ஞாயிறு, 12 மார்ச், 2017

மாநில கட்சிகளுக்கு அடித்த எச்சரிக்கை மணியா ??

சமீபகாலமாக இந்தியாவில் உத்திரபிரதேசம்,பஞ்சாப், மணிப்பூர்,மகாராஷ்ட்ரா, கர்நாடகா,ஹரியானா மாநிலங்களில் அந்த மாநிலத்தின் பிராந்திய கட்சிகள் பெரும் பின்னடைவை சந்திந்து வருவதோடு ஆட்சியையும் பறி கொடுத்துள்ளது.

"கழுதையும் தேர்தலில் ஜெயிக்கும் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் நின்றால்.. "என்று இருமாப்புடன் இருந்தவர்கள்,"நான் படுத்து கொண்டே
ஜெயிப்பேன்.. "என்ற சொன்ன திரு.காமராஜ் அவர்களுக்கு எதிராக களம் கண்டார் முதறிஞர் ராஜாஜி.

1967 ல் தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தீய தீர வேண்டும்  என்ற ஒற்ற கொள்கையுடன்  காங்கிரஸ் க்கு எதிராக  18 கட்சிகள் துணையுடன் மெகா கூட்டணி அமைத்தார் திரு.ராஜாஜி.
திரு. அண்ணாதுரை பேச்சு, திரு.கருணாநிதியின் தேர்தல் வியூகம் ,MGR இன் புகழ் என எல்லாம் சேர்ந்து திமுக கூட்டணி 179 இடங்களிலிலும் திமுக 137 இடங்களில் அருதி பெரும்பான்மையுடன் ஆட்சி கட்டிலில் அமர்த்தியது.

சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக ஒரு தேசிய கட்சியை ஆட்சியிலிருந்து இறக்கி ஒரு மாநில கட்சி அரியனை ஏறி திமுக அச்சாரமிட்டது.
இதனை தொடர்ந்து   ஆந்திரா,மகாராஷ்ட்ரா,பஞ்சாப்,
கர்நாடகா,மணிப்பூர்,காஷ்மீர்,பீகார்,மேற்கு வங்கம்,உபி வரை மாநில காட்சிகள் கோலாச்சியது, இதனால்
இந்த மாநிலங்களில் மொழி,கலாச்சாரம் தனித்துவம் பெற்று விளங்கியது.

தேசிய கட்சிகளின் வளர்ச்சியால் பிராந்திய மொழிகளான மராத்தி,ஒடியா,அஸ்ஸாமி,பீகாரி,
ஹரியான்வி,மைதிலி புறக்கணிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் அழிந்தே போனது அங்கேயெல்லாம் இந்தியே பிராதான மொழியாக்க முயற்சிக்கப்பட்டு அதில் பாதி வெற்றியும் பெற்றது.

 அண்ணாதுரை,கலைஞர்,ஜெயா,
மம்தா, பிரகாஷ் சிங் பாதல்,
பால் தாக்ரே,ஓமர் போன்ற வலுவான தலைவர்கள் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளததால் தங்கள் மாநில உரிமைகள் ஒரளவு காத்துவந்தனர்.

இதே போன்று இன்றைய  தலைவர்கள் தங்கள் மாநில கொள்கையையும், மாநில உரிமைகளையும் எப்படி தேசிய கட்சிகளிடமிருந்து பாதுகாக்க போகிறார்கள் இது மாநில  கட்சிகளுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால்.

இந்தியா போன்ற பண்முகம் கொண்ட நாடுகளின் பெருமையே பல மொழி,பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரம் தான் இவற்றை பேணிக்காக்கும் கடமை மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சம பங்குண்டு.

புதன், 8 மார்ச், 2017

மகளிர் தின வாழ்த்துக்கள்

நான்கு சுவரினுள் AC அறையில் அமர்ந்து
ஆண்களுக்கு நாங்கள் சமமானவர்கள் ஈடு இனையற்றவர்கள்
என்று வெட்டி பெண்ணியம்  பேசாமல் ,
பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும்
சென்னை போன்ற நகரங்களில் எந்த முகவரியும் இன்றி
தான் படித்த படிபுக்கு ஏற்ற / ஏற்காத வேலையை தன் குடும்ப
சூழ்நிலை கருதி ஏற்று, பேருந்துகளிலும்,இரயில்களிலும்
படும் சிரமங்களை உள்ளுக்குள்ளேயே புழுங்கி கொண்டு,
அலுவலகத்தில் உள்ள அரசியல்களை அனுதினம் அனுசரித்து,
கவிதை,கற்பனை,காதல் என
இக்காலத்தில் பூக்கும் பூக்களை சூடாமல்
உதட்டில் மட்டும் புன்னகை சூட்டிக்கொண்டு,
 நாளை எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை விதைத்து
நடமாடும் பெண்களே,
நான் கண்ட வேலு நாச்சியார்களே
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
 🙏🏻🙏🏻🙏🏻
Happy Women's Day #HWD

சனி, 4 மார்ச், 2017

நான் ரசித்த டூயட்

ஒரு பாடலின் வெற்றிக்கு  இசை,பாடல் வரிகள்,பாடும் குரல் இந்த மூன்றும் இன்றியமையாதது இதில் ஒன்று சொதப்பினாலும் மற்ற இரண்டும் தன் மதிப்பிழந்துவிடுகிறது.

மேல் கூறிய மூன்றும் இணைந்த பாடல் டூயட் திரைப்படத்தில் இடம்பெறும் மெட்டு போடு பாடல்.

ரகுமானின் துள்ளலான இசையில் தன் trade mark நிறைய வாத்தியங்கள்  குறிப்பாக saxophone 🎷 இசையால் தனி கச்சேரியே  அரங்கேற்றியிருப்பார்.
இப்போது  headphone இல் கேட்பது போல் அல்லாமல் cassette உதவியால் இசை புயலை tapered cad உணர்ந்த தருணம்.
பாடல் வரிகளை சிதைக்காமல்
ரகுமானிசம் விளையாடிய காலம்.

மெட்டுக்கு ஏற்றார் போல் தன்
(வைர)முத்து களால் அலங்கரிதிருபார் கவிஞர். நீயா ? நானா ?
உன் மெட்டா , என் எழுத்துக்களா என்ற ரீதியில் ஆரோக்கியமான போட்டி அதில்
அழகாக  ஒளிந்திருக்கும்.
தமிழின் அழகு, பெருமை,  எதுகை,மோனையுடன் கூடிய
தன்னம்பிக்கை வரிகள் என தன் கொடியை பறக்க விட்டுருப்பார்.
"நம் பூமி மேல புது பார்வை கொள்க"
  "பாறைக்குள்
வேரை போல வெற்றி கொள்க"

இசையையும்,மெட்டையும் ஒரு சேர உள்வாங்கி குரலால் ஒரு தாயாக அப்பாடலுக்கு உயிர் கொடுத்திருப்பார் திரு.பாலு (SPB). ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் முதல் முறை கேட்பது போல் உணர்வை தரும். காலையில் அலுவலகம் செல்கையில்  இந்த பாடலை கேட்கும் பொழுது ஒரு ஊக்கமும் , உற்சாகமும் தரும்.
அன்று முதல் இன்று வரை முணு முணுக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.