இன்றைய சமூகத்தில் தலையாய பிரச்சனைகள் பல அதில் ஒன்று திருமணம் தள்ளி போகுதல்.
எல்லாம் சரியாக இருக்கிறது,எல்லா கோயில்களுக்கும் சென்றாயிற்று ஆனாலும் ஏன் தள்ளி போகிறது என்று நினைப்பவர்கள் பலர் அவர்களுக்கான பதிவு தான் இது.
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் வழியில் கண்டியூர் என்னும் ஊரில் அருகே உள்ளது திருமண திருத்தலமான திருவேதிகுடி. இங்கே தம்பதி சமேதமாக வீற்றிருக்கிறார்கள் அருள்மிகு வேதபுரீஸ்வரரும், அருள்மிகு மங்கையர் கரசியும்.
பழமையான கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டபட்டதாக கூறப்படுகிறது. சில புனரமைக்களுடன் உள்ளது; இத்திருத்தலத்தில் பங்குனி மாதம் 14,15,16 ஆகிய 3 தேதிகளில் சூரியனின் கதிர்கள் சிவபெருமானின் மீது விழுகிறது; சூரிய பகவானே பூஜிப்பதாக ஐதீஜம். அமைதியான சூழல் உலாவுவதால் நிம்மதியாக வழிபடலாம். செல்வதற்கு முன் குருக்களுக்கு தொலைபேசியில் சொல்லிவிடுவது ஊசிதம்.
இத்திருத்தலத்திற்கு வருகையில்
2 மாலை,தேங்காய்,பழம்,வெத்தலை பாக்கு மற்றும் 21 சிறிய அகல் விளக்குகள் கொண்டு வந்து நெய் தீபம் இடவும். குருக்கள் அர்ச்சனை செய்து மாலை இடுவார் மாலையும் கழுத்தமாக கோயிலை சுற்றி வரவும்.
அந்த மாலையை வீட்டில் பத்திரமாக வைத்து கொள்ளவும், மணமான பின் அந்த மாலையை இத்திருத்தலத்திற்கு எதிரிலே இருக்கும் குளத்தில் விடவும்.
நீங்கள் நிறைய கோயில்களுக்கு சென்று இருப்பீர்கள் அந்த பட்டியலில் இந்த புனித தலத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு வேளை இங்கு சென்று திருமணம் நடந்துவிட்டால் மகிழ்ச்சி தானே, கண்டிப்பாக நடக்கும் என்றார்கள்; சென்றேன், நடந்தது.
திருச்சிற்றம்பலம்
ராஜா.க
#தஞ்சாவூர் #கண்டியூர் #திரிவேதிகுடி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக