சமீபத்தில் நண்பர் ஒருவருடன் காரில் பயணிக்க நேர்ந்தது.
சுங்க சாவடி நெருங்குகையில் ஒவ்வொரு வண்டியாக வரிசையாக நுழைவு கட்டணம் செலுத்தி கொண்டிருக்கையில் நண்பரின் வண்டியை தீடீரென்று மற்றொறு வண்டி முந்தி செல்ல முயன்றது.
நண்பருக்கு சிறிது கோபம் வந்தது; வரிசையாக சென்று கொண்டிருக்கையில் ஏன் இப்படி முந்த நினைக்கிறாய் என்று ?
சிறிய வார்த்தை கல கலபிற்கு பின் எங்கள் பின்னே தான் அந்த வண்டியும் வந்தது; முந்த நினைத்த நபருக்கு 25-30 வயது இருக்கும்.
மிஞ்சி போனால் 2 முதல் 3 நிமிடம் தாமதமாகும் அதற்கு கூட பொறுமையில்லாமல் வேகமாக பயணிக்க நினைக்கிறோம்.
இப்பொழுதெல்லாம் பொறுமையின்மை, சகிப்பு தன்மை இதெல்லாம் குறைந்து கொண்டே போகிறது. இது போன்ற சம்பவம் நடிகர் அமீர்கானுக்கு நடந்து இருக்கலாம் அதனால் அவர்
"சகிப்பு தன்மை" வார்த்தையை உபயோகத்திருக்கலாம்.
இந்த விஷயத்தை அவர் ஏதோ "மோடி" அரசை தான் குறை கூறுகிறார் என்று மீடியாக்கள் கூக்குரலிட , வழக்கம் போல "தேச பக்தாஸ் "பால் போல பொங்கியேவிட்டார்கள்.
இக்காலத்தில் யார் இந்தியாவை ஆண்டாலும், இது உண்மை தான் மக்களின் "சகிப்புதன்மை" குறைந்து விட்டது.
இப்படிக்கு..
பொதுஜனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக