுடி, ஒரு பெண்ணை காதல் என்ற பெயரில் தொடர்ந்து தொந்தரவு செய்கிறான். அவனது நடவடிக்கைகளால் வெறுப்படைந்த அந்த பெண்ணும், அவளது குடும்பத்தினரும் அவனை கொல்ல நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் முடிவெடுக்கும் நேரத்திற்குள், அந்த ரவுடி கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறான்.

இந்த கொலையை யார் செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? அந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் உண்மையை கண்டுபிடித்தாரா? என்பதையே படம் சுவாரஸ்யமாக சொல்ல முயற்சிக்கிறது.

நடிப்பு

படத்தின் மிகப்பெரிய பலம் ஜெயராம் மற்றும் ஊர்வசி கூட்டணி. இருவரும் திரையில் தோன்றும் காட்சிகள் பல இடங்களில் இயல்பாக சிரிக்க வைக்கின்றன. குடும்பத்தலைவராக ஜெயராமும், அவரது மனைவியாக ஊர்வசியும் தங்கள் அனுபவமான நடிப்பால் கதையை சுமந்து செல்கிறார்கள்.

அவர்களின் மகள்களாக நடித்துள்ள சஞ்சனா மற்றும் அனந்திகா இருவரும் மிகவும் இயல்பாக நடித்துள்ளனர். பக்கத்து வீட்டு அல்லது நம் வீட்டுப் பெண் குழந்தைகளைப் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்குகிறார்கள்.

இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் மிஷ்கின் தனது தனித்துவமான பாணியில் ரசிகர்களை கவர்கிறார். அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு மற்றும் காமெடி கலந்த அணுகுமுறை பல காட்சிகளில் ரசிக்க வைக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்கள்

ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் படத்திற்கு தேவையான வண்ணமயமான தோற்றத்தை கொடுத்திருக்கிறார். இசையும் கதையின் ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

என்ன வேலை செய்தது?

ஜெயராம் – ஊர்வசி கூட்டணி

குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட திரைக்கதை

இயல்பான நகைச்சுவை

சஞ்சனா, அனந்திகாவின் நடிப்பு

மிஷ்கினின் வித்தியாசமான போலீஸ் கதாபாத்திரம்

என்ன குறை?

படத்தின் மையக்கருவான "கொலை செய்தது யார்?" என்ற மர்மம் எதிர்பார்த்த அளவுக்கு பரபரப்பை உருவாக்கவில்லை. சஸ்பென்ஸ் பகுதிகளில் இன்னும் கொஞ்சம் இறுக்கமான திரைக்கதை இருந்திருக்கலாம். சில இடங்களில் லாஜிக்கை விட நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இறுதித் தீர்ப்பு

"பாபநாசம் படத்தின் கதையை கொஞ்சம் காமெடியாக சொன்னால் எப்படி இருக்கும்?" என்ற உணர்வை சில இடங்களில் தரும் படம் Parimala & Co.

மிகப்பெரிய திரில்லர் எதிர்பார்த்து செல்லாமல், குடும்பத்தோடு அமர்ந்து சிரித்து ரசிக்க ஒரு பொழுதுபோக்கு படமாக அணுகினால் படம் ஏமாற்றாது. வார இறுதியில் குடும்பத்தோடு பார்க்க ஏற்ற ஒரு லைட் ஹார்ட்டெட் எண்டர்டெய்னர்.

மதிப்பீடு: 3.5 / 5 ⭐

– Raja K.S

Cinema Lover | Blogger | Movie Reviewer 🎬✍️

திங்கள், 1 ஜூன், 2026

தூத்துக்குடி – ஒரு மாவட்டம் அல்ல, ஒரு தனி அடையாளம்!

தமிழ்நாட்டின் தென்முனையில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், வெறும் ஒரு புவியியல் எல்லைக்குள் அடங்கிய மாவட்டம் மட்டுமல்ல. வரலாறு, தொழில், வணிகம், பக்தி, ஊடகம், கலாச்சாரம், இயற்கை வளம் மற்றும் உழைப்பாளி மக்களின் வாழ்க்கை என பல அடையாளங்களை தன்னுள் சுமந்து நிற்கும் ஒரு மண்.

"முத்துநகர்" என்று அழைக்கப்படும் தூத்துக்குடி, பல நூற்றாண்டுகளாக கடல் வணிகத்தின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இன்று தமிழ்நாட்டின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றாக திகழும் இந்த மாவட்டம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் அமைதியாக ஆனால் உறுதியான பங்காற்றி வருகிறது.

வரலாறு பேசும் மண்

தூத்துக்குடி மாவட்டத்தைப் பற்றி பேசும்போது அதன் வரலாற்றைத் தவிர்க்க முடியாது.

ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வீரமுடன் போராடிய வீரபாண்டிய கட்டபொம்மனும், அவரது சகோதரர் ஓமைத்துரையும் இந்த மண்ணின் பெருமைகளில் முக்கியமானவர்கள். சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அழியாத இடம் பிடித்த கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பெயரும் இந்த மண்ணோடு இணைந்திருக்கிறது.

இந்த மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வரலாற்றின் தடங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றன.

தொழிலும் வணிகமும்

தூத்துக்குடி மாவட்டம் பல தொழிலதிபர்களையும் வணிக முன்னோடிகளையும் உருவாக்கிய மண்.

Retail உலகில் தனித்த அடையாளத்தை உருவாக்கிய Saravana Stores மற்றும் Jayachandran Stores போன்ற நிறுவனங்களின் பின்னணியில் இந்த மண்ணின் உழைப்பும் பார்வையும் இருக்கிறது.

உலகம் முழுவதும் தமிழர்களின் அடையாளமாக மாறிய Saravana Bhavan-ன் வேர்களும் தென்பாண்டி மண்ணோடு இணைந்தவை.

தொழில்நுட்ப உலகில் இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான HCL நிறுவனத்தை உருவாக்கிய சிவ் நாடார் போன்ற ஆளுமைகளும் இந்த மாவட்டத்தின் பெருமைகளில் ஒருவர்.

ஊடக உலகிலும் ஒரு தடம்

தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வு, சமூக நிகழ்வுகள் மற்றும் அன்றாட செய்திகளை பல தலைமுறைகளாக மக்களிடம் கொண்டு சேர்த்த முக்கிய நாளிதழ்களில் ஒன்றான தினத்தந்தியின் நிறுவனர் சி.பா. ஆதித்தனார் இந்த மாவட்டத்தின் காயாமொழி மண்ணைச் சேர்ந்தவர்.

தமிழகத்தில் செய்திகளை மக்களின் வாசற்படிக்கே கொண்டு சென்ற ஊடகப் புரட்சியில் அவரது பங்களிப்பு மிகப்பெரியது. ஊடக உலகிலும் தூத்துக்குடி மாவட்டம் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளது.

தொழிற்துறை வளர்ச்சியின் முகவரி

தூத்துக்குடி துறைமுகம், SPIC, மின் உற்பத்தி நிலையங்கள், பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் கனிம வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்துறைகள் ஆகியவை இந்த மாவட்டத்தை தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையங்களில் ஒன்றாக மாற்றியுள்ளன.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் பொருட்கள் சென்றடைய தூத்துக்குடி துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் உப்பில் பெரும் பகுதி தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தே வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பக்தியும் மத நல்லிணக்கமும்

தூத்துக்குடி மாவட்டம் மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பனிமய மாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், குலசேகரப்பட்டினம் தசரா விழா, ஆத்தங்கரை பள்ளிவாசல் போன்ற ஆன்மிகத் தலங்கள் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கின்றன.

திருச்செந்தூர், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கி, உலகம் முழுவதிலிருந்தும் பக்தர்களை வரவேற்கிறது.

குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா, தமிழகத்தின் மிகப்பெரிய மத மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக இன்று வளர்ந்துள்ளது.

சுவையில் தனி முத்திரை

தூத்துக்குடி மாவட்டத்தின் உணவுப் பாரம்பரியமும் தனித்துவமானது.

பொரிச்ச பரோட்டா, தூத்துக்குடி மக்ரூன், கோவில்பட்டி கடலைமிட்டாய் போன்றவை இந்த மண்ணின் சுவையை உலகம் முழுவதும் கொண்டு சென்றுள்ளன.

இவை வெறும் உணவுப் பொருட்கள் அல்ல; தலைமுறைகளாக கடத்தப்பட்ட பாரம்பரியத்தின் அடையாளங்கள்.

இயற்கையின் அருள்

ஒருபுறம் வங்காள விரிகுடாவின் கடற்கரை, மறுபுறம் தாமிரபரணி நதியின் வளம், உப்பு வயல்கள், விவசாய நிலங்கள், வாழை மற்றும் வெற்றிலை சாகுபடிகள் என இயற்கை வளங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட மாவட்டம் தூத்துக்குடி.

கடல், ஆறு, நிலம் – மூன்றின் அருளையும் ஒருசேர பெற்றிருக்கும் அரிய பகுதிகளில் இதுவும் ஒன்று.

சோணை நிலங்கள், மீன்வளம், உப்பளங்கள், விவசாய வளங்கள் என இயற்கை இந்த மண்ணுக்கு தாராளமாக வழங்கியுள்ளது.

தூத்துக்குடியின் உண்மையான பலம்

ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தின் மிகப்பெரிய செல்வம் அதன் மக்கள்.

தமிழ்நாட்டின் பல நகரங்களிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், உலகின் பல நாடுகளிலும் உழைத்து சாதித்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மண்ணின் அடையாளத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

உழைப்பு, விடாமுயற்சி, தொழில் முனைப்பு, பக்தி, மனிதநேயம் மற்றும் தன்னம்பிக்கை – இவை அனைத்தும் இணைந்ததே தூத்துக்குடியின் உண்மையான முகம்.

நிறைவாக...

தூத்துக்குடி என்பது ஒரு மாவட்டம் அல்ல.

அது கடலின் பெருமையையும்,

வரலாற்றின் வீரத்தையும்,

தொழிலின் வளர்ச்சியையும்,

பக்தியின் ஆழத்தையும்,

ஊடகத்தின் தாக்கத்தையும்,

தமிழரின் உழைப்பின் மரியாதையையும் சுமந்து நிற்கும் ஒரு தனி உலகம்.

தமிழ்நாட்டின் வரைபடத்தில் அது ஒரு மாவட்டமாக இருக்கலாம்.

ஆனால் அதன் பங்களிப்பு, அதன் பெருமை, அதன் அடையாளம் – ஒரு மாவட்டத்தின் எல்லைகளைத் தாண்டியது.

திங்கள், 25 மே, 2026

த்ரிஷ்யம் 3 (Drishyam 3) திரை விமர்சனம்

த்ரிஷ்யம் 3 (Drishyam 3) – பில்டப் 'மகா' சம்பவம், படம் 'மினி' சம்பவமா?

மலையாள சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பான 'த்ரிஷ்யம் 3' தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ஜார்ஜ்குட்டி அண்ணனின் குடும்பத்திற்கு இனி என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய, ரசிகர்களின் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அரங்கு நிறைந்த காட்சிகளாக படம் திரையிடப்பட்டு வருகிறது. படம் எப்படி இருக்கிறது? பார்ப்போம்.

கதைக்களம் & முதல் பாதி (First Half)

​முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாகவே இந்த மூன்றாம் பாகமும் பயணிக்கிறது. ஜார்ஜ்குட்டி மற்றும் அவரது குடும்பத்தை சுற்றியிருக்கும் போலீஸ் வளையம் இன்னும் விலகவில்லை.

​படத்தின் முதல் பாதி மிகவும் நிதானமாக, 'அடுத்து என்ன நடக்கப்போகிறது?' என்கிற ஒருவித பயத்தையும், பதற்றத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளர்களுக்குள் கடத்துவதில் இயக்குனர் வெற்றி பெற்றிருக்கிறார். குறிப்பாக, இடைவேளைக் காட்சி (Interval Block) மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டரில் அடுத்த பாதி மீதான எதிர்பார்ப்பை அது எகிற வைக்கிறது.

​இரண்டாம் பாதி (Second Half) – எங்கே சறுக்கியது?

​முதல் பாதியின் பில்டப்பைப் பார்த்துவிட்டு, இரண்டாம் பாதியில் ஜார்ஜ்குட்டி ஏதோ ஒரு 'மகா' சம்பவம் செய்யப்போகிறார் என்று ஆவலோடு உட்கார்ந்தால், அங்கேதான் படம் கொஞ்சம் சோதிக்கிறது.

​திரைக்கதை நகரும் வேகம் மிகவும் குறைவு. ஜார்ஜ்குட்டி தனது திட்டங்களை வகுக்கும் காட்சிகள் சுவாரசியமாக இருந்தாலும், முந்தைய பாகங்களில் இருந்த அந்த 'சீட் எட்ஜ்' த்ரில்லிங் வேகம் இதில் மிஸ்ஸிங். படம் முழுக்க பெரிய அளவில் பில்டப் கொடுக்கப்பட்டாலும், அதற்கேற்ற அழுத்தமான காட்சிகள் இல்லாததால், கடைசி அரை மணி நேரத்திற்கு முன்பாகவே நமக்கே அறியாமல் கொஞ்சம் தூக்கம் வந்துவிடுகிறது என்பதே யதார்த்தம்.

​கிளைமாக்ஸ் ட்விஸ்ட் & பார்ட் 4 லீட்!

​படத்தின் மிகப்பெரிய பலமே கடைசி 30 நிமிடங்கள் தான். அங்கேதான் இயக்குனர் மீண்டும் கியரை மாற்றி விறுவிறுப்பைக் கூட்டுகிறார். அந்த ட்விஸ்ட் நிச்சயம் ரசிக்க வைக்கிறது. ஆனால், முந்தைய இரண்டு பாகங்களோடு ஒப்பிடும்போது ஒட்டுமொத்த த்ரில்லின் அளவு இதில் கம்மிதான்.

​எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த கதையை இதோடு முடிக்காமல், அசால்ட்டாக நான்காம் பாகத்திற்கான (Drishyam 4) ஒரு லீடைக் கொடுத்து முடித்திருக்கிறார்கள். 'அப்பாடா ஒரு வழியா முடிஞ்சது' என்று நிம்மதியடைவதற்குள் அடுத்த பாகத்திற்கு ரூட் போட்டதால், தியேட்டரை விட்டு குடுகுடுவென ஓடி வர வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது.

​பிளஸ் (Plus Point):

​மோகன்லாலின் எதார்த்தமான நடிப்பு.

​முதல் பாதியின் திரைக்கதையும், இன்டர்வெல் பிளாக்கும்.

​கடைசி 30 நிமிட விறுவிறுப்பு.

​மைனஸ் (Minus Point):

​இரண்டாம் பாதியின் ஆமை வேக திரைக்கதை.

​முந்தைய பாகங்கள் அளவுக்கு இல்லாத த்ரில் மற்றும் சஸ்பென்ஸ்.

​பார்ட் 4-க்கான தேவையற்ற இழுபறி போல் தோன்றுவது.

​இறுதி தீர்ப்பு (Verdict):

​ஜார்ஜ்குட்டி அண்ணன் இம்முறை செய்தது 'மகா' சம்பவம் இல்லை என்றாலும், ஒரு 'மினி' சம்பவமாக ரசிகர்களை ஏமாற்றாமல் கடந்து விடுகிறது. த்ரிஷ்யம் பிரியர்கள் மற்றும் மோகன்லால் ரசிகர்களுக்கான ஒரு சுமாரான த்ரில்லர்!

​ரேட்டிங்: 2.75 / 5

​இவன் : 

ராஜா கே.எஸ் (எழுத்தாளன்)

சனி, 23 மே, 2026

25 Years of Citizen: From School Van Cassettes to Modern Playlists, How Deva’s Music & AK's Presence Created an Evergreen Classic!!

 தலைப்பு: 25 ஆண்டுகளைக் கடந்த 'சிட்டிசன்' மேஜிக்: ஸ்கூல் வேன்களையும், ரசிகர்களின் பிளேலிஸ்ட்டையும் இன்றும் ஆளும் தேவாவின் இசை சாம்ராஜ்யம்!

​90ஸ் மற்றும் 2000களின் ஆரம்பத்தில் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வேன்களில் (Van) சென்றவர்களுக்கு ஒரு அழகான நினைவிருக்கும். காலையிலோ அல்லது மாலை வீடு திரும்பும் போதோ, அந்த வேன்களில் இருக்கும் கேசட் பிளேயரில் ஒரு குறிப்பிட்ட ஆல்பம் ரிப்பீட் மோடில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி 2001 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த தமிழகத்தின் வேன்களையும், ஆடியோ கடைகளையும் ஆக்கிரமித்த ஒரு ஆல்பம் தான் தல அஜித்தின் ‘சிட்டிசன்’.

​இன்றுடன் இந்த ஆல்பம் வெளியாகி வெற்றிகரமாக 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன (25 Years of Citizen). கால் நூற்றாண்டு கடந்த பின்பும், இன்றும் பலரது ஃபேவரிட் பிளேலிஸ்ட்டில் இந்த பாடல்கள் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றன.

​எதிர்பார்ப்புகளும் ட்ரோல்களும்:

​படம் ரிலீஸாவதற்கு முன்னால் ‘சிட்டிசன்’ படத்திற்கு ஏகப்பட்ட பில்டப் மற்றும் எதிர்பார்ப்புகள் இருந்தன. அஜித் ஒன்பது வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்களை உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் வைத்திருந்தது. படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் நடிப்பு மற்றும் சில காட்சிகள் பரவலாக ட்ரோல் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கி, படத்தை பாக்ஸ் ஆபீஸில் கரைசேர்த்த பெருமை 'தேனிசைத் தென்றல்' தேவாவின் தரமான இசையையே சேரும்.

​"காப்பி" விமர்சனமும் தேவாவின் மேஜிக்கும்:

​"உடனே இங்கிலீஷ் ஆல்பத்தை சுட்டுத்தான் கொடுத்தார், மெகலினா பாடலின் காப்பி" என்று சிலர் பொங்க வரலாம். ஆனால், அங்கே தான் தேவாவின் அக்மார்க் திறமை ஒளிந்திருக்கிறது. ஒரு சர்வதேச இசையை, தமிழ் ரசிகர்களின் நாடித் துடிப்புக்கு ஏற்ப மாற்றி, அதை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த விதம் அசாத்தியமானது. அதற்கு பொங்க வேண்டிய அவசியமே இல்லை. தேவாவின் இசை, வைரமுத்துவின் வரிகள், வசுந்தரா தாஸின் காந்தக் குரல், எல்லாவற்றிற்கும் மேலாக ஏகே-வின் (AK) அந்த மாஸான ஸ்கிரீன் பிரசன்ஸ்... அவ்வளவுதான்!

​பிளேலிஸ்ட்டை இன்றும் ஆளும் 'சிட்டிசன்' பாடல்கள்:

​1. பூக்காரா பூக்காரா (Pookara Pookara):

இந்த ஆல்பத்தின் ஆகச்சிறந்த மாஸ்டர்பீஸ். வசுந்தரா தாஸின் வசீகரமான குரலும், தேவாவின் வெஸ்டர்ன் பீட்ஸும், அஜித்தின் ஸ்டைலிஷ் அட்டிடியூடும் சேர்ந்து இன்றளவும் காரிலும், ஹெட்போனிலும் வைப் செய்ய வைக்கும் ஒரு எவர்கிரீன் கிளாசிக்.

​2. மேற்கே விதைத்த சூரியனே 

One of a postive and energictic song spb வாய்ஸ் rule the entire song 

​ ஐ like யூ (I Love You):

அஜித்தின் presence Vasundara Beauty வைரமுத்து லிரிக்ஸ் especially Vasundara das க்கு native banglore அதை வைச்சு வைரமுத்து பெங்களூர் தக்காளி நான் ன்னு வசுந்தரா பாடற மாதிரி வைச்சுருப்பார் 🔥🔥

​முடிவுரை:

​விமர்சனங்கள் வரலாம், போகலாம். ஆனால் 25 வருடங்கள் கடந்தும் ஒரு ஆல்பம் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது என்றால், அதுதான் உண்மையான வெற்றி.

​தேவா மியூசிக் + வைரமுத்து லிரிக்ஸ் + வசுந்தரா வாய்ஸ் + AK பிரசன்ஸ் = Still Ruling the Playlist! 🎧🔥

​எழுத்தாளன் / ராஜா K.S

வெள்ளி, 22 மே, 2026

தெற்கிலிருந்து வந்தவனும்... சென்னை மாநகரத்து ‘என்றென்றும் புன்னகை’யும்!

தெற்கிலிருந்து சென்னை நோக்கி வர்ற எல்லாருக்குள்ளயும் ஒரு பெரிய கனவு இருக்கும். திருச்செந்தூர் கடல் காத்தைக் குடிச்சு வளர்ந்த நானும், சென்னைக்கு வந்தப்போ அப்படித்தான் ஒரு வெறியோட ஒரு கனவைச் சுமந்துட்டு வந்தேன்.

2000-ல தியேட்டர் இருட்டுல 'அலைபாயுதே' படம் பார்த்துட்டு இருக்கேன். காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு, ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியரா மாதவன் பைக்ல வர்ற அந்த இன்ட்ரோ சீன் அப்படியே மனசுல பதிஞ்சிடுச்சு. "நாமளும் பெருசானதும் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆகணும், சென்னை சிட்டில இதே மாதிரி பைக் வாங்கி ஓட்டணும்" அப்படின்னு அன்னைக்கு மனசுக்குள்ள விழுந்த விதை அது.

​இப்போ உள்ள பசங்க லாங்குவேஜ்ல சொல்லணும்னா, அந்த மாதவன் சீனை என் லைஃப்ல ரீ-கிரியேட் பண்ண எனக்குச் சரியா 12 வருஷம் தேவைப்பட்டுச்சு.

