மாட்டுகறியும் மனிதாபிமானமும்...
நான் மாட்டு கறி சாப்பிட மாட்டேன் அதனால் மத்திய அரசின் முடிவை ஆதரிக்கிறேன் என்று நினைப்பவர்கள் இதற்கு மேல் இந்த பதிவை வாசிக்க வேண்டாம்.இது உங்களுக்கானதல்ல.
இந்தியாவின் அழகே பன்முக தன்மை கொண்ட மக்களும் அவர் தம் கலாச்சாரமும்,மொழிகளும் தான். இதை பேணி காத்து ஜன நாயகத்தை வளர செய்வது ஒரு ரகம்.
இவைகளை வைத்தே மக்களிக்கிடேயே பிரிவினையை ஏற்படுத்தி ஜன நாயகத்தை கொலை செய்ய துடிப்பது இரண்டாம் ரகம்.
நாட்டை ஆண்ட காங்கிரஸ் ஆகட்டும் இப்பொழுது ஆளுகின்ற பிஜேபி ஆகட்டும் தன் அதிகார பசிக்கேற்ப விரும்பிய உணவை உட்கொள்ளும்.
மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பான மாடு,ஒட்டகம் இவைகளை இறைச்சிக்காக விற்க கூடாது என்ற சட்டத்தால் பாதிக்கபடுவது பெரும்பான்மை மக்களா ? சிறுபான்மை மக்களா ?
ஒட்டகத்தின் மீது காட்டும் கரிசனத்தை புரிந்து கொண்டாலே இதில் உள்ள அரசியல் என்ன வென்று பளிச்சென்று பல்லை காட்டிவிடும்.
மக்களின் ஒரு பிரிவினரின் நம்பிக்கையை மூலதனமாக்கி அதில் குட்டையை குழப்பி மற்றொரு பிரிவினைரை ஒன்றாக்கி வாக்கு வங்கி அரசியலை பல படுத்துவது தான் ஒரே குறிகோள் இன்றி உயிர்களின் மீது கரிசனம் எல்லாம் நகைச்சுவை பேச்சு தான்.
சரி இந்த சவாலை எதிர்கொள்வது எப்படி?
நம் குறைகளை எப்படி கோயில்களிலும்,தேவாலயங்களிலும்,தர்க்காக்களிலும் முறையிடுவோமோ அது போன்று ஜனநாயகத்தில் ஏற்படும் குறைபாடுகளை முறையிட மக்கள் ஏற வேண்டிய கோயில் நீதிமன்றமே.
நம் நாட்டில் அரசுக்கு எதிராகவும் நல்லது கெட்டதை எடுத்துரைக்கவும் நீதி துறையும்,நீதி அரசர்களும் இன்னமும் இருக்க தான் செய்கிறார்கள்.
ஜனநாயகத்திற்கு விடுத்த சவாலை ஜனநாயக ரீதியில் சென்று வென்று காட்டுவோம்.
இப்படிக்கு
இந்தியன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக