ஆயுத பூஜையும் தயிர் வடையும்
இந்த பதிவு எழுத்தவதற்கு உதவி திருச்செந்தூர் கிருஷ்ணா டாக்கீஸ்.
பள்ளி பருவத்தில் நண்பர்களுடன் இந்த தியேட்டர் செல்வது வழக்கம் அப்போது பெரும்பாலும் மேட்னி ஷோக்கு தான் செல்வோம்.
அர்ஜுன் நடித்த "ஆயுத பூஜை" என்று நினைக்கிறேன். அர்ஜீன் fight, கவண்டர் காமெடி, ஊர்வசி நடிப்பு, ரோஜா பாட்டு , படம் அப்படின்னு போச்சு..
படத்தின் இடைவெளி முடிந்தவுடன் நண்பன் அவசரமாக அழைத்து தியேட்டரில் இருக்கும் கேண்டின் க்கு கூட்டி சென்றான், அண்ணன் தயிர் வடை இரண்டு பிளேட் என்றான்.
தயிரில் சில பல வெங்காயம், பச்சை மிளகாய் துண்டுகள் சகிதம் ஆம வடை (பருப்பு வடை) ஊற வைத்திருந்தார்கள். இரன்டு பிளேட்டுகளில் வடை அது கூடவே தயிருடன் வந்தது.
ஒரு வடை யை கையால் தொட்டவுடன் அப்படியே உதிர்ந்தது, உதிர்ந்த வடை பொறுக்குகளை தயிர் மற்றும் வெங்காயம் உதவியுடன் எடுத்து சாப்பிட பொழுது " அட,அட அட " வடை க்கும் இப்படி ஒரு சுவை உண்டோ என உணர்ந்த தருணம். பிரமாதாமாக இருந்தது..
தயிரின் புளிப்பு, மிளகாய் காரம், வெங்காயத்தின் நெடி, என அனைத்தும் சேர்ந்து அது நாள் வரை உழந்த (மெது)வடை ரசிகனான என்னை பருப்பு வடை ப்ரியணாக்கியது.
சரி இன்னும் இரண்டு வடை கொடுங்க என்றவுடன் காலி ஆயிடுச்சு தம்பி என்றார்.
நண்பனிடம் கோப பட்டேன் ஏன் டா இவ்வளவு சூப்பரா இருக்கு அதிகம் போட்டு வைக்கலாம் என்றேன்.
நண்பனின் பதில் அதெல்லாம் அதிகம் தான் போடுவாங்க
11 மணி காட்சி கோஷ்டி (அண்ணன் மார்கள்) முக்கால்வாசி வடை காலி பண்ணிடுவாங்க , அதுக்காக தான் உன்னை சீக்கிரம் அழைத்து கொண்டு வந்தேன் என்றான். அவனின் smart திட்டமிடல் என்னை நெகிழ செய்தது. படம் சுமாரா இருந்தாலும் வடை சூப்பராக இருந்தது.
இந்த நிகழ்வுக்கு பின் இந்த தயிர் வடைக்காகவே கிருஷ்ணா டாக்கீஸ் என்னை அழைத்தது..
கொசுறு தகவல் இந்த ஆயுத பூஜை படம் தான் பிற்காலத்தில் விஸ்வாசமாக உருவெடுத்தது.
இவண்
ராஜா.க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக