புதன், 5 பிப்ரவரி, 2025

நம் உணவில் நம் எண்ணங்கள் பிரதிபலிக்கின்றன!

 ஒரு முறை மஹாத்மா (காந்திஜி)

மஹாத்மா காந்திஜி ஒரு நாளில் கனவில் ஒருவரை கொலை செய்கிறார். சட்டென்று விழித்து, அந்தக் கனவு அவரை மிகவும் வருத்தப்பட வைத்துவிடுகிறது.

அவர் ஆழமாக சிந்திக்கத் தொடங்குகிறார்—"நமக்கு இப்படிப் பட்ட எண்ணங்கள் (கொலை செய்வது போன்றது) கனவில் எப்படி வருகிறது?" என்கிற கேள்வி அவரை தொந்தரவு செய்கிறது.

அதன் பிறகு, சிறையில் இருக்கும் வார்டனை அழைத்து, "நேற்று இரவு எனக்குச் சமையல் செய்தது யார்?" என்று கேட்கிறார்.

வார்டன் பதிலளிக்கிறார், "வழக்கமாக உங்களுக்கு சமையல் செய்வவர் சமைக்கவில்லை. அவருக்கு பதிலாக, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தான் உங்களுக்குச் சமைத்தார்."

இதைக் கேட்டவுடன், மஹாத்மாவுக்கு புரிகிறது—உண்ணும் உணவு மட்டுமல்ல, அதை யார் தயாரிக்கிறார்களோ, அவர்களின் எண்ணங்கள், மனநிலை, உணர்வுகள் கூட அந்த உணவில் பிரதிபலிக்கிறது.

அதனால் தான் சிலர் வெளியில் சாப்பிடாமல் வீட்டிலேயே சாப்பிட விரும்புகிறார்கள். உணவை நேசத்துடன், மனச்சாந்தியுடன், நன்றியுடன் சமைக்க வேண்டும். சினிமா நடிகர் சூப்பர் ஸ்டார் பேட்டை படத்தில் சொல்வது போல—"Love பண்ணி சமைக்கணும்!"

நாம் உணவை சாதாரணமானதாக நினைக்கலாம், ஆனால் உணவைப் பற்றிய நம்முடைய எண்ணங்களும், அதைத் தயாரிக்கிறவரின் எண்ணங்களும் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்புடன், ஆரோக்கியத்துடன் சமைக்கவும், உணவும்!

#PositiveVibes

#FoodEnergy

#MindfulEating

#SpiritualWisdom

#GandhijiThoughts

#CookWithLove

#GoodVibesOnly

#HealthyMindset

#FoodForThought

#LoveAndPeace

செவ்வாய், 4 பிப்ரவரி, 2025

நதியே நதியே – சிலேடை கலந்த கவியழகு

 நதியே நதியே – 

சிலேடை கலந்த கவியழகு

தமிழ் இலக்கியத்தில் சிலேடை என்பது ஒரு முக்கியமான இலக்கண உத்தியாகும். இது பொதுவாக இரண்டு பொருட்களின் ஒற்றுமைகளை ஒப்பிட்டு அழகாகக் கூறும் பாங்காகும். சிலேடை நகைச்சுவை சார்ந்தாலும், அதை கலாபூர்வமாக பயன்படுத்தினால், மிகச் சிறந்த கவிதையாக மாறும்.

இதைத் தழுவியதுதான் ரிதம் திரைப்படத்தில் இடம்பெற்ற "நதியே நதியே" பாடல். வைரமுத்து எழுதிய இந்த பாடலில், நீரும் பெண்ணும் ஒன்றாக ஒப்பிடப்பட்டுள்ளன. நீரின் இயல்புகளும், பெண்மையின் தன்மைகளும் ஒருங்கே இணைந்து கவிதையாக மலர்கின்றன.

நீரும் பெண்ணும் – ஒற்றுமையின் சிலேடை

பெண்ணின் உணர்வுகளையும், நீரின் இயல்புகளையும் கவிஞர் சிலேடை மூலம் வெளிப்படுத்தியிருப்பதை பார்க்கலாம்:

"காதலியின் அருமை பிரிவில்,

மனைவியின் அருமை மறைவில்,

நீரின் அருமை அறிவாய் கோடையிலே!"

இங்கு "காதல்" பிரிந்தவுடன் அதன் மதிப்பு பெருகும், "மனைவி" இல்லாதபோது அவள் அருமை தெரியும், "நீர்" கோடையில் தான் மிக அவசியமாக புரியும் என்கிற கவியழகு தென்படுகிறது.

"வெட்கம் வந்தால் உரையும்,

விரல்கள் தொட்டால் உருகும்,

நீரும் பெண்ணும் ஒன்று, வாடையிலே!"

இங்கு பெண்ணின் வெட்கமும் நீரின் பனிக்கனலும் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், நீர் கையால் தொடும்போது உருகுவதுபோல், பெண் காதலனின் அணைப்பில் உருகுவாள் என்பதே வைரமுத்து அவர்களின் 

நுண்ணிய கருத்து!

நதி – பெண்மையின் உருவகம்

பெண்களின் அழகை நதியின் வடிவத்தோடு ஒப்பிட்டிருக்கும் வரிகள்:

"வண்ண வண்ணப் பெண்ணே,

வட்டமிடும் நதியே,

வளைவுகள் அழகு – உங்கள் வளைவுகள் அழகு!"

நதியின் வளையங்களைப் போல, பெண்களின் சாயலும் அழகாக இருக்கிறது என்பதே இதன் பொருள்.

"மேடு பள்ளம் மறைத்தல்,

மெல்லிசைகள் படைத்தல்,

நதிகளின் குணமே –

அது நங்கையின் குணமே!"

இங்கு "நதி" மேடு பள்ளங்களை சமன்படுத்தும் தன்மை கொண்டது போல, "பெண்" வாழ்க்கையின் சவால்களை சமாளிக்கும் திறன் கொண்டவளாக இருப்பாள் என்று சொல்லப்படுகிறது.

ரிதம் படத்தின் பாடல்கள் – ஐம்பூதங்களின் வடிவம்

ரிதம் திரைப்படம் வெறும் ஒரு காதல் கதை மட்டுமல்ல. இதில் உள்ள ஐம்பூதங்களின் (நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம்) ஒத்திசைவு பாடல்களில் வெளிப்பட்டுள்ளது.

இந்த படம் ஒரு கவிதைத் தொகுப்பைப் படிப்பதை போன்ற ஒரு உணர்வை தரும்.

காதல் ஒரு ஹைக்கூ – கார்த்திக் & சித்ரா

ரிதம் திரைப்படத்தில் கார்த்திக் & சித்ரா இடையே மலரும் காதல், மிக எளிய ஆனால் ஆழமான உணர்வுகளைக் கொண்டிருக்கும். அது ஒரு ஹைக்கூ கவிதை போல சுருக்கமாகவும், மனதை தொடுவதாகவும் இருக்கும்.

நதியே நதியே பாடல் பெண்ணின் தன்மையை, நீரின் இயல்புடன் இணைத்து சிலேடையாக சொல்லும் மிக அழகிய கவிதையாகும். இதனைத் தான் வைரமுத்துவின் "வைர" வரிகள் என அழைப்போம்.

தமிழ் பாடல்கள், இலக்கியத்தின் ஒரு அழகிய வடிவம் என்பதை ரிதம் படம் ஒவ்வொரு பாடலிலும் நிரூபிக்கிறது. கவிஞரின் வார்த்தைகளில் உயிரோட்டமும், கலைநயமும் கலந்துள்ளதால், இது எப்போதும் மனதில் நிற்கும் ஒரு முத்து!

@Vairamuthu 

@itsme_vasanth 

#Tamil #TamilLiterature #TamilPoetry #TamilLanguage #TamilCulture #TamilMusic

#RhythmMovie #Vairamuthu #TamilSongs #TamilLyrics #EvergreenSongs #TamilCinema

#Trending #Viral #MusicLovers #PoetryLovers #TamilTrend #TamilQuotes #SongLyrics

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2025

Pushpa2TheRule   review

 #Pushpa2TheRule   

🔥🔥🔥

தலைகீழா தொங்கியே intro Pushpa Rule அங்கேயே ஆரம்பம்!

CM, புஷ்பா கூட எடுக்க தயக்கம்? தன் கூட போட்டோ எடுக்கும் நபரை Pushpa CM ஆக்கிடுவார்! 💥 அது தான் Pushpa ATTITUDE!

MASS OVERLOAD!

Fight scene’ல Allu Arjun நீல கலர் – பின்னாடி அஞ்சு தலை பாம்பு – பெருமாள் அவதாரம்! 💥 Frame ஒவ்வொன்றும் FIRE! Director 🔥

பக்கா COMMERCIAL BLAST!

✅ Sentiment ✅ Song ✅ Action – Allu Arjun-ன் Mass Level Vera Maari!

• Body Language – Superstar Range! 🔥

• Dialogue Modulation – Goosebumps Overloaded! 🔥

• Sentiment – Theatre Full Feel! 😢🔥

CM கூட photo எடுத்ததும் படம் முடிஞ்சுட்டதா? 🤯 இல்லவே இல்லை ,

அடுத்த 30 நிமிஷம் PURE FIRE!

பெண்களுக்கு எதிராக கை வைத்தால் Hero Rudra Thandavam! 👊

Justice கிடைக்கும், அதுவும் Pushpa Style-ல்! 💥

3.30 மணி நேர படம் – ஆனா ஒரு SECOND கூட போர் அடிக்காது! Editing கொஞ்சம் Sharp பண்ணலாமே!

#Pushpa2    #Pushpa2TheRule    #AlluArjun    🔥 @NetflixIndia

திங்கள், 27 ஜனவரி, 2025

திரு. மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: ரிவியூ

 திரு.

மாணிக்கம் – ஒரு உணர்ச்சிப் பூர்வமான திரைப்படம்: 

பஸ் ஸ்டான்டில் புத்தக கடையுடன் லாட்டரியையும் சேர்த்து விற்கும் ஒரு நேர்மையான மனிதர், அவரின் வாழ்க்கையும் குடும்பத்தின் சவால்களும், மனிதரின் உள்ளம் வருடும் கதைதான் திரு. மாணிக்கம்.

கதை சுருக்கம்:

இக்கதையின் மையத்தில் நிற்கும் நாயகன், ஒரு சின்ன லாட்டரி கடை நடத்தி, தனது இரண்டு பெண் குழந்தைகளையும், மருத்துவ சிகிச்சைக்காக போராடும் மகளையும், தனது கடன் சுமைகளையும் சமாளிக்கிறார்.

ஒருநாள், கடனாக ஒரு பெரியவருக்கு லாட்டரி சீட்டொன்றை தருகிறார். அதிர்ச்சியாக அந்த சீட்டுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுகிறது. ஆனால் அந்த பெரியவரின் மகள், வரதட்சணை பிரச்சனை காரணமாக தனது பிறந்த வீட்டிற்கு திரும்பி வரும் சூழல், கதையில் நெகிழ்ச்சியான திருப்பங்களை உருவாக்குகிறது.

நேர்மையான லாட்டரி கடைக்காரர், பரிசு பெற்ற லாட்டரி சீட்டை அந்த பெரியவரிடம் கொடுக்க செல்லும் போது, அவரது குடும்பத்தினரும், காவல் துறையும் தங்களின் செல்வாக்குடன் அவரை தடுக்க முயல்கிறார்கள். இந்நிலையில், அவர் நேர்மையுடன் நிலைத்திருக்க எடுத்த முடிவுகள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழவைக்கும்.

இக் கதாப்பாத்திரத்துக்கு சமுத்திரக்கனியை விட யாரும் சரியாக பொருந்த முடியாது. அவரது நடிப்பு, பார்வையாளர்களை அவரது கதாபாத்திரத்துடன் ஒன்றி வாழ வைக்கிறது. குறிப்பாக, அவர் காட்டும் நேர்மை படம் பார்க்கும் நம்மையும் அவருடைய குடும்ப உறுப்பினர் போலவே அவர் மீது கோபப்பட வைக்கிறது. அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் நன்கு அமைக்கப்பட்டுள்ளது.

ஏன் இவ்வளவு நேர்மை குசும்பு க்கு காரணம்?

அழுத்தமான fLashback, அதுக்கு உயிர் கொடுத்திருப்பார் "நாசர்" அவரின் பரவசமான நடிப்பு, கதை க்கு உயிர் கொடுக்கிறது.

மனித உணர்வுகளை சித்தரிக்கும் கலை:

இத்தகைய திரைப்படங்கள் மனிதர்களின் உணர்வுகளைச் சித்தரிக்கின்றன. உறவுகள், நேர்மை, மனித உணர்வுகளை மனதிற்கு பதியும்படி கொண்டுவந்துள்ளது திரு. மாணிக்கம்.

என்னை கவர்ந்த அம்சங்கள்:

1. நேர்மையின் மீது அழுத்தம் கொடுக்கும் கதை.

2. கதாபாத்திரங்களில் வாழ்ந்து காட்டும் சமுத்திரக்கனியின் நடிப்பு.

3. நாசரின் ஃபிளாஷ்பேக் கதைக்கு கொடுக்கும் காட்சி.

4. நுணுக்கமான உணர்வுகளை சித்தரிக்கும் மனதை வருடும் பின்னணி இசை.

5. படம் சுபமாக முடிந்து Feel Good அனுபவத்தைக் கொடுப்பது.

அந்த நேர்மையும் கண்ணியமும் உள்ள மனிதர்கள் இன்றும் இருக்கின்றனர் என்பதற்கு திரு. மாணிக்கம் ஓர் அழுத்தமான சாட்சியம்.

Zee5 OTT-யில் உள்ளது.

ஓர் feel Good movie படங்களை விரும்புபவர்கள் தவறாமல் பாருங்கள்!

#ThiruManickam #Zee5 #Tamilmovie @thondankani 👏🏻👏🏻👏🏻

வெள்ளி, 24 ஜனவரி, 2025

தலைவாசல் – 90களின் கல்லூரி கதை

 தலைவாசல் – 90களின் கல்லூரி கதை

தலைவாசல் திரைப்படம் 90களில் கல்லூரி வாழ்க்கையை கண் முன்னே கொண்டுவரும் ஒரு சிறந்த திரைப்படம். கமல்ஹாசனின் நம்மவர் படத்திற்கு முன்னோட்டமாக படம் இது, ஒழுக்கக் கேடு நிறைந்த கல்லூரியின் மாற்றத்தை மையமாகக் கொண்டது.

கதைக்களம்:

சென்னையின் நாச்சியப்பன் கல்லூரி ஒழுக்கக் கேடுகளால் கஞ்சா, அடிதடி, தவறான வழிகளில் சென்ற மாணவர்களை திருத்த முதல்வராக வரும் SP.பாலசுப்ரமணியம் அவர்களின் கதாபாத்திரம் முக்கியம்.

நாயகன்:

ஆனந்த் என்றாலும், கதையின் ஆதாரமாக இருக்கும் SP.பாலசுப்ரமணியம் வலிமையான பாத்திரமாக அசத்துகிறார்.

நாயகி:

சில படங்களில் புகழ்பெற்ற சிவரஞ்சினி, தன் இனிமையான நடிப்பால் மையம் கவர்ந்தார்.

வில்லனாக நாசர்:

நாசர் அவர்கள் "பீடா சேட்" கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்துள்ளார். நெல்பொலியனின் நிச்சயம் பாராட்டத்தக்க பங்களிப்பு இதில் உள்ளது.

கானா பாடல்களின் வரவேற்பு:

பாலபாரதியின் இசையில் 

கானா பாடல்கள் தமிழ்சினிமாவில் முதல் முதலாக முத்திரையிட்டது. கானா பாபு வாக வாழ்ந்து இருப்பார் நடிகர் விஜய் அவர்கள் இதன் பின்னர் தான் "தலைவாசல் விஜய்" என அழைக்கப்பட்டார்.

இயக்குனர் செல்வாவின் வெற்றி:

கல்லூரி மாணவர்களின் சமூகச் சிக்கல்களை துல்லியமாக வெளிப்படுத்திய இந்த படம் கமர்ஷியல் சினிமாவின் வணிக வெற்றி மட்டுமல்லாமல் ஒரு நினைவுப்படமாகவும் திகழ்கிறது.

தலைவாசல் – ஒரு கல்லூரி வாழ்க்கை, சமூகப் பிரச்சினைகள், அரசியல், மற்றும் எமோஷன்களின் சிறந்த கலவையாக தமிழ் சினிமாவின் மைல்கல்லாக அமைந்துள்ளது.

#தலைவாசல்

#தலைவாசல் #Thalavaasal #90களின்_நினைவுகள் #தமிழ்_திரைப்படம் #கல்லூரி_வாழ்க்கை #SPB #நாசர் #கானா #தமிழ்சினிமா #Nostalgia #Kollywood #ClassicMovies #TamilHits #TamilBloggers #CinemaReview 

#MovieReview #TamilNadu #TamilCulture #CinemaNostalgia #TrendingTamil

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

 "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ் 

1984 இல் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள Union Carbide India Limited (UCIL) தொழிற்சாலையில் ஏற்பட்ட கோர விபத்து அனைவரின் மனதிலும் நிற்கும். Methyl Isocyanate (MIC) காற்றில் கலந்து அப்பகுதி மக்களை ஒய்வு எடுக்காமல் தாக்கியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தனர். அந்த கொடிய நாளில், போபால் ரயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டரின் துணிச்சலான செயல் பல உயிர்களை காப்பாற்றியது. இதையே மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது "தி ரயில்வே மேன்" வெப் சீரிஸ்.

இந்த கதையின் மையமாக ஸ்டேஷன் மாஸ்டர் கதாபாத்திரத்தில் கே. கே. மேனன், ஜெனரல் மேனேஜராக ஆர். மாதவன், திருடனாக திவ்யேந்து, துடிப்பான இளைஞனாக பபில் கான் ஆகியோர் தங்கள் நடிப்பால் கவர்கிறார்கள் . இந்திய ரயில்வே நெட்வொர்க்கின் அமைப்பு, அதை இயங்கச் செய்யும் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, இன்றும் உலகை பிரமிக்க செய்கிறது. இந்த வெப் சீரிஸ் பார்க்கும் போது நாம் உணர்வோம்.

கதை உணர்ச்சிப்பூர்வமாக செல்கிறது. ரயில்வே அதிகாரிகளின் சாதனைகள் மட்டுமல்ல , கலவரக் குழுவிடமிருந்து சீக்கியர்களை காப்பாற்றும் மனிதர்களின் கதை நம்மை நெகிழச் செய்கிறது. அதேபோல், MIC விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ உதவி செய்ய வரும் ஜெர்மன் விஞ்ஞானி மற்றும் சில அதிகாரிகளின் முயற்சிகள் இன்னும் மனிதநேயத்தின் சிறப்பை எடுத்துக்காட்டுகின்றன.

இந்த வெப் சீரிஸ் சமூகத்தின் நல்லவர்களால் தான் இன்றும் மனிதகுலம் தொடர்வதை மீண்டும் நினைவூட்டுகிறது. ஒரு வெற்றி மிக்க திரைக்கதை, சிறந்த நடிப்பு, உணர்ச்சிமிக்க காட்சிகள்.

இந்தக் கதை முடிந்தவுடன், ரயில்வே துறையின் பெருமை நம் மனதில் உயர்ந்து நிற்கும்.

இந்த வெப் சீரிஸை கண்டிப்பாக பார்க்கலாம் 

available in #Netflix 

“தி ரயில்வே மேன்” - ஒரு மனிதநேய பயணம்!

#Netflix #Therailwayman

செவ்வாய், 21 ஜனவரி, 2025

கவியரசன் வைரமுத்துவுக்கு உரைத்த அற்புதமான பாராட்டுகள்: தமிழின் பெருமை, கவிதையின் சக்தி!

 நான்கூட ஒரு நூலகப் பறவைதான்; இல்லையென்றால் அரிவாள்களோடும் கடப்பாரைகளோடும் கழிந்திருக்கும் என் வாழ்வு"// எனும் உங்கள் (வைரமுத்து வின்)

வார்த்தைகள், உங்கள் கவி ஆற்றலின் சிகரத்தை வெளிப்படுத்துகிறது.

வேல் கம்பும், வீச்சு அருவாவும் என வெற்றியின் அடையாளமாக வாழ்ந்த முன்னோர்களின் பாதையில், 

கூர்மையான பேனா கொண்டு நீங்கள் உருவாக்கிய கவிதைகளும் பாடல்களும் தமிழின் வீரத்தையும் அழகிய சுவையும் புதிய வடிவில் காட்சிப்படுத்துகிறது.

கள்ளிக்காட்டு கம்பனே, உங்கள் கற்றல், சிந்தனை, எழுத்து இவையனைத்தும் எங்களை அசர வைத்தது மட்டுமல்ல, தேசிய விருதுகள் மூலம் உலகத்துக்கும் தமிழின் வலிமையை வெளிப்படுத்தியது.

உங்கள் வார்த்தைகள் தட்டுப்பாடில்லா கோடுகளாக எங்கள் மனதை ஆளுகிறது. நீங்கள் என்றும் கவியுலக சிகரமே @Vairamuthu! ❤️👏🙏🏻

#Vairamuthu

இவன் 

ராஜா. க 