உண்மையைச் சொன்னா, என்னை சாஃப்ட்வேர் இன்ஜினியரா அப்பா படிக்க வச்சாரு; ஆனா, இந்த பைக்கை என் சொந்த உழைப்போட சேமிப்புல நான் வாங்கினேன்! எந்த ஃபைனான்ஸும் இல்லாம, கடனே இல்லாம, கஷ்டப்பட்டுச் சேர்த்த என்னோட காசுல இந்த வண்டியோட சாவியை கையில் வாங்குனப்போ இருந்த கெத்தே தனி. நண்பர்கள் சொன்ன மாதிரியே நல்ல மைலேஜும் கொடுத்துச்சு.

ஒருவழியாக வண்டியை எடுத்து, காதுல அதே 'என்றென்றும் புன்னகை' பாட்டை ஓடவிட்டு, சென்னை ரோட்ல நான் அடிச்ச அந்த முதல் ரவுண்ட் இருக்கே... அது வெறும் பைக் ரைடு இல்ல, அப்பாவோட காசுல படிச்சுட்டு, தனக்கான கனவை இந்தச் சென்னையில ஜெயிச்சுக் காட்டுன ஒரு தெற்கத்திக்காரனோட கெத்தான தருணம்! 

@Vairamuthu கவிப்பேரரசு சொன்ன மாதிரி நூறு கனவுகள் கண்டாளே ஆறு கனவுகள் பலிக்காதா அந்த மாதிரி சில பொருட்கள், சில படங்கள் நம் ஆழ் மனதில் பதிந்து இருக்கும்.

இவன்

ராஜா. க 

#அலைபாயுதே #TamilCinema #Dream

வியாழன், 14 மே, 2026

திரைவிமர்சனம்: கர

 திரைவிமர்சனம்: கர

- வேகம் குறைந்த விதியின் ஆட்டம்!

​இயக்கம்: விக்னேஷ் ராஜா

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்

நடிப்பு: தனுஷ், சுராஜ் வெஞ்சரமுடு, மமிதா பைஜூ, ஜெயராம்.

​கதைக்களம்:

​1990-களின் பின்னணியில், ஓட்டைப் பிரிப்பதிலும் பூட்டை உடைப்பதிலும் கைதேர்ந்த ஒரு யதார்த்தமான திருடனாக தனுஷ். "இந்த ஒரு திருட்டோடு தொழிலை விட்டுவிடலாம்" என்று நினைக்கும்போது விதி விளையாடுகிறது. கைதாகி தப்பிக்கும் நாயகன், ஏன் ஒரு தொடர் கொள்ளையனாக மாறுகிறான்? அவனது வாழ்வை மாற்றிய அந்த 'விதியின் கணக்கு' என்ன என்பதுதான் இந்த 'கர'.

​நடிப்பு அசுரன்:

​ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகம் முதல் இறுதி வரை, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிரட்டியிருக்கிறார் தனுஷ். வங்கியைக் கொள்ளையடிக்கும் திட்டமிடலாகட்டும், போலீசிடம் அடிவாங்கும் இடங்களாகட்டும், தனுஷின் நடிப்பு 'பக்கா'. ஆனால், ஒரு மாஸ் ஹீரோவை இவ்வளவு இயல்பாகக் காட்டியதால், பல இடங்களில் 'ஹீரோயிசம்' மிஸ்ஸிங் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமே.

​பலம் சேர்த்த நட்சத்திரங்கள்:

​சுராஜ் வெஞ்சரமுடு: போலீஸ் டிஎஸ்பியாக இவரது நடிப்பும், கூர்மையான வசனங்களும் படத்திற்கு பெரும் பலம்.

​கே.எஸ்.ரவிக்குமார்: அப்பாவாக வரும் இவரது நடிப்பு பிரமாதம்.

​மமிதா பைஜூ: கிராமத்து பெண்ணாக ஆச்சரியப்படுத்துகிறார், ஆனால் அவருக்கு இன்னும் வேலை இருந்திருக்கலாம்.

​ஜெயராம்: வங்கி மேலாளராக இவரது யதார்த்தமான வில்லத்தனம் கவனிக்க வைக்கிறது.

​கருணாஸ், எம்.எஸ்.பாஸ்கர் & பிருத்வி: அனைவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளனர்.

​தொழில்நுட்பம்:

​90-களின் காலக்கட்டத்தை அப்படியே கண்முன்னே நிறுத்தியிருக்கிறது 'Art Department'. ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை முதல் பாதியில் காட்சிகளுக்கு வேகம் கூட்டுகிறது. "கண்ணம்மா" பாடல் மனதில் நிற்கிறது.

​சறுக்கிய இடங்கள்:

​வங்கி கொள்ளைக்கான அந்த விறுவிறுப்பும், பரபரப்பும் திரைக்கதையில் மிஸ்ஸிங். வங்கிக் கடனை அடைக்கவே திருடுகிறார் என்பது ரசிகர்களுடன் பெரிய அளவில் கனெக்ட் ஆகவில்லை.

இரண்டாம் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்வது பலவீனம். கிளைமாக்ஸில் வங்கியின் சிஸ்டம் தவறு என்பதைச் சொல்ல முயலும் இயக்குனர், அதற்கான வலுவான காட்சிகளை வைக்கத் தவறிவிட்டார்.

​பாசிட்டிவ் நோட்:

​'இட்லி கடை'யைத் தொடர்ந்து, இந்தப் படத்திலும் நாட்டார் தெய்வ வழிபாட்டை ஊக்கப்படுத்தும் நாயகன் தனுஷிற்கு ஒரு ராயல் சல்யூட்!

​பாட்டம் லைன்:

​'போர் தொழில்' இயக்குநரின் படம் என்கிற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றம் இருக்கலாம். ஆனால், ஒரு வித்தியாசமான கொள்ளை முயற்சியையும், தனுஷின் எதார்த்த நடிப்பையும் பார்க்க விரும்புபவர்கள் ஒருமுறை 'கர' ஏறலாம்!

​ரேட்டிங்: 2.75 / 5

எழுத்தாளன்: ராஜா K.S.

ஞாயிறு, 10 மே, 2026

உன் வீட்டு கடவுளைக் கடவுளிடமே காட்டு: அன்னையர் தின சிறப்புப் பகிர்வு!

 அன்னையர் தினம்: நம் வீட்டு கடவுளின் பெருமை!

​அம்மா... இந்த இரண்டு எழுத்துக்குள் அடங்காத காவியங்களே உலகில் இல்லை. ஒரு குழந்தைக்குப் பேசக் கற்றுக்கொடுக்கும் முன், உலகத்தைப் புரிய வைக்கும் முதல் ஆசான் அவளே.

​என் பார்வையில் அன்னையை ஒரு அழகான கவிதையாக இங்கே பதிகிறேன்:

​முதல் ஆசிரியை

​அனைத்துப் பிள்ளைகளின் முதல் ஆசிரியையும் அவளே. பள்ளிக்கூடம் செல்லும் முன்பே பாடம் புகட்டும் பல்கலைக்கழகம் அம்மா.

​கரும்பலகையான வீட்டுக் கதவுகள்

​வீட்டு கதவையே கரும்பலகையாய் மாற்றி, ஒரு கையில் சாதக் குவளையோடு நிலவைக் காட்டி சோறு ஊட்டும் போதே, வாழ்க்கைப் பாடத்தையும் சேர்த்து ஊட்டுபவள். அன்னையாகவும், ஆசிரியையாகவும் ஒருசேர உருமாறுவது அவளுக்கு மட்டுமே கைவந்த கலை.

​பண்புகளின் அடித்தளம்

​ஒரு பிள்ளைக்குள் இருக்கும் நல்ல பழக்கவழக்கங்கள், ஒழுக்கம், அன்பு என அனைத்திற்கும் பின்னால் அந்த அன்னையின் உழைப்பும், அர்ப்பணிப்பும் மிக அதிகம். நாம் இன்று அடைந்துள்ள நற்பெயர்கள் அனைத்தும் அவளுக்குச் சமர்ப்பணம்.

​நடமாடும் தெய்வம்

​அன்னைக்குக் கோயில் கட்டி கும்பிட வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, அவளை நான்கு கோயில்களுக்கு நேரில் அழைத்துச் செல்லுங்கள். அங்குள்ள சிலைகளிடம், "இதோ என் வீட்டு கடவுள்" என்று அவளைப் பெருமிதமாகக் காட்டுங்கள்! அதுவே நீங்கள் அவளுக்குச் செய்யும் ஆகச்சிறந்த மரியாதை.

​அனைத்து தாய்மார்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்! ❤️

​என்றும் அன்புடன்

,

ராஜா K.S 

​#MothersDay #Amma #MotherLove #TamilPoem #TheWriter #RajaKS

சனி, 2 மே, 2026

திருவாரூர் டைரி: வத்தக் குழம்பும்... கோதுமை உப்புமா தத்துவமும்!

​தேர்தல் பரபரப்புகள் ஓய்ந்த ஒரு மதிய வேளையில், பணி நிமித்தமாகத் திருவாரூர் மண்ணில் கால்பதித்தேன். ஆழித்தேர் ஓடும் அழகிய திருவாரூர் - நம் கலைஞர் பிறந்த மண் என்கிற பெருமிதம் அந்த ஊர் காற்றிலேயே கலந்திருக்கிறது.

​வேலைகள் முடிந்து மதிய வெயில் உச்சிக்கு வரும் வேளையில், வயிற்றுக்கு இதமான ஒரு சைவ உணவகத்தைத் தேடினேன். யாரிடம் கேட்டாலும் யோசிக்காமல் வந்த ஒரே பதில்: "ஹோட்டல் வாசன்".

​அந்த 'வின்டேஜ்' மதியப் பொழுது

​உணவகத்திற்குள் நுழைந்தபோதே அதன் பழைய காலத்துத் தோற்றம் (Vintage style) மனதை ஈர்த்தது. ஒரு மேஜையைத் தேர்வு செய்து அமர்ந்தேன். "சார், மீல்ஸ்க்கு டோக்கன் வாங்கிடுங்க" என உபசரித்த சர்வரின் குரலில் ஒரு நிதானம். நான் டோக்கன் எடுத்து வருவதற்கு முன்பே, மேஜையில் பச்சைப் பசேலென வாழை இலை விரிந்திருந்தது.

​தட்டில் வரிசையாக ஒரு கூட்டு, இரண்டு பொரியல், மணமணக்கும் சாம்பார், ரசம், மோர், அப்பளம், பாயசம் என முழுமையான ஒரு மதிய விருந்து. ஆனால், அங்கே 'மேன் ஆஃப் தி மேட்ச்' அந்த வத்தக் குழம்பு தான்!

​நிஜத்தைச் சொல்லப்போனால், அந்த வத்தக் குழம்பு ஒரு கவிதை. அதற்கு இணையாக வைக்கப்பட்டிருந்த முட்டைக்கோஸ் பொரியல், கிரிக்கெட் மைதானத்தில் சச்சின் - சேவாக் ஜோடியைப் போல அத்தனை பொருத்தம்! அந்த அக்னி வெயிலுக்கு இதமாக ஒரு எக்ஸ்ட்ரா மோர் குடித்துவிட்டு, கல்லாவில் இருந்தவரிடம் "மீல்ஸ் சூப்பர்" என்று சொன்னபோது அவர் முகத்தில் வழிந்த அந்தத் திருப்தி, அந்த உணவின் ருசியை விட மேலானதாகத் தெரிந்தது.

​இரவு நேரத்து கோதுமை தரிசனம்

​மாலை வேலைகளை முடித்துவிட்டு ஆட்டோவில் ஏறியபோது, "நைட் டிபன் எங்கே நல்லா இருக்கும்?" என்ற என் கேள்விக்கு, அந்த ஆட்டோ ஓட்டுநரும் சட்டென்று சொன்னது அதே "வாசன்" பெயரைத்தான். சில இடங்கள் அப்படித்தான், ஊரோடு ஒன்றிப்போய் விடுகின்றன.

​இரவும் அதே மேஜை, அதே சர்வர். மெனுவை அவர் வாசித்தபோது கோதுமை உப்புமாவிடம் என் தேடல் நின்றது. ஒரு காலத்தில் கொத்து பரோட்டாவைத் தேடி அலைந்த நாவிற்கு, இப்போது ஏனோ இந்த ஆரோக்கியமான கோதுமை உப்புமா மீது ஒரு ஈர்ப்பு.

​தொட்டுக்கொள்ள வந்த தேங்காய் சட்னி - அத்தனை சுத்தம்! பொரிக்கடலையின் கலப்பில்லாத அந்தத் தூய தேங்காயின் ருசி பிரமாதம். சாம்பார் சேர்த்து அந்த உப்புமாவை உண்டபோது, "அடிப்படையிலேயே நான் ஒரு ரவை உப்புமா பிரியன் தான், ஆனால் இந்தக் கோதுமை உப்புமா ஒரு திவ்யமான அனுபவம்" என்று என் மனம் மெச்சியது.

​இறுதியாக ஒரு ஃபில்டர் காபியின் மணத்தோடு அந்த நாளை நிறைவு செய்தேன்.

​பின்குறிப்பு: நீங்கள் ஒரு தீவிர சைவ உணவுப் பிரியர் என்றால், திருவாரூர் மண்ணிற்குச் செல்லும்போது 'வாசன்' ஹோட்டலை உங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்ளத் தவறாதீர்கள். அது வெறும் உணவகம் மட்டுமல்ல, ஒரு சுவையான ஞாபகம்!

​#Thiruvarur #FoodTravel #TamilFood #Vegetarian #FoodReview #TravelDiaries #TamilnaduTourism #SouthIndianFood

வெள்ளி, 1 மே, 2026

திரைவிமர்சனம்: 'பிரேக்பாஸ்ட்'

 திரைவிமர்சனம்: 'பிரேக்பாஸ்ட்'

– காதலா? ஈகோவா? திரைக்கதையில் வேகம் உண்டா?

​'செல்லமே', 'ஆனந்த தாண்டவம்' போன்ற படங்களை இயக்கிய ஏ.ஆர். காந்திகிருஷ்ணா, சற்றே நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்றைய தலைமுறை காதலையும், முந்தைய தலைமுறை காதலையும் ஒப்பிட்டுச் சொல்லியிருக்கும் படம் தான் இந்த 'பிரேக்பாஸ்ட்' (Breakfast).

​கதைக்கரு:

​இன்றைய Gen Z தம்பதிகளான கிர்த்திக் மோகன் - அமிதா இடையே நடக்கும் ஈகோ சண்டை நீதிமன்றம் வரை செல்கிறது. இவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் மனநல மருத்துவர் கஸ்தூரி, ஒரு பழைய காதல் கதையைச் சொல்கிறார். தொழிலதிபரான ரோஸ்மின், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த ராணவ்வை காதலித்து கரம் பிடிக்கும் அந்த 80-களின் கதையில் நடக்கும் போராட்டங்கள் என்ன? அந்த கதைக்கும் இந்த இளம்தம்பதிகளுக்கும் என்ன சம்பந்தம்? இறுதியில் இவர்கள் பிரிந்தார்களா அல்லது இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை.

​இயக்குநரின் பார்வை:

​ஒரே படத்தில் இரண்டு விதமான காலக்கட்டத்தை (80s & Gen Z) கையாண்டிருக்கிறார் இயக்குநர். ஷங்கரின் பட்டறையில் இருந்து வந்தவர் என்பதால், காட்சிகளில் அந்த பிரம்மாண்டமும் அழகியலும் தெரிகிறது. குறிப்பாக 'காதலன்' படப் பாடல்களை நினைவுபடுத்தும் சில காட்சிகள் மற்றும் 'என்னவளே' பாடலின் தாக்கம் படம் முழுக்க ஒரு ஏஸ்டெடிக் (Aesthetic) உணர்வைத் தருகிறது.

​நடிப்பு எப்படி?

​கிர்த்திக் மோகன் & அமிதா: இன்றைய காலத்து காதலர்களாக இவர்கள் இருவருமே கச்சிதம். அமிதாவின் சின்னச் சின்ன கோபங்களும், எக்ஸ்பிரஷன்களும் ரசிக்க வைக்கின்றன.

​ராணவ் & ரோஸ்மின்: கதையின் பெரும்பகுதியைத் தாங்கிப் பிடிக்கும் இந்த ஜோடி, 80-களின் காதலை அழகாகப் பிரதிபலிக்கிறார்கள். ரோஸ்மின் பாடல் காட்சிகளில் தேவதையாகத் தெரிகிறார். ராணவ் அறிமுக காட்சியிலும் நடனத்திலும் ஈர்க்கிறார் (எமோஷனல் காட்சிகளில் மட்டும் இன்னும் கொஞ்சம் பக்குவம் தேவை).

​பிற கதாபாத்திரங்கள்: கஸ்தூரியின் கதாபாத்திரம் கதையை நகர்த்த உதவுகிறது. அர்ச்சனா, ரங்கநாதன் போன்றோர் அனுபவ நடிப்பைத் தந்துள்ளனர்.

​தொழில்நுட்பக் கலைஞர்கள்:

​ஜி.வி. பிரகாஷ்குமார்: பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்குப் பெரிய பலம். இசைதான் படத்தை பல இடங்களில் தாங்கிப் பிடிக்கிறது.

​எம்.வி. பன்னீர்செல்வம்: பனிப்பொழிவு மற்றும் மலைப் பின்னணியில் எடுக்கப்பட்ட பாடல்கள் ஒரு 'கலர்ஃபுல்' விஷுவல் ட்ரீட்.

​நிறைகள்:

​✅ இளமையான நட்சத்திரங்களின் எனர்ஜியான நடிப்பு.

✅ கண்களைக் கவரும் ஒளிப்பதிவு மற்றும் இசை.

✅ கிளைமாக்ஸிற்கு முந்தைய எதிர்பாராத திருப்பம் (Twist).

​குறைகள்:

​❌ 90-களின் பாணியிலான மிகைப்படுத்தப்பட்ட சென்டிமென்ட் மற்றும் குடும்பப் பிரச்சனைகள்.

❌ திரைக்கதையில் இருக்கும் தொய்வு (குறிப்பாக இரண்டாம் பாதி).

❌ நாயகியின் எல்லை மீறிய கோபம் சில இடங்களில் நமக்கே எரிச்சலைத் தருகிறது.

❌ கிளைமாக்ஸ் இன்னும் கொஞ்சம் உணர்வுப்பூர்வமாக இருந்திருக்கலாம்.

​பிளாக்கர் பார்வை:

​இரண்டு இளமையான ஜோடிகள், சிறப்பான இசை இருந்தும், பழைய காலத்து திரைக்கதை உத்திகளால் படம் சற்று மெதுவாகவே நகர்கிறது. இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான சில மெசேஜ்கள் இருந்தாலும், அதைச் சொல்லியிருக்கும் விதம் 'சீரியல்' பார்ப்பது போன்ற உணர்வைத் தந்துவிடுகிறது.

​பாட்டம் லைன்: பிரேக்பாஸ்ட் – பெயரில் இருக்கும் 'ஃபாஸ்ட்' (Fast) திரைக்கதையில் இல்லை. கொஞ்சம் மெதுவான 'மீல்ஸ்' தான்!

வியாழன், 30 ஏப்ரல், 2026

சித்ரா பௌர்ணமி & புத்த பூர்ணிமா: ஒரு புதுத் தொடக்கம்!

நிசப்தமான இரவில் வானத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அதுவும் ஒரு பௌர்ணமி இரவில். நிலவின் குளிர்ச்சி நம் மனதின் வெப்பத்தை ஆற்றும் வல்லமை கொண்டது. ஆனால், இந்த முறை வரும் பௌர்ணமி சற்றே ஸ்பெஷல். இதில் இரண்டு பெரிய தத்துவங்கள் கைகோர்க்கின்றன.

சித்திரகுப்தன்: கர்மாவின் கணக்காளர்

சித்ரா பௌர்ணமி என்றாலே நினைவுக்கு வருவது சித்திரகுப்தன். நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், எண்ணத்தையும் கணக்கு வைப்பவர் என்பது ஒரு நம்பிக்கை. "என்னாடா ப்பா

, கணக்கு வழக்கெல்லாம் கரெக்டா இருக்கா?" என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது. தப்பு செய்வது மனித இயல்பு, ஆனால் அதைத் திருத்திக்கொண்டு முன்னேறுவதுதான் பண்பு. பழைய கசப்புகளை, தவறுகளை இந்தப் பௌர்ணமி நிலவில் கரைத்துவிடுவோம்.

புத்தர்: ஞானத்தின் தேடல்

இன்னொரு பக்கம் புத்த பூர்ணிமா. ஒரு இளவரசன், வாழ்வின் நிலையாமையைக் கண்டு வருந்தி, காடு மேடெல்லாம் அலைந்து, இறுதியில் போதி மரத்தடியில் அந்த மகா ஞானத்தைப் பெற்ற நாள். "ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று அவர் சொன்னது எவ்வளவு எதார்த்தம்! எளிய வாழ்வு, தெளிவான சிந்தனை - இதுதான் இன்றைய அவசர உலகிற்குத் தேவைப்படும் மிக முக்கியமான மருந்து.

​"பழசுகள் தொலையட்டும், புதுசுகள் மலரட்டும்! இந்த பௌர்ணமி ஒளியில், நம் மனமும் ஞானம் பெறட்டும்."

​இந்த நாளை வெறும் மதச் சடங்காகப் பார்க்காமல், ஒரு 'Reset' பட்டனாகப் பார்ப்போம். நம்முடைய கர்மாக்களைச் சுத்தப்படுத்தி, புத்தரின் அமைதியைப் பின்பற்றி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவோம்.

​பாசிட்டிவா இருப்போம், நல்லதைச் செய்வோம். உலகம் தானாக அழகாகும்!

​என்றும் அன்புடன்,

ராஜா க(Raja K.S.)

#ChitraPournami #BuddhaPurnima #VaisakhaPurnima #Spirituality #PositiveVibes #TamilNadu #Trending #LifeLessons #SelfReflection #FullMoon #Faith #MotivationTamil

சனி, 25 ஏப்ரல், 2026

திருவல்லிக்கேணி தரிசனமும்... காசி விநாயகா மெஸ்ஸின் 'ரைஸ் பெர்க்கும்'!

 சென்னையில் திருவல்லிக்கேணிக்கு என்று ஒரு தனி ஆன்மா இருக்கிறது. குறுகலான சந்துகள், பழமை மாறாத வீடுகள், எந்நேரமும் ஒலிக்கும் பஜனைச் சத்தம் என அது ஒரு தனி உலகம். சமீபத்தில் பார்த்தசாரதி கோவிலுக்குச் சென்று அந்த வேணுகோபாலனைத் தரிசித்துவிட்டு வெளியே வந்தபோது, மனம் அத்தனை லேசாக இருந்தது. ஆனால், வயிறு ஒரு மதிய உணவைக் கோரியது.

​நேராகச் சென்ற இடம் - திருவல்லிக்கேணியின் அடையாளங்களில் ஒன்றான காசி விநாயகா மெஸ்.

அந்த ‘கிளாஸ்ரூம்’ சிஸ்டம்!

​இந்த மெஸ்ஸுக்குள் நுழைந்தாலே

நீங்கள் ஒரு டைம் மெஷினில் ஏறி 90-களுக்குச் சென்றது போல இருக்கும். இங்கே செட்டப் ரொம்ப சிம்பிள். ஒரு மேஜை, ஒரு நாற்காலி - அவ்வளவுதான்.

​இங்கே ஒரு சுவாரஸ்யமான சிஸ்டம் உண்டு. டோக்கன் வாங்கினால் அதில் ஒரு எண் இருக்கும். அந்த எண் போட்ட டேபிளில்தான் நீங்கள் அமர வேண்டும். எனக்கு 17-ஆம் எண் கிடைத்தது. ஆனால் என் கண்கள் 30-ஆம் எண் வரிசை மேலேயே இருந்தது; ஏனென்றால் அந்த வரிசையில் அமர்ந்தால் பின்னால் சுவர் இருக்கும், கொஞ்சம் சாய்ந்து கொள்ளலாம். 21-இல் உட்கார்ந்தால் பின்னால் இன்னொருவர் முதுகு உரசும். பள்ளி வகுப்பறை ஞாபகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை!

​காத்திருப்பின் ருசி

​சுமார் 15 நிமிடம் காத்திருக்க வேண்டியிருந்தது. ஒரு பேட்ச் ஆட்கள் சாப்பிட்டு முடித்து, இடத்தை சுத்தம் செய்த பிறகுதான் அடுத்த செட்டை உள்ளே விடுகிறார்கள். கைகழுவும் இடம், சிறிய காத்திருப்பு அறை என எல்லாமே ஒரு 'லிமிட்டட்' செட்டப் தான். ஆனால் அங்கே நிலவும் அந்த வீட்டுச் சூழல் நம்மை அமைதிப்படுத்துகிறது.

​இலையில் விழும் 'ரைஸ் பெர்க்' (Rice-Berg)

​வாழை இலை விரிக்கப்பட்டதும், முதலில் உங்கள் முன்னே ஒரு 'ரைஸ் பெர்க்' வந்து விழும். சாதத்தை அப்படி ஒரு மலை போலப் பரிமாறி நான் பார்த்ததே இல்லை.

​விலை விவரம்:

​₹120-க்கு பிளேட் மீல்ஸ்: சாதம், இரண்டு வகை குழம்புகள், சாம்பார், ரசம், மோர், அப்பளம் மற்றும் ஊறுகாய்.

​கூடுதலாக ₹20 கொடுத்தால்: சுத்தமான நெய், பருப்புப் பொடி மற்றும் கெட்டியான தயிர்.

​எனது டிப்ஸ்: அந்த ₹20-ஐக் கஞ்சத்தனம் பார்க்காமல் செலவு செய்யுங்கள். அந்த ஒரு கரண்டி நெய்யும், பருப்புப் பொடியும் சாதத்தோடு இணையும்போது கிடைக்கும் சுவை... சொர்க்கம்!

​சுவை எப்படி?

​இது பக்கா வீட்டுச் சாப்பாடு. மசாலா குத்தல் இல்லை, அதிகப்படியான எண்ணெய் இல்லை. நான் சாப்பிட்ட அன்று உருளைக்கிழங்கு கறியும், ஒரு வகை குர்மாவும் இருந்தது. இரண்டுமே மிகச் சமச்சீரான சுவையில் இருந்தன. ஆந்திரா மீல்ஸோடு ஒப்பிடும்போது இது மிகவும் சாந்தமான, நிதானமான உணவு.

​தயிர் சாதத்திற்கு அந்த எலுமிச்சை ஊறுகாய் ஒரு ‘மேட் ஃபார் ஈச் அதர்’ ஜோடி. கடைசியாக வந்த பாயசம் - மிக எளிமை, ஆனால் அத்தனை ருசி.

​நோட் பண்ணிக்கோங்க:

​சாதம் ஜாக்கிரதை: இங்கே சாதத்தின் அளவு மிக அதிகம். உங்களால் அவ்வளவு சாப்பிட முடியாது என்றால், பரிமாறுபவர் வரும்போதே சொல்லிவிடுங்கள். உணவை வீணாக்க வேண்டாம்.

​நேரம்: மதிய உணவு நேரங்களில் திருவல்லிக்கேணி கூட்டத்தை விட இங்கே கூட்டம் அதிகமாக இருக்கும்.

​தரிசனம்: பார்த்தசாரதி கோவில் தரிசனம் முடித்துவிட்டு இங்கே வருவது ஒரு முழுமையான ஆத்மார்த்தமான அனுபவம்.

​முடிவாக:

சென்னையில் ஒரு ஹோம்லி சைவ உணவைத் தேடுபவர்களுக்கு காசி விநாயகா மெஸ் ஒரு வரப்பிரசாதம். அந்த பழைய காலத்து மெஸ் அனுபவத்தையும், அம்மாவின் கைமணத்தையும் தேடுபவர்கள் திருவல்லிக்கேணி பக்கம் போனால் கண்டிப்பாக இங்கே ஒரு விசிட் அடிங்க!

​உங்களுக்கும் இது போன்ற சுவாரஸ்யமான அனுபவங்கள் இருந்தால் கமெண்ட்டில் சொல்லுங்கள்!

ஞாயிறு, 19 ஏப்ரல், 2026

அட்சய திருதி மற்றும் மணிமேகலை

 அட்சய திருதி: தங்கம் வாங்குவதா? தர்மம் செய்வதா? ஒரு காவியப் பார்வை!

​அட்சய திருதி என்றாலே நம் நினைவுக்கு வருவது நகைக்கடை கூட்டமும், தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையும்தான். ஆனால், நம் தமிழ் இலக்கியங்கள் காட்டும் 'அட்சய' தத்துவம் இதைவிடப் பேரின்பமானது.

​மணிமேகலையும் அமுதசுரபியும்

​சிலப்பதிகாரத்திற்குப் பின் தோன்றிய மணிமேகலை காப்பியத்தில், மாதவியின் மகள் மணிமேகலை ஒரு உன்னதமான பாத்திரத்தைப் பெறுகிறாள். அவள் மணிபல்லவத் தீவில் கோமுகிப் பொய்கையிலிருந்து "அமுதசுரபி" எனும் அட்சய பாத்திரத்தைப் பெறுகிறாள்.

​இந்த பாத்திரம் வைகாசிப் பௌர்ணமி அன்று அவளுக்குக் கிடைத்தாலும், அதன் அடிப்படைத் தத்துவம் ஒன்றுதான்: "எடுக்க எடுக்கக் குறையாத செல்வம்." அந்த பாத்திரத்தைக் கொண்டு அவள் தன் பசியைப் போக்கிக்கொள்ளவில்லை; மாறாக, உலக மக்கள் அனைவரின் பசிப்பிணியையும் போக்கினாள்.

​இளங்கோவடிகள் காட்டும் அறம்

​மணிமேகலையின் பெருமையை உணர்ந்தே, இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ஒரு மாபெரும் உண்மையைச் சொன்னார்:

​"அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் - மன்னுயிர் எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!"

​உயிர்களுக்கு உணவளிப்பவர்களே, அந்த உயிரைத் தக்கவைக்க உதவும் இறைவனுக்குச் சமமானவர்கள் என்பது இதன் பொருள்.

​இந்த அட்சய திருதியில் நாம் செய்ய வேண்டியது என்ன?

​'அட்சயம்' என்றால் அழியாதது என்று பொருள். நாம் வாங்கும் தங்கம் நம்மிடம் மட்டுமே இருக்கும். ஆனால், நாம் ஒருவருக்குச் செய்யும் அன்னதானம் (உணவு அளித்தல்) அவர்களின் ஆசிர்வாதமாக மாறி நம் தலைமுறைக்கும் அழியாத புண்ணியத்தைத் தரும்.

​பசி தீர்ப்போம்: இந்த நன்னாளில் உங்களால் முடிந்த ஒருவருக்காவது உணவு வழங்குங்கள்.

​அறம் செய்வோம்: இல்லாதவர்களுக்கு உதவுவதே உண்மையான அட்சய திருதி கொண்டாட்டம்.

​தங்கம் வாங்குவது உங்கள் விருப்பம், ஆனால் ஒரு ஏழையின் பசி தீர்ப்பது உங்கள் கடமை. மணிமேகலை காட்டிய அந்த அறவழியில் நின்று, இந்த நாளை அர்த்தமுள்ளதாக்குவோம்!

​அனைவருக்கும் இனிய அட்சய திருதி நல்வாழ்த்துகள்!

"நீங்கள் இன்று செய்த அறம் என்ன?"

​எழுத்தாளன்:

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

மகளுக்கு மறுமணம்... மருமகனுக்கு நோ சான்ஸ்! 'தாய் கிழவி'யில் இயக்குனர் வைத்த அதிரடி புரட்சி!"

 ​தாய் கிழவி: ராதிகாவின் அசுரத்தனமான நடிப்பு; மதுரை மண்ணின் மாஸ் மெசேஜ்! - ஒரு சினிமா பார்வை ✍️

​சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. அந்த வகையில், உறவுகளுக்குள் ஒளிந்திருக்கும் பணப்பேயையும், பெண்களின் சுயகௌரவத்தையும் மிக அழகாகப் பேசியிருக்கிறது இந்த 'தாய் கிழவி'. சிவகார்த்திகேயன் தயாரிப்பில், இயக்குனர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படம் மதுரை மண்மணத்தோடு ஒரு 'Bold' ஆன கருத்தைச் சொல்லியிருக்கிறது.

​ராதிகா: பாரதிராஜா எனும் இமயத்தால் செதுக்கப்பட்ட 'ஆக்டிங் குயின்'! 👑

​பாரதிராஜா ஸ்கூலில் இருந்து வந்த ஒரு நடிகைக்கு கிராமத்து மண்வாசனை என்பது ரத்தத்திலேயே இருக்கும். 'கிழக்குச் சீமையிலே' படத்திற்குப் பிறகு ராதிகா மேம்க்கு ஒரு அழுத்தமான 'National Award' மெட்டீரியல் படம் இது. 'பவுனுதாயி' கேரக்டரில் அவர் காட்டும் அந்த மதுரையின் வீரம், திமிர், நக்கல்... சான்ஸே இல்லை! 'கிளாமர்' பாட்டியாக இல்லாமல், ஒரு 'கெத்தான' பாட்டியாக அவர் வலம் வரும்போது தியேட்டரே அதிருகிறது.

​காமெடி & கேரக்டர் ஸ்டடி: சிரிப்பும் சிந்தனையும்! 😂

​பாலா சரவணன் (Calculator Comedy): படத்தில் இது வெறும் நகைச்சுவை மட்டுமல்ல. ஒரு உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும்போது கூட, பணத்தை எப்படிக் கணக்குப் போடுவார்கள் என்ற மனிதனின் 'Dark' பக்கத்தைச் சொல்லும் ஒரு அற்புதமான குறியீடு. பாலாவின் டைமிங் செம!

​சிங்கம்புலி: ஒரு தீவிர 'கமல்' ரசிகராக அவர் செய்யும் அலப்பறைகள், அந்த 'கமல் டச்சிங்' பாடல்கள் படத்திற்குப் பெரிய எனர்ஜி.

​முத்துகுமார் (மருமகன்): படத்தின் மெயின் வில்லன். இவரது எதார்த்தமான வில்லத்தனம் தான் படத்தின் கனத்தை அதிகப்படுத்துகிறது.

​க்ளைமாக்ஸ் புரட்சி: ஒரு 'Bold' ஆன முடிவு! 👊

​மகன்கள் திருந்துவது ஒரு பக்கம் இருந்தாலும், அந்த அடாவடி மருமகனுக்குத் திருந்த வாய்ப்பு கொடுக்காமல், கொடுமைக்கார கணவனைத் தூக்கி எறிந்துவிட்டு மகளுக்கு 'மறுமணம்' செய்து வைக்கும் முடிவு... நிஜமாவே ஒரு புரட்சி மூவ்! இது கதையின் போக்கில் சற்றே அழுத்தமாகத் தெரிந்தாலும், "பெண்கள் யாருக்காகவும் தங்களை வருத்திக்கொள்ளத் தேவையில்லை" என்ற மெசேஜை உரக்கச் சொல்கிறது.

​தங்கமான சிந்தனை: ✨

​"உருவாக்குதல், காத்தல், அழித்தலுக்கு ஆண் தெய்வங்கள்... ஆனால் பணத்துக்கும், படிப்புக்கும் ஏன் பெண் தெய்வங்கள்?" - இந்த ஒற்றை டயலாக் போதும். பெண்கள் ஏன் சம்பாதிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும், ஏன் தமக்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று ராதிகா மேம் பேசும் வசனங்கள் பெண்களுக்கு ஒரு 'லட்சியம்'.

அனாலிசிஸ் (Raja K.S Analysis): 📈

​திரைக்கதையில் ஆங்காங்கே சில தொய்வுகள் இருந்தாலும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பும், மதுரை மண்மணமும் அதைத் தள்ளிவிடுகின்றன. கிராமத்து மனிதர்களின் குணாதிசயங்களை இவ்வளவு இயல்பாகப் பதிவு செய்த இயக்குனரைப் பாராட்டலாம்.

​ரேட்டிங்: 3.5/5 ⭐⭐⭐✨

பாட்டம் லைன்: கிராமத்து மண்மணம் + குடும்ப உறவுகள் + ராதிகாவின் அசாத்திய நடிப்பு = மஸ்ட் வாட்ச்! 🤘

#ThaiKizhavi #ThaiKizhaviReview #RadikaaSarathkumar #Sivakarthikeyan #SKProductions #KSRajaReview #CinemaAnalysis 