செவ்வாய், 25 டிசம்பர், 2018

ஐயப்பனும்,கம்யூனிசமும்

ஐயப்பனும்,கம்யூனிசமும்

கம்யூனிசத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கிடையாது என்றாலும் இப்படி இருந்தால் நன்றாக தான் இருக்கும்  என நான் உணர்ந்த இடம் சபரிமலை.

கடந்த 12 வருடங்களாக சபரிமலைக்கு செல்கிறேன். ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு வசதிகளை பக்தர்களுக்கு தருவது கேரள தெவசம் போர்ட்;ஆட்சியில் யார் மாறினாலும் (காங்கிரஸ்,கம்யூனிஸ்ட்) இந்த சேவைகள் தொடர்வது கவனிக்கதக்கது.

அதில் சில
Online ticket booking , plastic free, சுற்றுபுற தூய்மை,நடந்து செல்லும் பாதையில் அமரும் அறை அமைத்தல்,சுத்தமான (தானியங்கி) தண்ணீர்,பேருந்து வசதி (பம்பை-நிலக்கல்).

அது என்ன கம்யூனிசமும்,ஐயப்பனும் ?
தமிழகத்தில் பல கோயில்களுக்கு சென்றிருக்கிறேன், இங்கு பணம் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை,பணம் இல்லாமல் இருப்பவர்களுக்கு ஒரு வரிசை. பெரும்பாலான கோயில்களில் இது தான் நடைமுறை.

சபரிமலையில் இன்று வரை கட்டண தரிசனம் கிடையாது. Online Ticket கூட இலவசம் தான்.  வடிவேலு பாணியில் காவலரிடம் 20₹ கொடுத்தால் 40₹ திருப்பி கொடுத்து ஒடி விடு என்பார்கள். இப்படி கட்டணம் இல்லாததால் தான் என்னவோ, கோயில் உண்டியல்களில் கட்டணம் குவிகிறது. அதை கொண்டு பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்ய முடிகிறது.

குழந்தைகளிடமும்,
வயதானவர்களிடமும் கேரள காவல்துறை நடந்து கொள்ளும் விதத்திற்கு தனி சல்யூட் அடிக்கலாம்.

இந்த வருடம் கேரளாவில் பெய்த கனமழை யில் பாதிக்கபட்ட பகுதிகளில் சபரிமலையும் அடக்கம்.
சேதமடைந்த சாலைகளை எல்லாம் சரி செய்து விட்டார்கள். இது போன்ற  சுவடிலிருந்து இவ்வளவு வேகமாக மீண்டு வருவதெல்லாம் சேட்டன்களால் மட்டுமே முடியும் போல.

பக்தர்களின் வேண்டுதலை தீர்ப்பதால் தான் என்னவோ, வருடா வருடம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடி கொண்டே செல்கிறது. பக்தர்களின் வேண்டுதலை உணர்ந்த ஐயப்பன் தன் திருத்தலைத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கும் தீய சக்திகளுக்கு தக்க பாடம் புகட்டுவார் என்று நம்புவோமாக!

நம்பிக்கையுடன்
ராஜா.க

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக