திங்கள், 30 மே, 2022

கண்ணே கண்ணாடி

 கண்ணே கண்ணாடி !!!

இந்த கண் கண்ணாடி யை பற்றி எழுத என்ன காரணம் ?  

வருடங்கள் பல உருண்டோயிய பிறகு கண்ணையும் , கண்ணாடியையும் என்னால் பிரித்து பார்க்க முடியவில்லை .

என்ன கண்ணு தெரியாது அது தானே ? 

என்ற பகடி வார்த்தைகள் பார்த்து, கேட்டு.

பழகி , புளித்து போனது என் கண்ணாடி க்கும் , காதுகளுக்கும்.

உன்னை முதன் முதலில் அணியும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது. சொல்ல போனால் உன்னை மறந்தும் கூட சென்றுள்ளேன் அதனால் தான் என்னவோ தெளிவான பார்வை இல்லாமல் சிலரின் உண்மை முகங்களை காண முடியவில்லை. 

நாட்கள் செல்ல , செல்ல என் உடம்பினுள் உள்ள ஒரு உறுப்பாகவே மாறிவிட்டாய். இப்போதும் மறந்து விடுகிறேன். சில நேரங்களில் , நீ என்னோடு இருக்கிறாய் என்று கூட தெரியாமல் ,  ஆழ்ந்த நித்திரை க்கு சென்று விட்டு எழுந்து முகத்தில் தண்ணிர் விடுகையில் தான் உணர்கிறேன். நீ என்னோடு தான் உள்ளாய் என்பதை. பிறகு சிரித்து கொண்டே உன்னை துடைத்து கொள்வேன்.

எனக்கான அடையாளங்கில் ஒருவனாகவே மாறி போனாய் , அந்த கண்ணாடி போட்ட ஒரு தம்பி ஒருவர் வருவாரே ? என்று என் பெயர் கூட தெரியாமல் உன்னை வைத்து எனக்கு கிடைத்த அங்கிகாரம் பல இடங்களில்.

பூமியே தன் சமநிலை யிலிருந்து விலகி ஒரு இடத்தில் அதிக மழை ,அதிக வெயில் கொடுக்கும். மானிடர்கள் எம்மாத்திரம் அவர்கள் தரும் ஒரு வகையான வெளிப்பாடன

கண்ணீர், என் கண்ணங்கள் வரை கூட விடாமல் ஒரு அ(ன்)ணை போல தடுத்து விடுவாய். 

அஃறிணை யான நீ உயர்திணை யை விட உயர்ந்து நிற்கிறாய் பல நேரங்களில்.

கண்ணாடி யுடன் 

ராஜா. க

ஞாயிறு, 22 மே, 2022

பேருந்து பயணமும் திடீர் பற்றும்....

வெகு நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் -தூத்துக்குடி பேருந்தில் செல்லும் வாய்ப்பு நல்கியது. கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. திருச்செந்தூர் இருந்து ஏறியதாலவோ என்னவோ அமர்ந்து செல்ல இடம் கிடைத்தது , பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது.

என்னருகில் அமர்ந்திருந்தவர் கொஞ்சம் வயதானவர் , தம்பி நீங்கள் எழுந்து அமர இடம் கொடுத்தால் நானும் எழுந்திருக்க வேண்டி இருக்கும் அதனால் , என்று இழுத்தார்,

சரி என்று புரிந்து  கொண்டு இருவரும் அமர்ந்திருந்தோம்.

பேருந்து பயணிக்க தொடங்கியது. மூன்று , நான்கு பேருந்து நிறுத்தத்திற்கு பிறகு பேருந்து "காயல்பட்டினம்" வந்தது அங்கு ஒரு பெண் சகோதரி ஏறினார்கள் , அது வரை பேருந்தில் நடப்பதை கண்டுகொள்ளாமல்  அமைதியாக இருந்த அந்த பெரியவர் ,

திடீரென எழுந்து காயல்பட்டினத்தில் எறிய அந்த பாய்அம்மா வை நோக்கி குரல் கொடுத்து நீங்க என் சீட்டில் உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று திடீர் பற்றுடன் அவரை அமர வைத்தார்.

 அப்பெரியவரின் செய்கை அப்போது தான் எனக்குள் தூங்கி கொண்டிருந்த பற்று வெளிக் கொணர செய்தது, நானும் என் அருகில் நின்று கொண்டிருந்த செந்தூரில் இருந்து பயணித்து கொண்டிருந்த குங்கும பொட்டு வைத்திருந்த சீதா லெட்சுமி (இந்த பெயரில் மாற்று கருத்து உள்ளவர்கள் வள்ளி ,காமாட்சி , மீனாட்சி , விசாலாட்சி என்று ஏதேனும் ஒன்றை படித்து கொள்ளுங்கள் ) யை போன்ற சகோதரியை அமருங்கள் என்று எனது இருக்கையை கொடுத்தேன்.

யானைக்கும் சரி மனிதனுக்கும் சரி மதம் பிடித்து விட்டால் பேராபத்து என்று எங்கேயோ படித்தது  நினைவுக்கு வந்தது..

நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் சுற்றமும் , சூழ்நிலையும் தான் தீர்மானிக்கும் போல.

ஜெய்ஹிந்த்

தமிழ் வெல்லும்

ராஜா .க