ஞாயிறு, 8 மார்ச், 2026

Happy Women's Day!!

 நகரங்கள் சில நேரம் மனிதர்களை விழுங்கும்.

ஆனா அந்த நகரங்களையே அமைதியாக ஜெயித்து கொண்டு நடந்து போகும் சிலர் இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் – பெண்கள்.

நான்கு சுவருக்குள் அமர்ந்து

“நாங்களும் ஆண்களுக்கு சமம்” என்று

குரல் உயர்த்தி பேசாமல்…

சென்னை போன்ற நகரங்களின் பரபரப்பில்

ஒரு முகவரி இல்லாமல்

ஒரு பாதுகாப்பு இல்லாமல்

தான் படித்த படிப்புக்கு ஏற்றதோ,

ஏற்காததோ ஒரு வேலையை

குடும்பம் என்ற ஒரு காரணத்திற்காக

அமைதியாக ஏற்றுக்கொண்டு…

நெரிசலான பேருந்துகளிலும்

மூச்சு வாங்க இடமில்லாத இரயில்களிலும்

தன் சோர்வை வெளியில் காட்டாமல்

உள்ளுக்குள் மட்டும் மடித்து வைத்து…

அலுவலக அரசியலை

தினமும் புரிந்து கொண்டு

அதை எதிர்த்து அல்ல

அதை தாங்கிக் கொண்டு வாழ்ந்து…

இந்த வயதில் மலர வேண்டிய

கவிதை, கற்பனை, காதல்

அனைத்தையும்

தன் மனசுக்குள் மட்டும் பூட்டி வைத்து…

உதட்டில் ஒரு சிறிய புன்னகை மட்டும் அணிந்து கொண்டு

“நாளை நல்ல நாளாகும்”

என்று தன்னையும்

தன் குடும்பத்தையும் நம்ப வைக்கும் பெண்கள்…

அவர்கள் தான்

இந்த நகரத்தின் அமைதியான வீரர்கள்.

என் வாழ்க்கையில் ஆசான்கள் பலர் இருந்தாலும்

என் முதல் ஆசிரியை – என் அம்மா.

எங்கள் வீட்டுக் கதவுதான்

என் முதல் கரும்பலகை.

ஒரு கையில் சாதக் கிண்ணம்

மற்றொரு கையில் எழுத்து.

அன்னையாகவும்

ஆசிரியையாகவும் இருந்தவர் – அவள்.

பள்ளி செல்லும் பயத்தை

விருப்பமாக மாற்றியவர்கள் –

செல்லம்மா டீச்சர்,

ஈஸ்வரி டீச்சர்.

தமிழ் ஒரு பாடமல்ல

ஒரு மொழியின் அழகு என்று

எழுத கற்றுத்தந்தவர் –

ஹேமாவதி டீச்சர்.

அறிவியல்

புத்தகத்தில் இருக்கும் எழுத்து அல்ல

உலகத்தை புரிந்து கொள்ளும் வழி என்று

காட்டியவர் – ஜானகி டீச்சர்.

வரலாறும் அரசியலும்

வாழ்க்கையின் கதைகள் என்று

எனக்குள் விதைத்தவர்கள் –

சாந்தா டீச்சர்,

வசந்தா டீச்சர்.

இவர்கள் மட்டும் அல்ல…

என் வாழ்க்கையில் நான் கண்டு வியந்த

அனைத்து பெண்களுக்கும்…

மனமார்ந்த

பெண்கள் தின வாழ்த்துகள்.


இவன் 

ராஜா க


 நகரங்கள் சில நேரம் மனிதர்களை விழுங்கும்.

ஆனா அந்த நகரங்களையே அமைதியாக ஜெயித்து கொண்டு நடந்து போகும் சிலர் இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் – பெண்கள்.

நான்கு சுவருக்குள் அமர்ந்து

“நாங்களும் ஆண்களுக்கு சமம்” என்று

குரல் உயர்த்தி பேசாமல்…

சென்னை போன்ற நகரங்களின் பரபரப்பில்

ஒரு முகவரி இல்லாமல்

ஒரு பாதுகாப்பு இல்லாமல்

தான் படித்த படிப்புக்கு ஏற்றதோ,

ஏற்காததோ ஒரு வேலையை

குடும்பம் என்ற ஒரு காரணத்திற்காக

அமைதியாக ஏற்றுக்கொண்டு…

நெரிசலான பேருந்துகளிலும்

மூச்சு வாங்க இடமில்லாத இரயில்களிலும்

தன் சோர்வை வெளியில் காட்டாமல்

உள்ளுக்குள் மட்டும் மடித்து வைத்து…

அலுவலக அரசியலை

தினமும் புரிந்து கொண்டு

அதை எதிர்த்து அல்ல

அதை தாங்கிக் கொண்டு வாழ்ந்து…

இந்த வயதில் மலர வேண்டிய

கவிதை, கற்பனை, காதல்

அனைத்தையும்

தன் மனசுக்குள் மட்டும் பூட்டி வைத்து…

உதட்டில் ஒரு சிறிய புன்னகை மட்டும் அணிந்து கொண்டு

“நாளை நல்ல நாளாகும்”

என்று தன்னையும்

தன் குடும்பத்தையும் நம்ப வைக்கும் பெண்கள்…

அவர்கள் தான்

இந்த நகரத்தின் அமைதியான வீரர்கள்.

என் வாழ்க்கையில் ஆசான்கள் பலர் இருந்தாலும்

என் முதல் ஆசிரியை – என் அம்மா.

எங்கள் வீட்டுக் கதவுதான்

என் முதல் கரும்பலகை.

ஒரு கையில் சாதக் கிண்ணம்

மற்றொரு கையில் எழுத்து.

அன்னையாகவும்

ஆசிரியையாகவும் இருந்தவர் – அவள்.

பள்ளி செல்லும் பயத்தை

விருப்பமாக மாற்றியவர்கள் –

செல்லம்மா டீச்சர்,

ஈஸ்வரி டீச்சர்.

தமிழ் ஒரு பாடமல்ல

ஒரு மொழியின் அழகு என்று

எழுத கற்றுத்தந்தவர் –

ஹேமாவதி டீச்சர்.

அறிவியல்

புத்தகத்தில் இருக்கும் எழுத்து அல்ல

உலகத்தை புரிந்து கொள்ளும் வழி என்று

காட்டியவர் – ஜானகி டீச்சர்.

வரலாறும் அரசியலும்

வாழ்க்கையின் கதைகள் என்று

எனக்குள் விதைத்தவர்கள் –

சாந்தா டீச்சர்,

வசந்தா டீச்சர்.

இவர்கள் மட்டும் அல்ல…

என் வாழ்க்கையில் நான் கண்டு வியந்த

அனைத்து பெண்களுக்கும்…

மனமார்ந்த

பெண்கள் தின வாழ்த்துகள்.


இவன் 

ராஜா க


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக