துரந்தர் 2: லியாரியின் சிம்மாசனமும் ஜஸ்கிரத்தின் கண்களும்!
அந்தப் பழைய கதை: போன பார்ட் ஞாபகம் இருக்கிறதா? ஜஸ்கிரத் சிங் - ஒரு தூக்குத்தண்டனை கைதி. தீவிரவாதத்தை வேரோடு அறுக்க இந்திய அரசு போட்ட 'துரந்தர்' பிளான். அவன் எப்படி ஹம்சா அலி மசாரியாக மாறி லியாரிக்குள் ஊடுருவினான் என்கிற அந்தப் 'பிளாஷ்பேக்'கில் தான் ஆட்டம் ஆரம்பிக்கிறது.
லியாரி உலகம்: ரஹ்மான் பாய் செத்துப்போயிருக்கலாம், ஆனால் லியாரி உலகம் அப்படியேதான் இருக்கிறது. பாகிஸ்தான் அரசியல் சாக்கடை, ISI அதிகாரிகளின் ஆதிக்கம், பலூசிஸ்தான் கிளர்ச்சி என ஒரு சிக்கலான மேப்பை விரித்திருக்கிறார் இயக்குனர். இப்போ ஹம்சா வெறும் ஏஜென்ட் இல்லை, லியாரியின் சிம்மாசனத்தில் அமரும் 'கிங்'.
திரைக்கதை மேஜிக்: படம் செம வேகம். குறிப்பாக அந்த இன்டர்வெல் ட்விஸ்ட் - "அட" போட வைக்கிறது. ஹம்சா மாட்டிக்கொள்வான் என்று ஆடியன்ஸ் நகம் கடித்தால், அங்கே ஒரு ட்விஸ்ட் வைத்து நிமிர வைக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுக்கத் தேடித் தேடிப் பழிவாங்கும் வேட்டைதான்.
நடிப்பு அரக்கன் ரன்வீர்:
ஜஸ்கிரத் சிங்காக ரன்வீர் ஒரு 'நடிப்பு அரக்கன்'. வசனமே தேவையில்லை, அந்த கண்கள் பேசுகின்றன. குறிப்பாக, மனைவியிடம் மனம் திறந்து பேசும் காட்சிகளிலும், இன்டர்வெல்லில் சில நிமிடங்கள் ஜஸ்கிரத்தாக அவர் மாறும் இடத்திலும் மொத்தப் படத்தையும் தன் தோளில் சுமக்கிறார்.
மாஸ் மொமெண்ட்ஸ்:
சஞ்சய் தத்: அஸ்லாமாக மனுஷன் சாத்தானின் மிடுக்கோடு வருகிறார். மிரட்டல்.
மாதவன்: அஜய் தோவல் சாயலில் வரும் அவர், திரையில் தோன்றினாலே தியேட்டரில் 'அப்ளாஸ்' அள்ளுகிறது. முதல் பாகத்தில் 'பாரத் மாதா கி ஜே' சொல்லாதவர்கள் கூட, இந்த பாகத்தில் மாதவனோடு சேர்ந்து கோரஸாகச் சொல்கிறார்கள்!
ராகேஷ் பேடி: சீரியஸான படத்தில் ஒரு சின்ன காமெடி ரிலீஃப். ஆனால் அவர் கொடுக்கும் ட்விஸ்ட்கள் எல்லாம் டைரக்டரின் மாஸ்டர் கிளாஸ் ரைட்டிங்.
கொஞ்சம் டெக்னிக்கல்:
விகாஷ் நவுலகாவின் ஒளிப்பதிவும், சாஸ்வத் சச்தேவின் பின்னணி இசையும் தனி ஆவார்தனம். பாடல்கள் இல்லை, ஆனால் அந்தத் தேவை தெரியாதபடி பிஜிஎம் கவனித்துக் கொள்கிறது. டிமானிடைசேஷன், உபி அரசியல் வாதி சூட்டிங் என நிஜ சம்பவங்களை சினிமாவுக்குள் லாவகமாகப் பிணைத்திருக்கிறார்கள்.
சின்ன குறை:
வில்லன் அர்ஜுன் ராம்பால் - பாவம், முந்தைய பாகத்தில் அக்ஷய் கண்ணா கொடுத்த அந்த ஆழம் இவரிடம் மிஸ்ஸிங். ISI மேஜர் இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருந்திருக்கலாம்.
கடைசி வரி:
"நாங்கள் உங்கள் நாட்டுக்கோ மதத்துக்கோ எதிரானவர்கள் அல்ல, தீவிரவாதத்திற்குத்தான் எதிரானவர்கள்" - இந்த ஒரு வசனம் போதும். ஒரு கம்ப்ளீட் ஆக்ஷன் த்ரில்லர் பார்த்த திருப்தி. தியேட்டரில் மிஸ் பண்ணாதீங்க!
இவன்
ராஜா. க

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக