வெள்ளி, 28 டிசம்பர், 2018

அடங்கமறு

ஜெயம் ரவி நடித்த படத்தில் ஒரு காட்சியை கூட தொலைகாட்சியில் பார்க்காமல்,
திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் அன்று  #தனிஒருவன்
இன்று #அடங்கமறு;

இன்னொரு தனி ஒருவனாக இருக்குமா இந்த அடங்கமறு என்று எதிரபார்ப்பில் அமர்ந்தேன்.

எளிமையான கதை தேர்வு.பெண்களை கற்பழிக்கும் காமுகர்களை கதாநாயகன் எப்படி தண்டிக்கிறான் ? என்பதை விறுவிறுப்பான தன் திரைக்கதையால்  சொல்லி  வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர்.

ஒரு திரைப்படத்தில் கதாநாயகனுக்கு மிக முக்கிய தேவை பலமான வில்லன்கள் அவர்கள்  உதவியுடன் படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது;
கதாநாயகன் பழி வாங்குவதாக சவால் விடுகிறான்.

எப்படி சவாலில் வெல்கிறான் என்பதை நம்மை அறியாமல் ரசிக்க வைக்கிறான்.ஒரு சில லாஜிக் மீறல்கள்,
தமிழ் படம்னா அப்படி தான் இருக்கும்.

கதாநாயகிக்கு பெரிய வேலை இல்லை வந்து போகிறார். அழகம் பெருமாள் அழகாக நடித்திருக்கிறார். பாடல்களுக்கு பெரிய வேலை இல்லை, பின்னனி இசை பலம் தான்.

தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.”ஜெயம்” ரவிக்கு இன்னொரு “ஜெயம்”கொடுக்க முயற்சித்திருக்கிறது இந்த #அடங்கமறு

ரசிகன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக