வெள்ளி, 16 ஏப்ரல், 2021

இளைப்பாருங்கள் சின்ன கலைவானரே

 இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் தமிழ் சினிமாவுக்கு கொடுத்த  சிறப்பான (சிரிப்பு) நட்சத்திரம் நடிகர் விவேக் !!

எழுத்தாளர் பாலகுமாரன் வரிகள் நாம பூமியில் 

வாழ்ந்ததற்கு நினைவாக atleast ஒரு மரமாவது நட்டுட்டு போகனும் என்பார்.

நடிப்போடு நில்லாமல் சமூக பொறுப்போடு பூமிக்கு பல மரங்கள் கொடுத்த இயற்கை ஆர்வளர். 

உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் !!

RIP #vivek

வெள்ளி, 9 ஏப்ரல், 2021

கர்ணன் என்னும் கதாநாயகன்

 கர்ணன் -  இப்படத்தை புரிந்து கொள்வதற்கு பெரிய அளவிலான ஜாதியை பற்றிய புரிதல் எல்லாம் தேவையில்லை. 

கதை -  

பேருந்து நிறுத்தம் கூட இல்லாத  ஒரு கிராமத்தில் வசிக்கும்  (கொடியன்குளம்) குடிமகனாக  பார்த்தால் அம்மக்களின் வலியும் ,வேதனையும் புரியும் அவ்ளோ தான் எனக்கு புரிந்தது.

படத்தில் காட்டப்படும் குறியீடுகள் (கால்களை கட்டிய கழுதை, மீன், வாள்,தலையில்லா புத்தர் சிலை)

இதெல்லாம் என்னவென்று கூட எனக்கு தெரியாது.

அதனால் தான் என்னவோ திரையில் கொடியன்குளம் என்கிற ஊரில், பேருந்தை நிறுத்த தனியார் பேருந்து முதலாளி ஒப்பு கொண்ட பின் அம்மக்கள் மகிழ்ச்சி யடைவதை போல் நானும்  மகிழ்ச்சியடைந்தேன்.

அதற்கு பின்  படத்தில் நடக்கும் காட்சிகள் , வன்முறை   சம்பவங்கள் போன்ற செய்திகளை  அந்நாளில் செய்தித்தாள்களில் படிக்கையில் ஏன் இப்படி காட்டு மிராண்டி தனமாக நடந்து கொள்கிறார்கள் என நினைத்த இலட்சம் பேர்களில் நானும் ஒருவன்.

அந்த வன்முறைக்கான மூல  காரணம் என்ன வென்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

அது போன்ற காரணங்களை திரையில் நாம் காணும் போது நம்மை அறியாமலேயே நாமும் நடக்கும் வன்முறையை ஆதரிக்க வேண்டிவருகிறது.

வன்முறை என்ற வார்த்தை அது நம்மை ஆண்ட பிரிட்டிஷ் காரனுக்கு மட்டும் பொருந்தாது, அதற்கு பின்  என்னை நிமிர்ந்து கூட நீ பார்த்து பேச கூடாது என்று நினைக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் இது பொருந்தும்.

ஒரு வழியான போராட்டத்திற்கு பிற்பாடு கதையின் நாயகன் (கர்ணன்) விருப்பப்படி அந்த ஊர் மக்கள் பள்ளிக்கு செல்கிறார்கள், மேற்படிப்புக்கு கல்லூரிக்கு சென்று, படித்து, வேலைக்கும் செல்கிறார்கள்.

கொடியன்குளம் ஊருக்கு பேருந்து நிறுத்ததோடு நில்லாமல் கொடியன்குளம் என்ற பெயர் பலகை தாங்கிக்கொண்டு  மினி பஸ் அரசு சார்பில் விடப்படுகிறது.

தனுஷ் கர்ணனாக கலக்கியுள்ளார், கூடவே நடிகர் லால் தனுஷை ஓவர் டேக் செய்கிறார் நடிப்பில். கதாநாயகி, தனுஷின் அம்மா, அப்பா,அக்கா மற்றும் யோகிபாபு கதாப்பாத்திரங்கள் கனகச்சிதமாக பொருந்துகிறது. 

சந்தோஷ் நாராயணன் இசை கிராமத்தில் வசித்த ஒருவராகவே மாறியுள்ளார்,

உதாரணம் மஞ்சனந்தி பாடல். 

இப்படத்தை மணிரத்னம், சங்கர்ஏன் ? வெற்றி மாறன் இயக்கியிருந்தால் 1000 Fire  🔥🔥🔥🔥

விட்டிருக்கும் நம் சமூகம்  இயக்குனர் மாரிசெல்வராஜ் (இளம்வயது) என்பதால் என்னவோ படத்தை ஏற்று கொள்ள மறுக்கிறது ஒரு சமூகம். 

எம்.ஆர் ராதா கூறுவது போல் யார் கூறுகிறார் என்று பார்க்காமல் என்ன கூறுகிறார் என்று பார்த்தால் நாடும் மாறும், நாகரிகமும் மாறும்.

மாரி செல்வராஜ் மனமார்ந்த பாராட்டுக்கள் உங்களின் மற்றோரு காவியம் 👌🏼👌🏼👌🏼👌🏼

#கர்ணன் #Dhanush #Santosh #Mariselvaraj

இவன்

ராஜா.க